ஆழ்கடலின் அடியில் கட்டுரை

aalkadalin adiyil katturai

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் அதிகமான பகுதி கடல் பரப்பினாலேயே சூழப்பட்டுள்ளது. அவ்வாறான கடல் பரப்பானது பல்வேறு விந்தைகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளன.

அந்த வகையில் ஆழ்கடலின் தன்மைகளை பார்த்தால் பல்வேறு தாவரங்கள், பல வண்ண நிற மீன்கள், மலைகள், பளபளப்பு முருங்கை கல் பாறைகள் மற்றும் மூழ்கிய கப்பல்கள் போன்ற அதிகமான விடயங்கள் நிறைந்த ஒன்றாகவே ஆழ்கடல் பகுதி காணப்படுகின்றன.

ஆழ்கடல் பகுதியில் ஒரு கற்பனையான நீர்மூழ்கி கப்பலில் இடம்பெறும் புதினங்களை எடுத்துக்காட்டுவதாகவே இந்த ஆழ்கடலின் அடியினில் எனும் கதை பகுதி காணப்படுகின்றது.

ஆழ்கடலின் அடியில் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கதைச்சுருக்கம்
  • நீர்மூழ்கி கப்பல் பற்றிய வர்ணனை
  • கடலின் சித்தரிப்புகள்
  • முடிவுரை

முன்னுரை

அறிவியல் கண்டுபிடிப்புகள் பல உலகிற்கு அறிமுகமாக முன்னரே அவை பற்றிய கருத்துக்களை தன்னுடைய புதினங்களில் கொண்டு வந்த ஒருவரே ஜூன்ஸ் வெர்ன் என்பவராவார். இவருடைய புதினங்களில் முக்கியமான ஒன்றாகவே “ஆழ்கடலின் அடியில்” எனும் தமிழ் மொழிபெயர்ப்பு கதை காணப்படுகின்றது. இக்கதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கதைச்சுருக்கம்

கடலுக்கு அடியில் செல்வோரை உலோகத்திலான ஓர் உடம்பு கொண்ட விலங்கு தாக்கியதாகவும் அவ்விலங்கு பற்றி அறிவதற்காக அமெரிக்காவிலிருந்து போர்க்கப்பல் ஒன்றில் ப்ராகட், பியரி, நெட், கான்சீல் போன்ற வீரர்களை உள்ளடக்கிய குழு ஒன்று சென்றதாகவும்,

மூன்று மாத தொடர் பயணத்தின் விளைவாக அந்த உலோகத்தாலான மிருகம் இவர்கள் சென்ற கப்பலை தாக்கி இவர்களை சிறைப்பிடித்த பின்னர் அது மிருகம் அல்ல ஒரு நீர் மூழ்கிக் கப்பல் என தெரியவருவதாகவும்,

பின்னர் பெரிய ஒரு சுழற்சியில் இக்கப்பல் சிக்கியமையால் அதிலிருந்தவர்கள் தப்பித்துக் கொண்டதாகவும் ஆனால் இக்கப்பல் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை எனவும் இந்த புனைக்கதை காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பல் பற்றிய வர்ணனைகள்

ஆழ்கடலின் அடியில் எனும் கதையில் “உலோகத்திலான ஒரு விலங்கு” என எண்ணப்பட்ட மிருகம் பின்னர் அது ஒரு நீர்மூழ்கி கப்பல் என கண்டறியப்பட்டதோடு அதன் பெயர் நாட்டிலஸ் எனவும் அக்கப்பலின் தலைவர் நெமோ எனவும் அறியப்படுகின்றது.

அத்தோடு பியரி என்பர் இக்கப்பல் பற்றி நெமோவிடம் வினவுகையில் அவர் இக்கப்பலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவிகள் காணப்படுவதாகவும் பெரிய பெரிய நீர் தொட்டிகள் காணப்படுவதனால் அதனை நிரப்பும் போது கப்பல் அடியில் சென்று நீர் வெளியேறும் போது கப்பல் மேலே வருவதாகவும்,

மற்றும் அவ்வாறு சில நாட்களுக்கு ஒருமுறை கப்பல் மேலே வரும்போது சுவாசிக்க தேவையான காற்றினை நிரப்பிக் கொள்வதற்கான பைகளும் இக்கப்பலில் காணப்படுவதாக அவர் கூறியதன் மூலம் இந்த நீர்மூழ்கி கப்பல் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.

கடலின் சித்தரிப்புகள்

“ஆழ்கடலின் அடியில்” எனும் புகழ்பெற்ற புனைக்கதையில் கடல் பகுதியில் பல வண்ண மீன்கள், மலை முகடுகள், போர்க் கப்பல்கள், அட்லாண்டிஸ் எனும் நகரத்தின் இடிபாடுகள், கடல் தாவரங்கள் மற்றும் தென் துருவத்தில் கடச்சிங்கம், பென்குயின், ஆக்டோபஸ் போன்றன காணப்படுவதாக குறிப்பிடப்படுவதோடு,

நீர்மூழ்கி கப்பலில் பயணிக்கும் போது கடலுக்கு அடியில் முத்து, சிப்பி சசேகரித்துக் கொண்டிருந்த ஒரு இந்திய சுழியோடி ஒருவரை சுறா மீன் ஒன்று தாக்கிக் கொண்டிருக்கையில் இக்கப்பலின் தலைவரான நெமோ நீளமான வாள் ஒன்றினால் சுறா மீனைத் தாக்கி அந்த மனிதரை காப்பாற்றினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமையானது ஆழ்கடலின் அதிசயங்களை கண் முன்னே காட்டுவதாகவே அமைகின்றது.

முடிவுரை

“ஆழ்கடலின் அடியில்” எனும் புனைக்கதையின் இறுதியில் நாட்டிலஸ் நீர்மூழ்கி கப்பலானது பாரியதொரு சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கிறது.

ஆகையால் அக்கப்பலில் இருந்த அனைவரும் அதிலிருந்த சிறிய படகின் மூலம் தப்பித்து நோர்வே நாட்டின் கடற்கரையை அடைந்ததாகவும் நாட்டிலஸ் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி எவ்விதமான தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்றும் இக்கதை முடிவுருவதனைக் காணலாம்.

இந்த கதையின் போக்கானது வாசகர்களினை கவரும் வகையிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில் வாசகர்கள் செயற்படும் பங்கிலும் எழுதப்படுள்ளமையானது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

You May Also Like:

கணக்கும் இனிக்கும் கட்டுரை

வாக்களிப்பதன் முக்கியத்துவம் கட்டுரை