இணையம் என்றால் என்ன

இணையம்

இணையம் என்றால் என்ன

இணையம் இணைப்பின் வழியே இன்றைய உலகம் நம் கைகளில் உலாவும் ஒரு சிறந்த தொழிநுட்பமாகத் திகழ்கின்றது. இன்று மனிதனின் அன்றாடச் செயற்பாடுகள் முதல், அனைத்துச் செயற்பாடுகள் வரையும் இணையத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படத் தொடங்கி விட்டான் என்றால் அதுமிகையல்ல.

இணையம் என்றால் என்ன

உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான கணினிகளின் இணைப்பின் தகவலே இணையம் ஆகும்.

இணையத்தின் நன்மைகள்

இணையம் இல்லாமல் உலகம் இயங்காது. இணையம் நமக்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் வழங்குகின்றது. சுலபமாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் இணையம் பெரிதும் உதவியாக உள்ளது.

ஒரு தனி நபரின் தகவல்களைத் தவிர பொதுவான தகவல்கள், வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் போன்ற பல தகவல்களையும் இணையத்தின் மூலம் அணுகுவது இலகுவாகும்.

தொடர்பாடலுக்கு இணையம் பயன்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் வாழும் உறவுகளுடனோ அல்லது நாடு விட்டு நாடு வாழும் உறவுகளுடனோ தொடர்பு கொண்டு அவர்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவோ, ஆடியோ அல்லது வீடியோ மூலமாகவோ உரையாடி மகிழவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இணையம் பயன்படுகிறது.

பன்முகத்தன்மையை ஆராய இணையத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அதாவது மனித இனம் என நம்மை நாம் பொதுமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றாலும், மதம், இனம், மொழி, நாடு, ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள் என பலதரப்பட்ட மக்களும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருப்பர். இந்தப் பன்முகத்தன்மையில் எது சிறந்தது என ஆராய இணையம் உதவுகின்றது.

கருத்துச் சுதந்திரம் கிடைக்கின்றது. பலதரப்பட்ட மனிதர்கள் வாழும் இப்புவியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவர்களது கருத்துக்களைத் தடை இல்லாமல் பகிர்வதற்கும் இணையம் பங்களிப்புச் செய்கின்றது. கற்றல், கற்பித்தல் பாதையில் இணையத்தின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இணையத்தில் பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை கணிப்பொறிக்குள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றில் சில முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. எனினும் சில மென்பொருட்களை சில நாட்டளுக்கு மட்டும் இலவசமாகப் பயன்படுத்துவதாகவும், சிலவற்றினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதாகவும் இருக்கும்.

பெண்களுக்கு எதிரான இணையக் குற்றங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்
இன்றைய காலச்சூழலில் இணையத்தின் மூலம் பலவிதமான குற்றச் செயல்கள் இடம்பெறுவதனைக் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிராகப் பல இணைக் குற்றங்கள் நடந்தேறுவதனைக் காணலாம்.

அவ்வகையில் வெறுப்புப் பேச்சுக்கள், பொது வெளியில் கண்ணிய குறைவாக பேசுதல், பாலியல் சுண்டல்கள், அச்சுறுத்தல், கொலை மிரட்டல், தனிநபர் தகவல்களை திரட்டுதல், புகைப்படங்களை தவறாகச் சித்தரித்தல், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுதல், சமூக வலைத்தளங்களை முடக்குதல் போன்ற பல வகையான இணையக் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக இடம் பெறுகின்றன.

மேலும் இணையக் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய அளவிலான வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டங்கள் வாயிலாக இணையதள குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநல ஆலோசனை வழங்குதல், சிறப்பு குறைதீர் முகாமையை உருவாக்குதல், பொது விழிப்புணர்வை ஏற்படுத்தல், குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தல் போன்ற பரிந்துரைகளை முன்வைப்பதன் மூலமும் இணையதளத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற குற்றங்களை தடுக்க முடியும்.

You May Also Like:

கல்வி புரட்சி கட்டுரை