இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை

இன்றைய குழந்தைகள் நாளை தலைவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள். அவர்களின் தரமும் ஆளுமையும் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றன.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

 • முன்னுரை
 • சிறுவர் தினம்
 • சிறுவர்களது உரிமைகள்
 • சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள்
 • சிறுவர்களை பாதுகாத்தல்
 • முடிவுரை

முன்னுரை

உலகில் வாழ்கின்ற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர்.

சிறுவர்கள் நாளைய நாட்டின் சமூகத்தை கட்டி எழுப்புகின்ற மாபெரும் சக்திகளாக காணப்படுகின்றனர். பெரியோர்களின் சிறந்த வழிகாட்டல்களே எதிர்கால நல்ல பல தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கிய பங்களிக்கின்றது.

இக்கட்டுரையில் சிறுவர் என்பவர் யார், சிறுவர் தினம், அவர்களது உரிமைகள், அவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள், பாதுகாத்தல் என்பவற்றைப் பற்றி நோக்குவோம்.

சிறுவர் தினம்

1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உலகெங்கும் உள்ள 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு சபையினால் பன்னாட்டு சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிறுவர்களது உரிமைகள்

 • வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை.
 • பிறப்பின் போது பெயர் ஒன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை.
 • பெற்றோரை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
 • பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தபடாது இருப்பதற்கான உரிமை.
 • தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை.
 • சிந்திப்பதற்கும், மனசாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை.
 • சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை.
 • போதிய கல்வியை பெறும் உரிமை.
 • பொருளாதார சுண்டல்களிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
 • பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
 • சித்திரவதை, கொடூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளில் இருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை.

இது போன்ற பல உரிமைகள் சிறுவர்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உறுதுணையாக அமைகின்றது.

சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள்

தற்காலத்து சிறுவர்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பவர்களாக பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. அந்த வகையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளாக பின்வருவனவற்றை நோக்கலாம்.

 • மோசமான வார்த்தை பிரயோகத்தை அவர்களுக்கு எதிராக பாவித்தல்.
 • சிறுவர்களை புறக்கணித்தல்.
 • சிறுவர் உழைப்பு.
 • சித்திரவதை.
 • போதைப் பொருள் கடத்தலுக்காக இவர்களை பாவித்தல்.
 • இளம் வயது திருமணம்.
 • சிறுவர் கடத்தி உடல் உறுப்புகளை விற்றல்.
 • கொலை.
 • பாலியல் துஸ்பிரயோகம்.
 • யுத்தத்தினால் பாதிப்படைதல்.
 • பெண் சிறுவர்கள் விபச்சாரத்துக்கு அமர்த்தப்படுதல்.

இவ்வாறான பல வன்முறைகள் இன்று உலக அரங்கில் சிறுவர்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

சிறுவர்களை பாதுகாத்தல்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்து அவர்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு சட்டங்களையும், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளையும், சிறுவர் நலம்புரி சேவை மையங்களையும் உருவாக்கியுள்ளது.

அத்துடன் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு நிம்மதியானதும் சுதந்திரமானதுமான சூழலை வாழ்வுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும், குழந்தைகளுக்கு உலகின் நன்மை தீமைகளை சரிவர எடுத்துக் கூறி சரியான முறையில் வளர்த்தல் வேண்டும், குழந்தைகளை சுயநலமில்லாத பொதுநலம் பேணும் வகையில் வழிப்படுத்துதல் வேண்டும்.

முடிவுரை

எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகின்ற பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்களே ஆவர்.

இளமையில் கல்வி சிலைகள் எழுத்து எனும் கூற்றுக்கு அமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைகள் தாக்கம் செலுத்துகின்றது.

நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களை சுற்றியுள்ள பொறுப்புத்தாளர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களா என் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை உருவாக்க முடியும்.

You May Also Like:

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை