இயற்கை விவசாயம் கட்டுரை

iyarkai vivasayam katturai in tamil

இயற்கை விவசாயம் கட்டுரை

நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் காணப்படுகின்றது இந்த விவசாயமானது ஆரோக்கியமான வகையில் மனிதனுக்கு பயன் அளிக்க வேண்டுமாயின் இயற்கை விவசாயம் முறைகள் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.

1966 ஆம் ஆண்டு நாட்டில் இயற்கை விவசாயம் செளிக்க வேண்டும் என்றே தமிழக அரசு பசுமைப் புரட்சியை உருவாக்கியது.

இயற்கை விவசாயம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கை விவசாயம் என்றால் என்ன
  • இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
  • பூச்சிய செலவு விவசாயம்
  • செயற்கை விவசாயத்தின் குறைபாடுகள் அளிக்கும் உந்துதல்
  • முடிவுரை

முன்னுரை

விவசாயத்துக்கான கல்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்காலங்களில் செயற்கை விவசாயத்தின் தீமைகள் பற்றி உணர்ந்து கொண்ட பல மக்கள் இயற்கை விவசாய முறைகளை விரும்புவதனையும், ஊக்குவிப்பதனையும் காண முடியும்.

அந்த வகையில் இன்றும் கிராமப்புறங்களில் இயற்கை விவசாய முறைகள் கைக்கொள்ளப்படுவதனைக் காணலாம்.

இயற்கை விவசாயம் என்றால் என்ன

பூச்சிக்கொல்லிகள் இல்லாத, பயிர்கள், மரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை இணைத்த ஒரு வேளாண்மை முறையே இயற்கை விவசாயம் எனப்படுகின்றது.

அதாவது ஒரே பண்ணையில் இருந்து அனைத்து பொருட்களும் கிடைக்கப்பெறுவதனை காணலாம். செயற்கையான உரங்களுக்கு பதிலாக இங்கு இயற்கையாக சூழலில் கிடைக்கக்கூடிய உயிர் வெளியீட்டு தரவுகளை பயன்படுத்தப்படுவதனையும் காண முடியும்.

இயற்கை விவசாயத்தின் நன்மைகள்

இயற்கை விவசாயத்தில் செலவுகள் குறைக்கப்படுவதோடு, இலாபம் அதிகரித்தல், மண்ணின் வளம் பாதுகாக்கப்படுதல், ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்கள் கிடைத்தல்,

பூச்சிக்கொல்லிகள் இல்லாமையினால் நச்சுத்தன்மை அற்றதாக காணப்படுதல், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுதல், பழங்கள் காய்கறிகள் போன்றன நீண்ட நாளுக்கு உபயோகப்படுத்தக் கூடியதாகவும், சுவை அதிகமானதாகவும் காணப்படுதல் போன்றவாரான பல்வேறு நன்மைகள் இந்த விவசாயத்தின் மூலம் கிடைக்கின்றன.

பூச்சிய செலவு விவசாயம்

தற்காலங்களில் செயற்கையான விவசாய முறைகளுக்கு மிகவும் அதிகமாக செலவு உரங்கள் வாங்குவதிலேயே காணப்படுகின்றன.

ஆனால் இயற்கை விவசாயம் முறைகளில் தங்களுடைய பண்ணையில் காணப்படும் விலங்குகளின் கழிவுகள் மற்றும் மக்கக் கூடிய குப்பைகள் போன்றன உரமாக பயன்படுத்தப்படுவதனால் இங்கு உரத்துக்கான செலவு, பூச்சிய செலவாக காணப்படுகின்றது. இதனால் மக்கள் குறைந்த செலவில் அதிக லாபத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

செயற்கை விவசாயத்தின் குறைபாடுகள் அளிக்கும் உந்துதல்

தற்காலங்களில் குறைவான காலங்களில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்வதற்காக செயற்கையான இரசாயனங்களையும், மருந்து பொருட்களையும் உபயோகித்து விவசாய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதனால் மக்கள் மத்தியில் பல்வேறு நோய்களும், ஆரோக்கியமற்ற தன்மையுமே ஏற்பட்டுள்ளது.

மேலும் இரசாயன பாவனைகளின் மூலமாக விவசாய பொருட்களின் ஊட்டச்சத்துக்களும் குறைவடைந்து, விஷத்தன்மை அதிகரித்துள்ளன. எனவே இவ்வாறான தீமைகள் இயற்கை விவசாய நடைமுறைகளுக்கு உந்துதல் அளிப்பதனை காணலாம்.

முடிவுரை

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் உணவுத் தேவையும் ஒன்றாகும். எனவே அந்த உணவானது சத்துள்ளதாகவும், தூய்மையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.

இவ்வாறான உணவு இயற்கை விவசாயத்தின் மூலமே கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மற்றும் மண் பாதுகாப்பு, விலங்குகளுக்கு பாதுகாப்பு, சூழலுக்கான குறைந்த மாசுபாடு போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது அவசியமாகும்.

You May Also Like:

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை