இயலாமை என்றால் என்ன மற்றும் இயலாமையின் வகைகள்

iyalamai in tamil

ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வகையான சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்றான். இயலாமையானது ஒரு செயலை நிறைவேற்ற முடியாத ஒரு நிலையாக காணப்படுகின்றது.

இயலாமை என்றால் என்ன

இயலாமை என்பது யாதெனில் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக சராசரி மனிதனை போன்று செயற்பட முடியாத ஒரு நிலையாகும்.

இயலாமையின் காரணமாக பல்வேறு வகையான தடைகளை எதிர் கொள்கின்றனர். இயலாமை என்பது பொதுவாக ஊனமுற்றோர் என்ற வார்த்தையோடு தொடர்புபட்டதாக காணப்படுகிறது.

இயலாமையின் வகைகள்

இயலாமையை பொறுத்தவரையில் பல்வேறு வகையில் நோக்க முடியும். அந்தவகையில் இயலாமையின் வகைகளை பின்வருமாறு நோக்கலாம்.

உடல் ஊனம்

இயலாமை என்று குறிப்பிடும் போதே எம் கண்முன்னே தோன்றுவது உடல் ஊனமாகும். அதாவது உடலில் காணப்படுகின்ற ஒரு பகுதியினை இழத்தல் என்பதனையே உடல் ஊனமானது காட்டுகின்றது.

மேலும் பிறவி ரீதியில் குறைபாடுகளை கொண்டிருத்தல், நோய்கள், விபத்துக்கள், அதிர்ச்சிகள் போன்றவற்றினால் ஏற்படுவதாக கொள்ளலாம். உதாரணமாக காது கேட்காமை, பேசமுடியாமை

உணர்ச்சி இயலாமை

உணர்ச்சி இயலாமை என்பது உணர்வு ரீதியிலான இழப்பினை குறிக்கின்றது. மேலும் குறைபாடுகளின் இருப்பினையும் குறிக்கின்றது. உதாரணமாக பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுகளை உணர்ச்சி இயலாமைகளாக கொள்ளலாம்.

அறிவுசார் இயலாமை

அறிவுசார் இயலாமையானது அறிவு ரீதியியாக மங்கிய ஒரு நிலையாகும். அதாவது கல்வி ரீதியியான விடயங்களை மேற்கொள்ள தடையாக காணப்படும் செயற்பாடுகளை கூறமுடியும்.

ஒரு விடயம் தொடர்பில் ஆர்வமான நிலை எம்மிடம் காணப்படும் அதே சமயம் அறிவு ரீதியாக செயற்பட முடியாத ஒரு நிலையும் காணப்படும். இதுவே அறிவுசார் இயலாமையாகும்.

மனரீதியியான இயலாமை

மனரீதியியான குறைபாடுகளையும் இயலாமையின் ஒரு வகையாக சுட்டிக்காட்டலாம். அதாவது நடத்தை ரீதியியான தொந்தரவான விடயங்கள் மனநல கோளாறுகளின் துன்பத்திலிருந்து பெறப்படக்கூடியதாகும்.

உள்ளுறுப்பு இயலாமை

ஒருவருடைய உறுப்புக்களானவை ஏதேனும் ஒரு குறைபாட்டினால் பாதிப்படைந்து காணப்படுதல் உள்ளுறுப்பு இயலாமையாகும். உதாரணமாக இதயம் சம்மந்தமான பிரச்சினைகளை குறிப்பிட முடியும்.

இயலாமையின் பண்புகள்

உடல் உறுப்புக்கள் இயல்பு நிலையில் இருந்து பிறழ்ந்து காணப்படுதல். உதாரணமாக கை கால் இல்லாமலிருத்தல் ஆகும்.

மரபு ரீதியாக வளரும் நிலைகள் ஏற்படலாம்.

உடலுறுப்புக்களின் ஊறுபாடுகளின் விளைவாய் தோன்றுவதாக காணப்படும்.

ஊனத்தின் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை சமூகத்தின் வசதி வாய்ப்புக்களை கொண்டு வெகுவாக குறைத்திடலாம்.

இயலாமையின் காரணங்கள்

நோய்கள் அதாவது போலியோ, பக்கவாதம் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களால் இயலாமையானது ஏற்படும்.

தாய் கருவுற்று இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தாக்கம்.

செயற்கை முறை கருவுருதலினால் ஏற்படும் தாக்கம்.

சூழ்நிலை காரணங்கள் மற்றும் மனவெழுச்சி ரீதியான காரணங்களினாலும் இயலாமை ஏற்படுகின்றது.

கற்றல் இயலாமை

கற்றல் இயலாமை என்பது கற்றலின் அடிப்படை திறன்களான படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியதாக காணப்படுகிறது. இவை உயர்மட்ட திறன்களான ஒருங்கமைத்தல், திட்டமிடல், கருத்தியல், நீண்டகால நினைவுத்திறன் மற்றும் கவனத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாகும்.

கற்றல் இயலாமையினை உடையவர்கள் பார்ப்பதற்கு இயலபுடையவர்களாகவும், புத்திக்கூர்மையினை உடையவர்களாகவும் காணப்படுவர்.

மேலும் இவர்களால் தனது திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படும். இந்த இயலாமையானது கல்வி செயல்பாடுகளில் மாத்திரமல்லாது ஏனைய இடங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது.

எனவேதான் கற்றல் இயலாமையானது ஒரு தனி நபரின் சிந்தனை திறன் மற்றும் காரணகாரிய தன்மையினையும் பாதிக்கின்றது.

You May Also Like:

படபடப்பு குறைய வழிகள்

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்