இயல் என்றால் என்ன

iyal endral enna

சொல் வடிவமும் எழுத்து வடிவத்தினையும் உடைய ஒரு மொழியே தமிழாகும். அந்த வகையில் முத்தமிழ் வடிவங்களில் ஒன்றாக இயல் அமைந்து காணப்படுகின்றது. இயலானது இயல்தமிழை சேர்ந்ததாகும்.

இயல் என்றால் என்ன

இயல் என்பது இயல்பாகவே பேசப்படுவதும் எழுதப்படுவதுமான தமிழ் மொழியினையே இயல் என குறிப்பிடலாம். இந்த இயலைத்தான் இயற்தமிழ் என்று அழைக்கின்றனர்.

அதாவது இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழ் வகையினுள் பிரதானமானதொன்றாகும். இலகுவாக எம்மால் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இயல் காணப்படுகின்றது.

இயல் தமிழானது பேச்சு, எழுத்து, இலக்கியம் என பல துறைகளை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. அனைவராலும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இது அமைந்துள்ளது.

இயற் தமிழும் அதன் முக்கியத்துவமும்

முத்தமிழின் வகையைச் சேர்ந்த இயற்தமிழானது இலக்கணங்களை எழுதிக் கொள்வதற்கு துணை புரிகின்றது. ஆரம்ப காலங்களில் பல இலக்கியங்களானவை இயற்தமிழிலே இயற்றப்பட்டு காணப்படுகின்றமை இயற்தமிழின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

இயற் தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்களானது காதல், வீரம் பற்றி பாடக்கூடியதாகவும் அக்கால மக்களுடைய வாழ்க்கை முறைமைகள் பற்றி சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது.

மேலும் இயற் தமிழானது இயற்கை எனும் பொருளிலும் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற சங்க இலக்கியங்களும் இயற்தமிழின் மூலமே பாடப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று தழிழ் மொழியானது செம்மொழி என்ற பெயரினை பெற்றிருப்பதும் இயற் தமிழுடைய முக்கியத்துவத்தினையே சுட்டி நிற்கின்றது. இயற் தமிழானது பல்வேறு அறக்கருத்துக்களை இதனூடாகவே பாடியுள்ளமையினையும் காணக்கூடியதாக உள்ளது.

இயற் தமிழானது மிகத் தொன்மை வாய்ந்ததொன்றாக காணப்படுவதோடு அரச சாசனங்கள், இலக்கியச் சான்றுகள், பழமை வாய்ந்த குகைகளில் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் போன்றவை அனைத்தும் இயற்தமிழிலேயே காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.

பழங்காலம் தொட்டு நவீன காலம் வரை சிறப்பு பெற்று வரக்கூடிய ஒன்றாகவே இயற் தமிழானது காணப்படுகின்றது. மேலும் வெற்றிக் கம்பத்தினை நட்டுவித்த வித்தனாய் வீறு நடைபோடுவதாகவும் இயற்தமிழானது செயற்பட்டு வருகின்றது.

சங்ககால இலக்கியங்களில் இயற் தமிழ்

முத்தமிழில் ஒன்றான இயல் தமிழில் பல்வேறு இலக்கியங்களை சங்ககால புலவர்கள் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சங்ககால இலக்கியங்களில் காதல், கொடை, வீரம், கல்வி, அறக்கருத்துக்கள் என பல விடயங்களை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான இலக்கியங்களானது எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய இயற் தமிழிலேதான் அமைந்துள்ளது என்பதனை குறிப்பிடலாம்.

இந்து மக்களுடைய பல்வேறு நூல்கள், அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கின்ற இலக்கியங்கள் போன்றனவற்றில் இயற் தமிழினையே காணக்கூடியதாக இருப்பது சிறப்பிற்குரியதாகும்.

அகநானூறு, புறநானூறு, நற்றினை, குறுந்தொகை பேன்ற வாழ்வியல் அம்சங்களை எடுத்தியம்பும் நூல்களானவை இதனூடாகவே இடம்பெற்றிருப்பதானது சங்ககாலத்தில் இயற்தமிழிலேயே இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன என்பதனை எடுத்து காட்டுகின்றது.

ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை இயற் தமிழின் முக்கியத்துவமானது பரந்துபட்டதொன்றாகவே காணப்படுகின்றன. இயலினுடைய பெருமையானது இன்று பல நாடுகளில் பேசப்பட்டு கொண்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

எனவேதான் நாமும் தமிழின் பெருமையினை எடுத்து கூறுவதோடு இயற் தமிழின் செல்வாக்கினை பரப்புவதற்கு உந்து சக்தியாக திகழ வேண்டும். மேலும் இதனை செயற்படுத்துவதன் மூலமாக முத்தமிழினை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

You May Also Like:

புதுக்கவிதை என்றால் என்ன

விழுமியங்கள் என்றால் என்ன