ஊடல் என்றால் என்ன

ஊடல் என்பது ஒரு வகை நடத்தை பாங்கினை சுட்டக்கூடியதாக காணப்படுகின்றது.

ஊடல் என்றால் என்ன

ஊடல் என்பது தலைவன் தலைவியருள் ஏற்படும் சிறு பிணக்கு அல்லது பொய்க்கோபம் எனப்படும். இவ் ஊடலானது உணர்த்த உணரும் ஊடல், உணர்த்த உணரா ஊடல் என இரு வகைகளாக காணப்படுகிறது.

உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகள்

பரத்தையர் காரணமாக தலைவன் தலைவியை பிரிந்து சென்றதை கண்டவர்கள் தலைவியின் ஊடலுக்கு இதுவே காரணம் என்று கூறுவர்.

தலைவியின் துன்பம் கண்ட பாங்கி நீ இவ்வளவு துன்பம் கொள்வதற்கு காரணம் என்ன என்று கேட்பாள். அவ்வாறு கேட்பவளிடம் தலைவியானவள் தலைவன் பிரிந்து சென்றதனை கூறுவாள்.

தலைவனுக்கு தலைவியின் பூப்பு உணர்வதற்கு அறிகுறியாக பாங்கி சிவந்த ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்து பரத்தையர் இல்லத்திற்கு செல்வார்.

தலைவனானவன் தலைவியுடன் சேர்ந்து வாழ்வதே உலக இயல்பாகும் என கருதி பரத்தையானவள் தலைவனை தலைவியிடம் அனுப்பி வைப்பாள்.

பரத்தையரிடமிருந்து மீண்டு வந்த தலைவனை கண்டு மகிழ்ந்த வாயில்கள் அச்செய்தியை பாங்கிக்கு கூற பாங்கி அச்செய்தியை தலைவிக்கு கூறுவாள்.

பரத்தையரிடமிருந்து தலைவன் மீண்டு தம்மிடம் வந்துவிட்டமையால் தலைவி ஊடல் நீங்கப்பெறுவாள். பின்னர் தலைவனை எதிர்கொண்டு பணிவாள்.

தலைவனோடு தலைவி கூடி மகிழ்வாள் என்பதினூடாக இவை யாவும் உணர்த்த உணரும் ஊடலிற்குரிய விடயங்களாகும்.

உணர்த்த உணராத ஊடற்குரிய கிளவிகள்

வெண்மை நிறமுடைய ஆடையை அணிந்து கொண்டு பாங்கியானவள் பரத்தையர் வீட்டில் இருக்கும் தலைவனிடம் சென்று தலைவிக்கு குழந்தை பிறந்துள்ளதை கூறி வீட்டிற்கு வா என்று அழைப்பு விடுப்பாள்.

குழந்தை பெற்றவுடன் தலைவியானவள் உறவினர்கள் சூழ எண்ணெய் தேய்த்து குளித்த செய்தியை தலைவனிடம் கூறி வீட்டிற்கு வா என அழைப்பாள்.

தலைவி குழந்தை பெற்ற செய்தியை கேட்ட தலைவனானவன் மகிழ்ச்சி அடைவான். அவ் மகிழ்ச்சியுடனேயே தலைவனானவன் தலைவியை காண்பதற்கு வருவான். அவன் வருகையை பாங்கி தலைவியிடம் கூறுவாள்.

வரும் தலைவனை மகிழ்வுடன் வரவேற்காமல் தலைவி அவனிடத்தில் ஊடல் காட்டுவாள். ஊடிய தலைவியிடத்து பாணண் முதல் பாங்கன் முடிய பலரும் வாயில் வேண்டுவர். அவர்களிடத்தில் தலைவி மறுத்து கூறுவாள்.

ஊடல் தீர்க்கும் வாயில்களை தலைவி மறுத்து விட்டால் தலைவன் விருந்தினர்களை அழைத்து செல்வான். இதன் காரணமாக தலைவியின் ஊடல் தீர்ந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைவான்.

தலைவியின் ஊடல் நீங்கியதாக நினைத்து தலைவனானவன் கூட நினைப்பான். ஆனால் தலைவி ஊடலை வெளிக்காட்டுவாள். தலைவியின் அழகிய அடிகளை தலைவன் வணங்குவான்.

நீ என் அடிகளை வணங்குவதனை பரத்தையர் கண்டால் நன்றாக இருக்கும் என தலைவி தலைவனிடம் கூறுவாள். பரத்தையர் எவரையும் எனக்கு தெரியாது என தலைவன் தலைவியிடம் கூறுவாள்.

தான் காமக்கிழத்தியை (ஒருவருக்கே உரிய பரத்தை) கண்டதாக தலைவி தலைவனிடம் கூறுவாள்.

தலைவியின் ஊடலை தோழியானவள் போக்க முனைவாள். தலைவியன் ஊடல் நீங்காமை கண்டு தலைவன் தலைவியிடம் ஊடல் கொள்வான்.

ஊடல் தணியாத தலைவியை நீ அன்பு இல்லாத கொடியவள் என பாங்கி இகழ்ந்து பேசுவாள்.

திருக்குறள் கூறும் ஊடல்

திருக்குறளானது ஊடல் பற்றி தனது குறள்களில் தெளிவாக கூறியுள்ளது அந்தவகையில்,

ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரித்தற்று

விளக்கம்: ஊடல் கொண்டவரின் ஊடலை போக்காது விடுவது தண்ணீர் இல்லாது வாடியுள்ள பூங்கொடியை அடியோடு வெட்டுவதனை போன்றதாகும். என இக் குறளானது குறிப்பிடுகின்றது.

அலந்தாரை அல்லா நோய் செய்தற்றால் தம்மை
புலத்தாரை புல்லா விடல்

விளக்கம்: தம்முடன் ஊடல் கொண்டோரின் ஊடலை போக்கி தழுவாமல் விடுவது துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்குவதாகும். எனவேதான் மேற்குறிப்பிட்ட குறள்களினூடாக ஊடல் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like:

அகநானூறு குறிப்பு வரைக

தாமிரம் என்றால் என்ன