ஒளியிழையானது நீண்ட வரலாற்றை கொண்டதாகும். இது கண்டுபிடிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகின்றது. இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் 1926 ஆகஸ்ட் 12-ல் பிறந்த நாரிந்தர் என்பவரே ஒளியிழையினைக் கண்டறிந்தவராவர். இதனாலயே இவர் ஒளியிழையின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
இவர் இயற்பியல் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், கல்வியாளர், எழுத்தாளர், தொழில் முனைவோர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் 120 கண்டுபிடிப்புகளுக்கான அறிவு சார் சொத்துரிமைகளை பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
லண்டனில் உள்ள இம்பீரியல் பொறியியல் கல்லூரியில் கண்ணாடி குறித்த மேம்பட்ட படிப்புகளின் முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியான டாக்டர் ஹெரால்டு ஹாப்கின்ஸ் பட்டகங்களுக்கு பதிலாக கண்ணாடி உருளைகளைக் கொண்டு ஒளியை கடத்துதல் குறித்து ஆய்வு நடத்துமாறு ஆலோசனையை வழங்கியதை அடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் வளைந்த கண்ணாடியிலும் ஒளி பயணிக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே ஒளியிழையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. நாரிந்தர் அவர்கள் தனது ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போதுதான் (1956 இல்) கண்ணாடி ஒளியிழை என்ற சொல்லை நாரிந்தர் உருவாக்கினார்.
மயிரிளையை விட மெல்லிய கண்ணாடி இழை வளையக்கூடியது என்றும் ஒளியை கடத்த முடியும் என்றும் ஒளி வேகத்தில் தகவல் தரவுகளை கடத்த முடியும் என்றும் 1966 இல் கண்டறியப்பட்டது.
ஒளியிழை என்றால் என்ன
நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட பல கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட மனித முடியின் விட்டமுடைய ஒரு இழைக்கற்றைகள் ஆகும். ஒவ்வொரு ஒளியிழையும் இரு பகுதிகளால் ஆனது. ஒன்று உள்ளகம் மற்றொன்று பாதுகாப்பு உறையாகும். இவை முழு அக எதிரொளிப்பு அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ஒளியிழை நெட்வொர்க்கை (Fiber Optic Network) ரிலையன்ஸ் கொண்டுள்ளது. மொத்தம், 250,000 ற்கும் அதிகமான கிலோமீற்றர் நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல் நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.
ஒளியிழையின் பயன்பாடுகள்
ஒளியிலையின் பயன்பாடானது பல்வேறு துறைகளிலும் பரவிக் காணப்படுகின்றது. தொலைத்தொடர்பு, வானியல், விவசாயம், மருத்துவம் போன்ற பல துறைகளில் இதன் பயன்பாட்டை பெரிதும் காணலாம்.
தொலைத்தொடர்பு
ஒளியிழையானது கணினி வலையமைப்புக்களிலும் தொலைத் தொடர்பு துறைகளிலும் ஒரு முக்கிய ஊடகமாக பயன்பட்டு வருகின்றது. சிறு தொலைவு பயன்பாடுகளில் ஒளியிழை வட அமைப்பானது, இடத்தைச் சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு அலுவலகத்திற்குள் உருவாகும் வலையமைப்பினைக் குறிப்பிடலாம். இங்கு ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தைச் சேமிக்கப் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நீண்ட தூரத்திற்கு ஒளி, ஒலி சமிஞ்ஞை அனுப்புவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவம்
ஒளி இழைகளின் தன்மையால் மருத்துவத்தில் இடம்பெறும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளுக்குப் பதிலாக சிறிய கீறல்களின் மூலம் சிகிச்சைகளை செய்திடவும், உடல் உறுப்புகளைக் கண்டறியவும் உதவியாக இருக்கின்றது.
விவசாயம்
இயற்கை மற்றும் செயற்கை மரங்களுக்கு ஒளியூட்டமாகப் பயன்படுகின்றன.
இவைதவிர தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கணினிகள், ரோபோக்கள், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி போன்றவற்றில் இணைக்கப் பயன்படுகின்றன.
You May Also Like: