கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

kalvi kan thirantha kamarajar speech tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கடையெழு வள்ளல்கள் வலம் வந்த தமிழ் நாட்டில் கல்வி வள்ளலாய் அவதரித்த கர்ம வீரர் காமராசர் பற்றியே நான் இன்று பேசப்போகின்றேன்.

பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும்

கல்வி கண் திறந்த காமராசரானவர் 1903ம் ஆண்டு யூலை 15ம் திகதி விருது நகரில் பிறந்தார். இவர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார்.

இவருக்கு குலதெய்வமாக காமாட்சியின் பெயரை இவரது பெற்றோர்கள் ஆரம்பத்தில் சூட்டினர். பின்னர் இவரது தாய் “ராசா” என்று இவரை அழைத்ததோடு பிற்பட்ட காலங்களில் இது மாறி “காமராசா” என அழைக்கப்பட்டார்.

இவர் தனது கற்றலை சத்ரிய வித்யாசால என்ற பள்ளியிலேயே தொடங்கினார். மிகவும் பொறுமையுடையவராகவும் விட்டுக்கொடுக்க கூடியவராகவும் சிறுவயதிலிருந்து காணப்பட்டார்.

இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததன் காரணத்தினால் தனது கல்வி நடவடிக்கைகளை இடையிலேயே இடைநிறுத்தி விட்டார். இவ்வாறாக தந்தையை இழந்த இவரது குடும்பமானது வறுமையே நோக்கியே சென்றது.

இதனை அவதானித்த காமராசர் அவர்கள் தனது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு தனது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

இவ்வாறு மாமாவின் துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே தேசத் தலைவர்களின் பேச்சுக்களினால் கவரப்பட்டு அரசியல் மற்றும் சுதந்திர போராட்டங்களில் ஆர்வம் காட்டக்கூடிய ஒருவராக மாறினார்.

கல்விப் பணிகள்

கல்வியின் அவசியத்தை உணர்ந்த இவர் முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியினை இலவசமாக்கினார்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தியவரே கல்விக் கண் திறந்த காமராசர் ஆவார். இவர் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி சிறந்த கல்வியினை வழங்க பங்காற்றினார் இதன் காரணமாகவே இவரை கல்விக் கண் திறந்தவர் என அழைக்கின்றனர்.

கல்வி கற்பதனூடாகவே எம்மை ஆட்கொண்ட வறுமையானது எம்மை விட்டு சென்றுவிடும் என நினைத்தார். பல்வேறு கல்வி நிலையங்களை அமைத்தார். இதனூடாக கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பகல் உணவுடன் கூடிய கல்வித்திட்டங்களை ஏற்பாடு செய்து சிறந்த கல்வியினை இதனூடாக வழங்கினார். படித்த வேலையற்றுக் காணப்படும் இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புக்களையும் வழங்கினார். இவ்வாறு இவர் உருவாக்கிய பல கல்வி நிலையங்கள் இன்றும் இயங்கிக் கொண்டே வருகின்றது.

காமராஜர் சிறப்பு பெயர்கள்

  • கர்ம வீரர்
  • படிக்காத மேதை
  • பெருந்தலைவர்
  • தென்னாட்டுக் காந்தி
  • கல்விக்கண் திறந்தவர்
  • கருப்புக் காந்தி
  • கல்வியின் தந்தை
  • அரசரை உருவாக்குபவர்

அரசியல் பணி

இவர் தனது இளமைக் காலத்தில் இருந்தே போராட்டக் கருத்துக்களின் மூலமாக ஈர்க்கப்பட்டவராவார். இவர் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டதோடு இவர் 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது செயலாளராக இவர் கடமையாற்றினார். இவ்வாறாகவே அரசியலில் ஆர்வம் கொண்டு 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

இறப்பு

இவர் தனது 72வது வயதில் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி காலமானார். கல்விக் கண் திறந்து அறியாமையை அகற்றி ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் ஒளி விளக்காய் திகழ்ந்தவரே காமராசர். இவர் எமக்களித்த கல்வியை சிறந்த முறையில் கற்று வாழ்வில் வெற்றி பெறுவோமாக.

You May Also Like:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேச்சு போட்டி

நான் விரும்பும் தலைவர் நேரு பேச்சு போட்டி