கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்

மண் தோன்றிய காலத்திலே தோன்றி மூவேந்தர் முடி தொட்டு அரசாண்ட மொழி தமிழ் தமிழானது எத்திறம் பழமையானது என்பதை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அன்று தொட்டு இன்று முதல் முத்தைப் போல் பிரகாசிக்கும் மொழியே தமிழாகும்.

இவ்வாறான தமிழைப் பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் பல கவிஞர்கள் பாடியுள்ளனர். அவ்வாறு பாடிய கவிஞர்கள் தமிழை தன் உயிர் என்றும் அமுதம் என்றும் பாடுவதோடு மட்டுமல்லாது தேன் போன்றது தமிழ் என்றும் பாடுகின்றனர்.

தமிழை தேன் எனப் பாடியோர்

தமிழை தேனுடன் பல கவிஞர்கள் ஒப்பிடுகின்றனர். அவ்வாறு ஒப்பிடுபவர்களில் ஒருவர் பாரதிதாசன் ஆவார். இவர் தமிழை அமுதம் என்றும் தமிழ் உயிர் என்றும் பாடுவதோடு தமிழை நறுந்தேன் எனப் பாடுகிறார். இதனை அவரின்

“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேன்”

என்ற கவிதை வரியின் ஊடாக அறியலாம்.

மேலும் தமிழை தேனோடு ஒப்பிடுபவர்களில் முக்கியமானவர் நாமக்கல் கவிஞர். இவர் “எங்கள் தமிழ்” என்ற கவிதையில் தமிழின் சிறப்பை கூறிய இவர் இறுதியில் “எங்கள் தமிழினம் தேன்மொழியாம்” எனக் கூறுகிறார். இவ்வாறு தமிழினை கவிஞர்கள் தேன் எனப் பாட பல காரணங்கள் உண்டு.

கவிஞர் தமிழை தேன் என கூறுவதற்கான காரணங்கள்

கவிஞர்கள் தமிழைப் பாலுக்கு ஒப்பிடுவதில்லை ஏனெனில் பாலானது ஒரே நாளில் கெட்டு விடும் ஆனால் தேனானது எத்னை ஆண்டுகள் எடுத்தாலும் கெடாது அதுபோலவே தமிழும் என்றென்றும் கெடாது. அதனாலேயே தமிழை தேனுக்கு ஒப்பிடுகின்றனர்.

தேனை சாப்பிட சாப்பிட உடல் வளம் பெருகும் அது போலவே தமிழை கற்க கற்க உளவளம் பெருகும் அதனாலேயே தமிழை தேனுக்கு ஒப்பிடுகின்றனர்.

மேலும் தேன் இனிமையானது தூய்மையானது சுவைமிக்கது இன்பம் கொடுப்பது இத்தனை பண்பும் தமிழுக்கு காணப்படுகின்றதனால் தமிழானது தேன் போன்றது என்கின்றனர்.

தேனானது திகட்டாத பண்பு உடையது அதுபோலவே தமிழும் கற்க கற்க திகட்டாத பண்புடையது அதனாலேயே தமிழை தேன் என்கின்றனர்.

தேனானது பலருக்கு மருந்தாய் அமைந்து நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. அதுபோலவே தமிழும் கற்பவருக்கு அறியாமை எனும் நோயை நீக்கி அறிவை கொடுக்கின்றது.

எனவே இவ்வாறான காரணிகளால் தமிழை தேன் என கவிஞர்கள் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. இதன் மூலம் கவிஞர்கள் தமிழை தேன் என்பதற்கான காரணத்தை அறியலாம்.

You May Also Like:

திருக்குறள் குறிப்பு வரைக

ஒள்வாள் அமலை என்றால் என்ன