காந்தியின் அகிம்சை கட்டுரை

gandhiyin ahimsa katturai in tamil

காந்தியின் அகிம்சை கட்டுரை

இந்தியாவில் வாழ்ந்து மரணித்த உயர்ந்த மனிதர்களுள் போற்றத் தகுந்த ஒருவராகவே மகாத்மா காந்தி காணப்படுகின்றார்.

இவர் தீண்டாமைக்கு எதிராகவும், மக்களின் உரிமை மீறல்களுக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் குரல் கொடுத்த முக்கியமான ஒருவராவார். இதனால் இவர் இந்தியாவின் தேசப்பிதா என போற்றும் அளவுக்கு சிறப்புடையவராவார்.

காந்தியின் அகிம்சை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காந்தியின் இளமைக்காலம்
  3. காந்தியின் கொள்கை
  4. காந்தியின் கருத்துக்கள்
  5. காந்தியின் சேவைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் வாழ்ந்து மரணிக்கும் பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒரு சிலர் மாத்திரமே அவர்கள் சேவைகளின் காரணமாக, மரணித்த பின்பும் நினைவு கூறப்படுகின்றனர். அவ்வாறான சிறப்புக்குரிய ஒருவரே காந்தியாவார்.

இந்திய சுதந்திர போராட்டத்தினை தலைமை தாங்கிய நடத்தியமையினால், விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார்.

காந்தியின் இளமைக்காலம்

1869 ஆம் ஆண்டு இந்தியாவில் குஜராத் மாகாணத்தில் போர்ப்பந்தர் எனும் இடத்தில் பிறந்தவரே காந்தியாவார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் மோகனதாஸ் காந்தி என்பதாகும்.

பாடசாலையில் கற்கும் காலத்தில் நற்பண்புகளும் நேர்மையும் மிக்க மாணவராக விளங்கினார். இவரது 18 வது வயதில் இங்கிலாந்துக்கு தன்னுடைய மேல்படிப்பை தொடர்வதற்காக சென்றார்.

இந்தியாவுக்கு திரும்பி வந்து வழக்கறிஞராக கடமை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காந்தியின் கொள்கை

காந்தி தன்னுடைய சிறு வயது முதலே பகவத் கீதை மற்றும் ஏனைய பல நூல்களை கற்று, அதன்படி ஏனைய உயிர்களை துன்புறுத்தாமல் சாந்தமாக வாழும் அகிம்சை வழியை தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தார்.

நம்மை யார் அடித்தாலும் பதிலுக்கு அகிம்சையை கொடுப்போம் என்றார். ஆகவே காந்தியின் அடையாளமாகவே அகிம்சை மாறியது.

காந்தியடிகள் மேல்நாட்டு ஆடைகளை தவிர்ந்து, உள்நாட்டில் நெசவாளர்களால் நெய்யப்படும் ஆடைகளை அணிபவராகவும், வாழ்நாள் முழுவதும் வாய்மையையே கடைப்பிடித்தவராகவும் காணப்பட்டார்.

காந்தியின் கருத்துக்கள்

“வாய்மையே வெல்லும்” என்பதனை அடிப்படையாகக் கொண்டு வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் உண்மையே பேச வேண்டும். என்பதனை வலியுறுத்திய ஒருவராகவே காந்தியடிகள் காணப்பட்டார்.

மேலும் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதனை நன்கு அறிந்து, விசாரணை செய்த பின்பே அவற்றை நம்ப வேண்டும். என்பதனை “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்த பின்பு முடிவெடுக்க வேண்டும்” என்ற வரிகளின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் சேவைகள்

தன்னலம் பார்க்காது பிறர் நலனுக்காக சேவையாற்றியவர்களில் முதன்மையான ஒருவராகவே காந்தி திகழ்கின்றார்.

அகிம்சை வழியில் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது மாத்திரமின்றி, ஏனைய நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளார்.

பாலின ஆண், பெண் அனைவரையும் சமமாக நடத்தியவராவார். மேலும் தீண்டாமை, உரிமையை மீறல் என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர் என்பதோடு இனம், சாதி, மத ரீதியான பிளவுகளை களைந்து அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்த முயற்சித்தார்.

இவையாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு உண்ணாவிரத போராட்டங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் மேற்கொண்டு, இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த மாமனிதர் ஆவார்.

முடிவுரை

ஆயுதம் ஏந்தி தம்மை எதிர்க்க வந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்ட காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நாள் முழு இந்தியாவும் துயரத்தில் நீந்தி தத்தளித்தது.

காந்தி அவர்களின் அறப்போருக்கு கிடைத்த வெற்றியே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும். எனவே வன்முறைகளும், அடக்குமுறைகளும் எதற்கும் தீர்வல்ல என்பதை புரிந்து கொண்டு, நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

You May Also Like:

எனது வாக்கு எனது உரிமை கட்டுரை