அகிம்சை எனும் சிறந்த கொள்கையால் உலக அரசியலில் தனித்துவமான வரலாற்றைப் பெற்ற மாமனிதராக காணப்படுபவர் மகாத்மா காந்தி அடிகளாவர்.
காந்தியின் கொள்கைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காந்தியடிகள் பற்றிய அறிமுகம்
- மது விலக்கு
- தீண்டாமை
- அகிம்சை
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவினுடைய சுதந்திரத்திற்காக முன் நின்று உழைத்த பல தலைவர்களுள் தலை சிறந்தவராக காணப்படும் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தான் மேற்கொண்ட போராட்டங்களுக்காகவும், பிரசாரங்களுக்காகவும் ஏறத்தாழ 80,000 கிலோமீட்டர் அதாவது பூமியின் சுற்றளவு இரு மடங்கு தூரத்தை நடந்து கடந்த மாமனிதராவார்.
காந்தியின் கொள்கைகள் யாவும் தலைசிறந்த கொள்கைகளாக காணப்படுகின்றன அவற்றை பற்றியும் காந்தியடிகள் பற்றியும் இக்கட்டுரையில் நோக்குவோம்.
காந்தியடிகள் பற்றிய அறிமுகம்
மகாத்மா காந்தி அடிகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தரிடம் கிராமத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி கரம்சத் காந்தி என்பவருக்கும் புத்திலிப்பாய் என்பதற்கும் மகனாக பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் மோகனதாஸ் கரன்சத் காந்தி என்பதாகும். இவர் சிறு வயது முதலே நேர்மை நடந்துக் கொள்ளல், வாய்மை, உண்மை பேசுதல் என்ற உயரிய குணங்களை உடையவராக காணப்பட்டார்.
இவர் தன்னுடைய 13 வது வயதில் கஸ்தூரிபாயை திருமணம் செய்து கொண்டார். 18 வயது பள்ளி படிப்பு முடித்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்று அப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பினார்.
அதன்பின்ன மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பிறகு தமது தாயாகத்திற்கானப்படுகின்ற மக்கள் அன்னியர் ஆட்சியின் விளைவாக எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாமல் ஒழிப்பதற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
மது விலக்கு
மது பழக்கம் என்பது மனிதனை எல்லா வகையிலும் சீர்குலைய செய்யும் ஓர் விடயமாகும்.
நல்ல குடிமகனாக இருக்க யாவரும் குடிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உழைப்பு அவசியமானதாகும், அவர்களின் உழைப்பு மது பாவனையில் சென்று விடக்கூடாது என்பதை அழுத்தமாக வலியுறுத்தி கூறியுள்ளார்.
தீண்டாமை
காந்தியடிகள் வாழ்ந்த காலப் பகுதிகள் தீண்டாமை என்பது பாரி ஒரு சவாலாக காணப்பட்டது. தீண்டாமை எனும் கொடிய நோயை ஒழிப்பதற்கு அரும்பணியாற்றினார். மனிதருக்கு உயர்வு தாழ்வு என்பது எப்போதும் பார்க்கக் கூடாது என்பதை மக்கள் மனதில் சாதி எதுவும் இல்லை என தெளிவுபடுத்தினார்.
அகிம்சை
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் மகாத்மா காந்தியே அகிம்சை நெறியை பின்பற்றி விடுதலை போராட்டத்தை நடத்தினார். போர் அல்லது போராட்டம் எனப்படும் போது உயிர் பலி ஏற்படுவது இயல்பு. போரில் ஆயுதங்களை பயன்படுத்துவது போருக்கு உரிய தர்மமாகும்.
ஆனால் ஆயுதங்கள் ஏந்தி போராட்ட மேற்கொள்ளும் முறையை வெறுத்த மகாத்மா காந்தியடிகள் சத்தியநெறிகள் அகிம்சை அடிப்படைகள் போரிடுவதையே விரும்பினார். அதன் அடிப்படையில் ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை முறையிலே சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். இதன் விளைவாகவே ஆங்கிலேயர்கள் தாங்களாகவே இந்தியாவை விட்டு வெளியேறினார்.
முடிவுரை
பல சிறந்த கொள்கைகள் மூலம் இந்திய தேசத்தில் பல அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் காணப்படுகின்ற மகாத்மா காந்தி அடிகள் சிறப்புக்குரியவர் ஆவார்.
இவரது சிறந்த கொள்கைகளை சிறப்பு அறிந்து அவற்றின் மூலம் செயல்படுவதன் மூலம் சிறந்த சமூகத்தை வளப்படுத்தலாம்.
You May Also Like: