கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை

gramam katturai in tamil

இயற்கை அழகும், செழிப்பும் நிறைந்ததாகவே கிராமங்கள் காணப்படும். கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் எளிமையான வாழ்க்கையினை வாழ்வதோடு மிகவும் நிம்மதியாகவும், திருப்திகரமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதனையும் காணலாம். கிராமத்தின் அமைதியும் இயற்கை சூழலும் யாவையும் ஈர்க்கக் கூடியதாகவே அமைந்து விடும்.

கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கிராமம் என்றால் என்ன
  • கிராமத்தின் வாழ்வியல் முறை
  • கிராமத்து வாழ்வின் நன்மைகள்
  • கிராம வாழ்வில் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு
  • முடிவுரை

முன்னுரை

பசுமை மற்றும் அமைதி நிறைந்த கிராம வாழ்வில் இருந்தே எம்முடைய பாரம்பரியம் உருவாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அதிலும் குறிப்பாக உலகில் அதிகமான கிராமங்களை கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது.

உழவுத் தொழிலின் பாரம்பரியத்தையும், உழைப்பின் மகிமையையும் உணர்த்தி நிற்பதாகவே கிராமங்கள் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் கிராமத்தின் சிறப்புகளை பற்றி நோக்குவோம்.

கிராமம் என்றால் என்ன

செயற்கையான விடயங்கள் மிகவும் அரிதாக நுழையும் அல்லது நுழைய முடியாத, இயற்கையான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய இடங்களை அல்லது பகுதிகளை கிராமங்கள் என வரையறை செய்து கொள்ளலாம்.

பொதுவாக இயற்கையான அம்சங்களையும், பாரம்பரியங்களையும் அதிகமாக கடைப்பிடிக்க கூடிய மக்கள் குழுவினரையும் கொண்டிருக்கக் கூடிய இடங்கள் கிராமங்கள் எனப்படுகின்றது.

கிராமத்தின் வாழ்வியல் முறை

கிராமத்து மக்களின் வாழ்வியல் மிகவும் எளிமையானதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் இவர்களது நாளாந்த செயற்பாடுகளாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு காணப்டுவதோடு, காய்கறிகளையும், வீட்டு தோட்டங்களையும் கிராமத்து மக்கள் செய்கை செய்கின்றனர்.

தங்களுக்கு தேவையான உணவுகளை தாமே சுத்தமான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடிய குழுவினராகவே கிராமத்து மக்கள் காணப்படுகின்றனர். கிராமிய வாழ்வியல் மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படுகின்றது.

கிராமத்து வாழ்வின் நன்மைகள்

கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் பொதுவாகவே தூய்மையான காற்றினை சுவாசிக்க கூடியவர்களாக இருப்பது, அவர்களுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய நன்மையாகும்.

மேலும் தூய்மையான உணவுகளை பெற்றுக் கொள்ளுதல், கூட்டுக் குடும்ப முறைகளை பேணுதல், தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளுதல், வாகன நெரிசல், போக்குவரத்து நெரிசல் போன்றன இல்லாதிருத்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் காணப்படுதல் போன்றவாரான பல்வேறு நன்மைகளை கிராமத்து மக்கள் பெற்றுக் கொள்வதனை காணலாம்.

கிராம வாழ்வில் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு

பொதுவாக நாம் கிராமங்களை நோக்கினால், அங்கு நகரங்களை விட சுற்றுச்சூழல் மாசு மிகவும் குறைவாகவே இடம்பெறுவதை காணலாம்.

அதாவது இங்கு நகரங்களைப் போல் அல்லாமல் மக்கள் தொகை குறைவாக இருத்தல், போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படுதல், தொழிற்சாலைகள் அரிதாக காணப்படுதல், வாகனங்கள் குறைவாக பயன்படுத்தப்படுதல் மற்றும் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளினை மக்கள் அதிகம் பயன்படுத்துவதனால் அவை பாதுகாக்கப்படுதல் போன்றவாரான காரணங்களின் அடிப்படையில் கிராம வாழ்வியலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகமாக பேணப்படுவதை காணலாம்.

முடிவுரை

இயற்கையின் எளிமையுடன் தொடர்பு கொண்ட கிராமத்து வாழ்வு மிகவும் அழகானது. ஆனால் அந்த கிராமங்களில் பல்வேறு வசதி வாய்ப்புகள் மிகவும் குறுகியதாகவே காணப்படுகின்றன.

கிராமத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவம், சுகாதாரம் மற்றும் தொழிற்சார் அனைத்து துறைகளினையும் விருத்தி செய்வதன் மூலம் கிராமங்கள் மேலும் செழிப்புறும்.

You May Also Like:

பாரதத்தின் சிறப்பு கட்டுரை

கலைஞரின் சுவடுகள் கட்டுரை