குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

kulanthai kavingar valliappa

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்அழ.வள்ளியப்பா

இளமைப் பருவம்

1922 நவம்பர் 7 அழகப்ப செட்டியார் உமையாள் ஆச்சியாருக்கு மகனாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெயரின் முன்னால் தந்தையாரின் பெயரில் இரண்டு எழுத்தைச்  சேர்த்து வைப்பது வழமை அதனாலேயே வள்ளியப்பா அழ.வள்ளியப்பா ஆனார்.

வள்ளியப்பா காந்தி ராஜபுரம் பாடசாலையில் 5ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன் பின்னர் ராமச்சந்திர புரத்தில் உள்ள பூமீஸ்வர சுவாமி இலவச உயர்தர பள்ளியில் பயின்றார்.

இந்த பள்ளியில் படிக்கும் போதே வள்ளியப்பாவின் குழந்தைக் கவிஞர் ஆற்றல் வெளியே வந்தது. Long jungle எனும் ஆங்கில திரைப்படம் தமிழில் காணாத காடு என தமிழில் மொழி பெயர்த்து எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

காணாத காடு என்பதை உரக்க வாசித்த வள்ளியப்பா பின்னர் ஒவ்வொரு வரிகளாக இயற்றி பாடத் தொடங்கினார்.

உயர்நிலைப் படிப்பை முடித்த வள்ளியப்பா மேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்த போது வை.கோவிந்தன் என்பவர் தான் ஆரம்பித்த சக்தி காரியாலயத்தில் பொருளாளர் பதவியில் நியமித்தார்.

இவர் அங்கு ‘ஆளுக்குப் பாதி’ என்ற முதல் கதையை எழுதினார். அந்த கதைக்கு கிடைத்த மதிப்பும் பாராட்டும் பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக மாபெரும் கவிஞராக மாறுவதற்கு வழிவகுத்தது.

தொழில் பின்ணனி

பின்னர் சிலகாலம் இந்தியன் வங்கியில் வேலை செய்தார். வங்கியில் வேலை செய்த காலத்தில் வங்கி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்களைத் தந்து பாராட்டையும் பெற்றார்.

ஸ்டேட் வங்கியிலும் வங்கியில் பயன்படுத்தும் சொற்களுக்காக குழு ஒன்றை அமைத்து சொற்களை தமிழ்ப்படுத்திய போது அந்த குழுவுக்கு ஆலோசனை கூறி பலரது  பாராட்டுக்களை பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் மலர், டமாரம், சங்கு, பூஞ்சோலை, கோகுலம் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

இலக்கியப் பணி

அழ.வள்ளியப்பா என்ற பெயர் எல்லோர் மனதிலும் ஆழமாக நிலைக்க காரணம் அவர் குழந்தைகளுக்காக வெளியிட்ட “மலரும் உள்ளம்“ எனும் நூல் ஆகும்.

மலரும் உள்ளம் வள்ளியப்பாவின் முதல் கவிதை தொகுதி ஆகும். இந்த நூல் 1946 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த முதல் தொகுதியில் 23 பாடல்கள் காணப்படுகின்றன.

1954ல் 135 பாடல்களைக் கொண்ட தொகுதியும் 1961ல் இன்னொரு கவிதைத் தொகுதியும் வெளியிட்டார்.

சிரிக்கும் பூக்கள் என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்ட பின்னரே இவருக்கு குழந்தைக் கவிஞர் எனும் பட்டம் கிடைத்தது.

குழந்தைக் கவிஞர் என அழைக்கப்பட அழ. வள்ளியப்பா கவிதைத் தொகுதிகள் மட்டுமல்லாது நற்பண்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்த கதைகள் பலவற்றையும் எழுதினார்.

அம்மாவும் அத்தையும், இனிக்கும் பாடல்கள், ஈசாப் கதை பாடல்கள், உமாவின் பூனைக்குட்டி, எங்கள் பாட்டி, குதிரைச் சவாரி, சிட்டுக்குருவி, சிரிக்கும் பூக்கள், சின்னஞ்சிறு பாடல்கள், சோனாவின் பயணம் போன்ற பல இலக்கியங்களை எழுதியுள்ளார்.

இவர் குழந்தைகளுக்காக குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவி அதனைத் திறம்பட நடத்தி பல எண்ணற்ற குழந்தை கவிஞர்களை உருவாக்கியவர் ஆவார்.

குழந்தை இலக்கிய மேம்பாட்டிற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மதுரைப் பல்கலைக்கழகத்தில் குழு உறுப்பினராக இருந்தார். இவர் உடல்நிலை சரியில்லாமல் 1989 மார்ச் 16 அன்று காலமானார்.

You May Also Like:

மெய்யியல் என்றால் என்ன