கூர்ம புராணம் ஆசிரியர்

அதிவீரராம பாண்டியன்

கூர்ம புராணம் ஆசிரியர்அதிவீரராம பாண்டியன்

பண்டைய காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் மற்றும் மன்னர்கள் தங்கள் மொழி மீது கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக பல இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், தொகுப்புக்கள், நூல்கள் என பல்வேறு வகையைச் சார்ந்தவற்றை படைக்கின்றனர்.

இவற்றுள் சில நூல்கள் மற்றும் காப்பியங்களே இன்றளவும் மக்களினால் பேணிப் பாதுகாக்கப்பட்டும் பயன்பாட்டிலும் இருந்து வருகின்றன. அந்த வகையில் நாம் இன்று கூர்ம புராணம் பற்றியும் அதனைத் தமிழில் எழுதிய அதிவீரராம பாண்டியனின் வரலாறு பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

கூர்ம புராணம்

பதிணென் புராணங்களுள் பதினைந்தாவது புராணமாக விளங்குவது கூர்ம புராணம் ஆகும். தமிழ் மொழியில் காணப்படும் கூர்ம புராணத்தை அதிவீரராம பாண்டியன் எனும் மன்னன் எழுதினார்.

இந்த நூல் 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கூர்ம புராணத்தில் திருமால் கூர்ம அவதாரம் பெற்று சிவபெருமானின் அற்புதங்களையும் பெருமைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தமை பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூர்ம புராணத்தில் இரண்டு காண்டங்கள் காணப்படுகின்றன. பூர்வ காண்டம், உத்தர காண்டம் போன்றனவே அவையாகும்.

பூர்வ காண்டத்தில் 48 அத்தியாயங்கள் மற்றும் 2729 பாடல்களும் உத்தர காண்டத்தில் 47 அத்தியாயங்களும் 899 பாடல்களுமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

கூர்ம புராணத்தின் உள்ளடக்கம்

கூர்ம புராணத்தில் அதிவீரராம பாண்டிய மன்னனின் ஆசிரியரை சிறப்பிக்கும் முகமாக ‘சுவாமி தேவன்’ என்றொரு குறிப்பு காணப்படுகின்றது. இந்த நூலில் சிவபெருமானின் அற்புதச் செயல்கள், வழிபடும் முறைகள், கிரியை செய்கைகள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

கூர்ம புராண நூலில் பிரபஞ்சம், பிருகு, புலத்தியன், சூரியன், சந்திரன், மனு போன்றன உருவான வரலாறு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லப்படுகின்றது.

எழுத்தாசிரியர் அதிவீரராம பாண்டியன்

பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னர்களில் அதிவீரராம பாண்டிய மன்னரும் ஒருவர் ஆவார். இவர் 1564ஆம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படுகின்றது. பாண்டியர் குடியைச் சேர்ந்த மன்னர்கள் மற்றும் பிறரும் வேறு சில மன்னர்களின் படையெடுப்பின் காரணமாக தென்காசியில் இடம்பெயர்ந்து சென்று ஆட்சி புரிந்து வந்தனர்.

அதிவீரராம பாண்டிய மன்னன் அக்காலத்தில் நாயக்கர் ஆட்சியின் கீழ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகின்றது. அதிவீரராம பாண்டியருக்கு கோ ஐடிலவர்மன் திரிபுவன சக்கராத்தி கோனேரின்மை கொண்டான திழுநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப் பெருமாள் குலசேகரதேவர் நந்தனாரான அழகம்பெருமாள் அதிவீர ராமரான ஸ்ரீவல்லப தேவல் மற்றும் சீவலன், இராமன், வீரமாறன் என்னும் பல பெயர்களினால் அழைக்கப்படுகின்றார்.

அதிவீரராம பாண்டிய மன்னன் இயற்கையாக புலவர்களை ஆதரிக்கும் பண்பும் அவர்களைப் போற்றி கவி பாடும் ஆற்றலையும் பெற்றிருந்தனர்.

இவர் ஆசு கவிராயர், திருவண்ணாமலை புலவர், சிதம்பர நாதர், இராம கிருஸ்ணர், சிவந்த கவிராசர் போன்ற புலவர்களை தன்னுடைய கவனிப்பின் கீழ் ஆதரித்தி வந்ததோடு அவர்களை நூல்கள் இயற்றவும் செய்வித்தார்.

அதிவீரராம பாண்டியன் சிவன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட காரணத்தால் சிவ ஆலயம் மற்றும் திருமால் ஆலயம் போன்றனவற்றை கட்டினார்.

அதிவீரராம பாண்டிய மன்னன் நைடதம், காசிக் காண்டம்,கூர்ம புராணம், கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, கருவை வெண்பாவந்தாதி, கருவைக் கலித்துறையந்தாதி, வெற்றி வேற்கை, கொக்கோம் எனும் காம நூல், இலிங்க புராணம் போன்ற நூல்களை இயற்றி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

You May Also Like:

தமிழின் முதல் கள ஆய்வு நூல்

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்