கையூட்டு என்றால் என்ன

kaiyuttu in tamil

கையூட்டானது குற்றங்களில் ஒன்றாக திகழ்வதோடு ஊழலின் ஒரு வடிவமாகவும் காணப்படுகின்றது.

கையூட்டு என்றால் என்ன

கையூட்டு என்பது லஞ்சத்தினை குறித்து நிற்கின்றது. அதாவது வாங்குபவர் தனது கடமைகளுக்கு பொருத்தமில்லாத வகையில் அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதற்காக பணம் அல்லது அன்பளிப்புக்களை ஏற்று கொள்வதனையே கையூட்டு எனலாம். இது ஒரு குற்றமாகும்.

மேலும் பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றினையே கையூட்டு என கூற முடியும்.

கையூட்டலின் விளைவுகள்

கையூட்டலின் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படல்.

லஞ்ச ஊழலில் பொருளாதார செலவு பற்றி அறிவது கடினமானதொன்றாகவே காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் 2016 இல் கையூட்டு மட்டுமே 1.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் மொத்த பொருளாதார இழப்பை குறித்து நிற்கின்றது. இதன் காரணமாக அதிகளவு பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.

தனிப்பட்ட இழப்பு, மிரட்டல் மற்றும் அசௌகரியங்கள் ஏற்படல்.

மக்கள் ஊழலை அனுபவிக்கும் போது பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாகுகின்றனர். அதாவது மருத்துவ கவனிப்பை பெற, தொலைபேசி சேவைகள், கட்டிட அனுமதி என பல்வேறுபட்ட விடயங்களில் ஊழலானது இடம் பெறுகின்றது.

உதாரணமாக ஒரு நபர் காவல்துறை அதிகாரியால் கேட்கப்பட்ட கையூட்டு கொடுக்கப்படாததன் காரணமாக அடிக்கப்படுகிறார், தடுத்து வைக்கப்படுகிறார். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட அச்சுறுத்தல் இழப்புக்கு ஆளாகின்றார்.

சீர்குலைந்த பொருளாதார மற்றும் அரசியலமைப்புக்கள்.

தனியார் நலனில் மோசடியான சமூக அமைப்புக்கள் உருவாகின்றன. அதாவது தனியார் மற்றும் பொது ஊழலின் வடிவங்களாகவே இன்று பல சமூக அமைப்புக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக சீர்குலைந்த பொருளாதார அரசியலமைப்புக்கள் காணப்படுகின்றன.

தண்டனையின்மை பகுதி நீதி.

நீதி அமைப்பில் ஊழல் அதிகரிக்கும் போது மக்கள் தங்கள் வேலையை செய்வதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளிடம் செல்கின்றனர். ஆனால் அதிகாரம் படைத்தவர்கள் நீதியிலிருந்து தப்பிக்கின்றனர். நீதியற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகின்றனர். இவை யாவும் கையூட்டினால் ஏற்படக் கூடிய விளைவாகும்.

ஏழை மக்கள் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

பொதுவாக ஏழை மக்கள் ஊழலின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏனெனில் பணம் படைத்தவர்களே கையூட்டலின் காரணமாக பல்வேறு விடயங்களை பெற்றுக் கொள்கின்றனர்.

ஏழை மக்கள் நீதியான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களுக்கான நீதியானது கிடைக்கப் பெறுவதில்லை. இதன் காரணமாக மன ரீதியான பாதிப்பிற்குட்படுகின்றனர்.

இந்தியாவில் கையூட்டு குற்றங்களுக்கான தண்டனைகள்

இந்தியாவில் 1988 பிரிவு 7,8,9 மற்றும் 10 இன் கீழ் ஊழல் தடுப்புச் சட்டம் காணப்பட்டது. அதாவது ஊழல் செய்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது அபராதம் இன்றியோ குறைந்தபட்சம் ஆறு மாதங்களும் அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 13 இன் கீழ் ஊதியத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் ஒரு ஆண்டும் அதிக பட்சம் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் கையூட்டினூடாக சேர்ந்த அசையும், அசையா சொத்துக்களையும் முடக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

கையூட்டின் ஊடாக பல்வேறு பாதிப்புக்கள் இடம் பெறுவது மாத்திரமல்லாது நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்க கூடியதாகவும் காணப்படுகின்றது.

You May Also Like:

உந்தம் என்றால் என்ன

மனநலம் என்றால் என்ன