சங்க இலக்கிய வரலாறு கட்டுரை

sanga ilakkiya varalaru katturai in tamil

மொழிகளில் மிகவும் பழமையானது என போற்றப்படும் தமிழ் மொழியானது பல்லாயிரம் வருட கால இலக்கண, இலக்கியங்களை கொண்ட அமைந்ததாகவே காணப்படுகின்றது.

தமிழ் மொழியினுடைய இலக்கிய வரலாறு என்பது மிகவும் நீண்ட காலத்துக்குரியதாகவே காணப்படுகின்றது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலமாகவே இந்த சங்க காலம் திகழ்கின்றது.

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சங்ககால புலவர்கள்
  3. சங்ககால இலக்கியங்கள்
  4. சங்க இலக்கியங்கள் கூறும் அறக்கருத்துக்கள்
  5. சங்க கால இலக்கியங்களில் தென்படும் தமிழர் வாழ்வியல்
  6. முடிவுரை

முன்னுரை

எம்முடைய தாய்மொழியான தமிழில் தோன்றிய இலக்கியங்களில் மிகவும் பழமையானவையும் சிறப்புக்கள் நிறைந்தவையாகவும் காணப்படுபவை சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் ஆகும்.

இந்த சங்க காலம் மூன்று வகையான காலப்பகுதிகளாக காணப்படுகின்றது. இக்காலப் பகுதியில் அகத்தினை புறத்தினை சார்ந்த பதினெண் மேல் கணக்கு நூல்கள் எழுந்தன இவை காலத்தால் அழியாச் சிறப்புடைவையாக திகழ்கின்றன.

சங்க கால புலவர்கள்

சங்ககால இலக்கியங்கள் யாவும் புகழ்பெற்ற புலவர்களினாலே இயற்றப்பட்டுள்ளன. அக்காலப் புலவர்கள் சங்ககால மன்னர்களினால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்களாவர். இவ்வாறாக சங்க காலதில் சிறந்த இலக்கியங்களை இயற்றிய புலவர்களுள் ஒளவையார், பரணர், கணியன் பூங்குன்றன், நக்கீரர், கபிலர் போன்றோரை குறிப்பிடலாம்.

சங்க காலத்து இலக்கியங்கள்

சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்ளை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என வகைப்படுத்தி உள்ளனர். மேலும் பொருள் அடிப்படையில் சங்க கால இலக்கியங்கள் அகத்திணை புறத்திணை சார்ந்த இலக்கியங்கள் என வேறுபடுத்தப்படுகின்றன.

இங்கு அகம் எனப்படுவது பொதுவாக காதல் பற்றிய செய்திகளை குறிப்பிடுவதாகும். புறம் எனப்படுவது கொடை, வீரம் போன்றவற்றினை எடுத்துக்காட்டுவதாகவும் காணப்படுகின்றது.

சங்ககால இலக்கியங்கள் கூறும் அறக்கருத்துக்கள்

சங்க காலம் என்பது பொதுவாகவே அகம், புறம் சார் இலக்கியங்களின் தோற்ற காலமாகும்.

அதாவது இங்கு புறம் எனப்படுவது மன்னர்களுடைய போர்ஒழுக்கம் பற்றியாகும். மன்னர்கள் எதிர் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை கைப்பற்றவும் செய்தனர். இதனால் அங்கு நிறைய உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான செயல்களில் இருந்து மக்களை மீட்டி நல்வழிப்படுத்தும் வகையிலேயே புலவர்கள் அறக்கருத்துக்கள் நிறைந்த இலக்கியங்களையும் செய்யுள்களையும் எழுத ஆரம்பித்தனர்.

அந்த வகையில் “யாதும் மூரே யாவரும் கேளிர்…..” என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளின் ஊடாக மனிதனுக்கு தேவையான அறங்கள் அனைத்தையும் போதித்துள்ளமையை காண முடியும்.

சங்ககால இலக்கியங்களில் தென்படும் தமிழர் வாழ்வியல்

தமிழர்களுக்கு என வாழ்வியல், வரலாறு, இலக்கியம் என்பன காணப்படுகின்றது என்பதனை உலக அரங்களவில் எடுத்து காட்டியுள்ளது என்றால் அது சங்க இலக்கியங்கள் தான் என்பதில் மிகை இல்லை.

பண்டைத் தமிழர்களது போர், வீரம், கொடை, காதல் போன்றவற்றை மிகவும் அழகான முறையில் எடுத்துக்காட்டுவனவாக இந்த சங்க காலத்து இலக்கியங்கள் காணப்படுகின்றன.

மேலும் அறத்தோடு இணைந்த தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது பிறருக்கு தானம் செய்ய வேண்டும், உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும், ஏமாற்ற கூடாது போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.

முடிவுரை

சங்க காலம் பற்றியும் சங்ககாலத்து புலவர்களின் கவிநயம் மற்றும் ஆற்றல் பற்றியும் எமக்கு எடுத்துச் சொல்வதாகவே இந்த சங்க காலத்தில் இலக்கியங்கள் அமையப் பெறுகின்றன.

எம்முடைய முன்னோர்களது வாழ்வியலை தற்காலத்தில் வாழக்கூடிய இளம் சமூகத்தினரும் கற்று அறிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையாகவே இந்த சங்க காலத்து இலக்கியங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You May Also Like:

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

கல்வி புரட்சி கட்டுரை