சஞ்சிகை என்றால் என்ன

சஞ்சிகை என்றால் என்ன

உலக நடப்புக்கள் மற்றும் சமூக ரீதியான விடயங்கள், பொது அறிவுகள் என பல விடயங்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் உறுதுனையாக சஞ்சிகையானது காணப்படுகின்றது. சஞ்சிகைகள் மூலமாக இலகுவாக ஒரு விடயத்தினை அறிந்து கொள்ள முடியும்.

சஞ்சிகை என்றால் என்ன

சஞ்சிகை என்பது செய்திகள், கருத்துக்கள் மற்றும் நாட்டு நடப்புக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள அச்சிடப்பட்டு வெளியிடப்படும் ஓர் இதழ் சஞ்சிகை ஆகும்.

இதனை இதழ் என்றும் அழைப்பார்கள். சஞ்சிகையானது வாரத்திற்கு ஒரு முறை மற்றும் மாதத்திற்கு ஒரு முறை என்றும் வருடத்திற்கு ஒரு முறை என்றும் வெளியிடப்படுவதாகும்.

சஞ்சிகை என்பது ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும் காகித அட்டையுடன் கூடிய ஒரு பிரசுரம் எனலாம். சஞ்சிகையில் கட்டுரைகள், கதைகள், புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் என பல விடயங்களை கொண்டுள்ளது.

சஞ்சிகையின் முக்கியத்துவம்

வணிக ரீதியான போக்குகள் மற்றும் அதன் சுழற்சிகள் போன்றவற்றின் விரிவான விளக்கங்களை பெற்றுக் கொள்ள சஞ்சிகையானது துணைபுரிகின்றது. அதாவது பொருளியல் சார்ந்த விபரங்களின் ஊடாக வணிகத்துறையை மேம்படுத்தவும் சஞ்சிகை உதவுகின்றது.

சஞ்சிகையானது மன அழுத்தத்தினை குறைப்பதற்கு துணைபுரிகின்றது. நாம் பல்வேறு யோசனைகளில் இருக்கும் போது பொழுதுபோக்கான விடயங்கள் போன்றவற்றை சஞ்சிகைகள் மூலம் வாசிக்கும் போது மனதிற்கு ஒரு இதமான சூழலை ஏற்படுத்துகின்றது.

ஆய்வியல் விடயங்களை எமக்கு எடுத்துரைப்பதற்கு சஞ்சிகையானது அவசியமாகின்றது.

அதாவது கல்வி ரீதியான விடயங்கள் சம்பந்தமான ஆய்வு கட்டுரைகளை நாம் தேடும் போது சஞ்சிகைகளில் அதிகளவாக இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் கவிதைகள் மற்றம் கட்டுரைகள், விடுகதைகள், பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்கள் போன்றவற்றை சஞ்சிகைகளானது உள்ளடக்கி காணப்படுவதனையும் சஞ்சிகையின் முக்கியத்துவமாக கருதலாம்.

சிறுவர்களும் ஒரு ஆர்வத்தோடு சஞ்சிகைகளை வாசிப்பதானது சிறுவர்களுக்கும் ஓர் உந்து சக்தியாக அமையும் எனலாம். சஞ்சிகையானது புத்தாக்க சிந்தனையுடன் கூடிய தகவல்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றது என்பதனையும் சஞ்சிகையின் முக்கியத்துவமாக கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் சஞ்சிகையானது எதிர்நோக்குகின்ற சவால்கள்

சஞ்சிகைகளை ஆரம்ப காலகட்டதில் வாசித்தது போன்று அல்லாமல் இன்று வாசிப்பு தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் சஞ்சிகை வாசிப்பதானது மருவி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

ஏனெனில் நவீனத்துவ வளர்ச்சியின் காரணமாக இணையம் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவமானது சஞ்சிகையினை வாசிப்பதற்கு கொடுப்பதில்லை. இது சஞ்சிகை எதிர்நோக்குகின்ற ஒரு சவாலாகும்.

வாசகர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடானது இன்றைய சஞ்சிகைகளில் மிக அரிதாகவே காணப்படுகின்றதோடு சஞ்சிகைகளை எழுதுகின்ற எழுத்தாளர்கள் அதனை எழுதுவதற்கு முன்வராமையினையும் சவாலாக கருத முடிகின்றது.

மேலும் இவ்வாறான நாளிதழ்களில் பல்வேறுபட்ட அரசியல் ரீதியான உட்பூசல்களும் இடம் பெறுகின்றமை சஞ்சிகையானது எதிர்நோக்குகின்ற சவால்களில் ஒன்றாகும்.

காலத்துடன் ஒருங்கிணைந்து செயற்படாமல் எல்லா காலத்திற்கும் ஒரே தன்மையிலேயே இடம் பெறுகின்றமையினையும் ஒரு சவாலாக கருதலாம். அதாவது மாற்றம் என்பது அனைத்து துறைகளிலும் இடம் பெற கூடியதாகும். இவ்வாறானதொரு சூழலில் சஞ்சிகையும் மாறக்கூடிய ஒரு தேவை உள்ளது.

இன்றைய சூழலில் சஞ்சிகைகளில் தனிநபர் மற்றும் குழுக்களுடைய தாக்கங்கள் செல்வாக்கு செலுத்துவதோடு கருத்து வேறுபாட்டினையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்களின் காரணமாக இன்று சஞ்சிகைகளானது அதன் தனித்தன்மையினை இழந்து காணப்படுகின்றது எனலாம். ஆகவேதான் சஞ்சிகைகளானது தன்னுடைய தனித்தன்மையினை பெற்று கால மாற்றத்திற்கு ஏற்றாற் போல் மாறி வருவது அவசியமாகும்.

You May Also Like:

விளம்பரம் என்றால் என்ன