அனைத்து மக்களுக்கும் சமமான சட்டங்கள் காணப்படுவதோடு மக்களின் சமத்துவமானது இந்த சட்டத்தின் ஆட்சியில் பேணப்பட்டு காணப்படும்.
சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன
சட்டத்தின் ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்பதனை குறிப்பிடுவதாகும். அதாவது சட்டமானது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக காணப்படும்.
மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது சட்டங்கள் நியாயமானவையா என்பது பற்றி தீர்மானிக்காமல் இருக்கும் சட்டங்கள் படி சமூகம் இயங்க வேண்டும் என்ற கருத்தை சுட்டி நிற்கின்றது. மேலும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமாயின் அந்த அந்த நாட்டுக்கு சட்டமியற்று வழிமுறைகளில் ஊடாக நிகழலாம்.
சட்டத்தின் ஆட்சியின் நன்மைகள்
சட்டவாட்சியின் முதன்மையான விடயமே சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும். அதாவது எந்தவொரு தனிமனிதனும் சட்டத்திற்கு மேலானவன் இல்லை என்பதனை சட்டத்தின் ஆட்சி குறிப்பிடுகிறது.
அதாவது ஒரு தனிநபரின் இனம், மொழி, பாலினம் போன்றவற்றை பொருட்படுத்தாது சட்டமானது அனைவருக்கும் சமமானது என்பதனை சட்டத்தின் ஆட்சியானது தெளிவுபடுத்துகிறது. மேலும் நியாயமான ஜனநாயக சமூகத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தின் ஆட்சியானது முக்கியத்துவமிக்கதாகவே காணப்படுகின்றது.
சட்டத்தின் ஆட்சியின் கொள்கைகளுள் ஒன்றாக சுதந்திரமானது காணப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் தனிமனித சுதந்திரத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நபர் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பவற்றை பெற்றுக் கொண்டு சிறந்த முறையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக செயற்படுவார். மேலும் ஒரு சமூகம் சுதந்திரமாக காணப்பட சட்டத்தின் ஆட்சியானது அவசியமானதாகும்.
சட்டவாட்சியின் மூலமாக நல்லாட்சியை ஏற்படுத்த முடிகிறது. அதாவது நல்லாட்சியினூடாக அதிகாரத்தில் காணப்படுவோர் பொறுப்பு கூற கூடியவர்களாக காணப்படுவர். பொது மக்களின் நலனுக்காக செயற்பட கூடியவர்களாகவும் காணப்படுவர்.
சட்டத்தின் ஆட்சியின் பிரிதொரு நன்மையாக ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதை குறிப்பிடலாம். அதாவது உறுதியான ஜனநாயக அரசை ஏற்படுத்துவதில் சட்ட ஆட்சி துணைபுரிகின்றது. அதாவது வாக்களிக்கும் உரிமையினை பெற்று சிறந்த ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையினை இந்த சட்டவாட்சி மூலம் பெற்று கொள்ள முடியும்.
சட்டத்தின் ஆட்சியானது எதோச்சதிகாரத்தினை கட்டுப்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது. அதாவது பொது மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே சட்டமானது காணப்பட வேண்டும் என்பதோடு மக்களுக்கு சேவை செய்வதனை சட்டத்தின் ஆட்சியானது உறுதி செய்கின்றது.
ரஷ்யாவும் சட்டத்தின் ஆட்சியும்
ரஷ்யாவில் சட்டத்தின் ஆட்சியானது பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. அந்த வகையில் ரஷ்யாவில் சட்டத்தின் ஆட்சியில் காணப்படும் முக்கிய விடயங்களை பின்வருமாறு நோக்கலாம்.
ஒரு நபரால் ஏகபோக மயமாக்க அதிகாரத்தை கைப்பற்றுவதனை இல்லாமல் செய்கின்றது. ஏனெனில் எதேச்சதிகாரமானது சர்வதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
அரசியலமைப்பு நீதிமன்றமானது அரச கட்டமைப்பின் ஸ்திர தன்மையினை உறுதிப்படுத்துகிறது. இதனூடாக சட்டபூர்வமான மேலாதிக்கத்தினை உறுதி செய்கிறது.
தனிப்பட்ட மற்றும் மாநிலத்தின் பொறுப்பு பரஸ்பரமாகும். அதாவது குடிமகன் ஒருவன் முதன் முதலாக மாநில அரசிற்கு முன்பாக பொறுப்பேற்கிறார். ஆனால் இதே நேரத்தில் அரசு தன்னை கடமைப்பட்ட கடமைகளிலிருந்து விடுவிப்பதில்லை.
அனைத்து நபர்களும் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் சட்ட மற்றும் சட்டத்திற்கு முன் சமமாக இருத்தல் வேண்டும். அடிப்படை சட்டத்தை மீறுவதற்கு அரசுக்கு உரிமை கிடையாது. மேலும் அரச கட்டமைப்புக்கள் குடிமக்களின் நம்பிக்கையாக திகழ்கின்றது.
எனவேதான் சட்டத்தின் ஆட்சியானது சமுதாயத்துடன் இணைந்திருப்பதாக காணப்படுவதோடு ஓர் ஒழுக்கமான நெறியாக இந்த சட்டவாட்சி காணப்படுகின்றது. சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் சட்டவாட்சியின் பங்கானது அளப்பரியதாக காணப்படுகின்றது.
You May Also Like: