சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை

sardar vallabhbhai patel katturai in tamil

இந்தியாவை ஒருங்கிணைத்ததில் பிரதான இடத்தினை பெற்றவரே சர்தார் வல்லவாய் பட்டேல் ஆவார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பெருமைக்குரியவராக திகழ்வதோடு இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவருமாவார். அதுமட்டுமல்லாது இவர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியதாகும்.

சர்தார் வல்லபாய் பட்டேல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்ப கால வாழ்க்கை
  • சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தல்
  • சாதனைகள்
  • இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்
  • முடிவுரை

முன்னுரை

இவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவரும், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் திகழ்ந்தவராவார். சர்தார் வல்லவாய் பட்டோலினது சேவைகள் இன்று வரை பேசப்பட்டதொன்றாகவே காணப்படுகின்றது. மேலும் இவர் சிறந்த அரசியல் வாதியாகவும் செயற்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் குஜராத்தில் கரம்சத் எனும் இடத்தில் 1885ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் லாட்பாய் மற்றும் ஜாவர்பாய் படேல் ஆவார்கள். இவர் தனது குடும்பத்தில் 04வது பிள்ளையாக காணப்பட்டார்.

இவர் கல்வியில் சிறந்து விளங்கியவராக காணப்பட்டதோடு தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்கு லேசன் கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்கினார். மேலும் 1897இல் இவர் தனது சட்டப்படிப்பை தொடருவதற்காக இங்கிலாந்திற்கு சென்றதோடு தனது படிப்பிலும் சிறந்து விளங்கினார்.

சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தல்

இந்திய தேசத்தை ஒண்றிணைத்தவர் என்ற பெருமை சர்தார் வல்லவாய் பட்டேலேயே சாரும். அதாவது நாடு பூராகவும் சிதறிக் கிடந்த சமஸ்தானத்தை ஒன்று படுத்தியவர் சர்தார் பட்டேல் ஆவார்.

இவர் பல்வேறு இராஜதந்திரங்களையும் தனது திறமைகளையும் ஒன்று சேர்த்து இந்தியாவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த வகையில் இவரின் இந்தியாவை ஒருங்கிணைக்கும் திட்டமானது நிறைவேற்றப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.

மேலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுபட்டதோடு ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்தவராவார். ஓர் நாடானது முன்னேர வேண்டுமாயின் அதற்கு ஒற்றுமையே அவசியமானதாகும் என வலியுறுத்தியவர் சர்தார் வல்லவாய் பட்டேல் ஆவார்.

சாதனைகள்

இவர் நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் அளப்பரியதாகவே காணப்படுகின்றது. மேலும் இவர் பல்வேறு சாதனைகளையும் பெற்றுள்ளார். அதாவது விவசாயிகளின் நலனுக்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கு பெற்றினார். இதன் காரணமாக மக்கள் இவரை சர்தார் என்றே அழைத்தனர்.

அதேபோன்று இந்திய விவசாயிகளின் ஆன்மாவாகவும் இவர் செயற்பட்டதோடு சுதந்திர போராட்டத்தின் சிற்பி எனவும் அழைக்கப்பட்டார்.

மேலும் குஜராத்தில் கேடா என்ற இடத்தில் நிலவிய பஞ்சத்தின் காரணமாக ஆங்கிலேயரிடம் வரிவிலக்கிற்காக விவசாயிகள் போராடினர். இச்சந்தர்ப்பத்தில் காந்தியுடன் பட்டேலும் வரிகொடாமை போராட்டத்தை தலைமை தாங்கி போராடினார்.

இதன் காரணமாக அரசு இவர்களுக்கு சார்பாக இணங்கியது என பல்வேறு சாதனைகளை படைத்தவராக இவர் காணப்படுகின்றார்.

இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்

இந்தியாவின் விடுதலைக்காக போராடியவருள் பிரதானமானதொரு நபராக இவர் காணப்படுகின்றார். இவர் காந்தியின் மீது பற்றுக் கொண்டவராக காணப்பட்டதோடு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அகிம்சை வழியில் போராடியவராவார்.

இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் செயற்பட்டதோடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கு பற்றி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டவராவார்.

முடிவுரை

சர்தார் வல்லவாய் பட்டேலின் சேவைகளானது இன்றும் எமக்கு ஒரு முன்னுதாரணமாகவே திகழ்கின்றது என்பதோடு மட்டுமல்லாது இன்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக வித்திட்டவர் என்ற வகையில் அவரை கௌரவிக்கும் முகமாக அவரது சிலைகள் குஜராத் மாநிலத்தில் காணப்படுவதானது இவருடைய சிறப்பினையே வெளிப்படுத்துகின்றது.

You May Also Like:

டிஜிட்டல் இந்தியா கட்டுரை

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்