சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

sutru sulal pathukappu katturai in tamil

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

இயற்கை என்பது இயற்கையால் கிடைக்கப்பெற்ற பெரும் கொடை ஆகும். நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமையாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுச்சூழல் அறிமுகம்
  3. சூழல் மாசடைதல்
  4. சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
  5. சூழலைப் பாதுகாப்போம்
  6. சூழல் பாதுகாக்க மாணவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
  7. சூழல் பாதுகாப்பு நடைமுறைகள்
  8. முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் சுற்றுப்புற சூழலானது தற்போது பல காரணிகளால் மாசடைந்து வருகின்றது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனும் போது எம்மை மட்டுமல்ல எமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுதே தூய நீர், தூய காற்று, தூய நிலம் என்பவற்றை மனிதன் பெற்று சுகமான வாழ்வை வாழ்வான். எனவே நாம் வாழும் சூழலை பாதுக்காக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்.

சுற்றுச்சூழல் அறிமுகம்

சுற்றுச்சூழல் என்பது எம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று என்பவற்றை உள்ளடக்கிய இயற்கை பரப்பாகும். இதில் காடுகள், கடல்கள் என பல்வேறு நிலபரப்புக்கள் உள்ளடங்கும்.

இவை மட்டுமல்ல புதுப்பிக்க முடியாத வளங்களாகிய கனிமங்கள், எரிபொருட்கள் போன்றவற்றையும் சுற்றுப்புற சூழலானது உள்ளடக்கி காணப்படுகின்றது.

இவ்வாறான இயற்கை சூழலில் பல்வேறுபட்ட உயிரினங்கள் அதாவது மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களும் நுண்ணுயிர்களும் இணைந்து வாழ்கின்றன.

இவ்வாறான உயிரினங்கள் வாழும் சூழலை பேணிப்பாதுகாத்தால் மட்டுமே பல ஆண்டுகளுக்கு இவ்வாறான உயிர்களின் பல்வகைமையை பாதுகாக்க முடியும். ஆகையால் பூமியில் வாழும் உயிரினங்களுக்காக நாம் சூழலை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.

சூழல் மாசடைதல்

இயற்கை அன்னையின் கொடையால் நிறைந்த சுற்றுப்புறச் சூழலானது இன்று பல்வேறு காரணங்களினால் மாசுபட்டு வருகின்றது. நிலம், நீர், காற்று போன்றவை அதிக மாசடைதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சுற்றுப்புற சூழலில் காணப்படும் உயிர்ப்பல்வகைமையும் பாதிக்கப்படுகின்றது.

சுற்றுப்புறச்சூழலின் ஒரு பகுதியான நீரை எடுத்துக்கொண்டோமானால் பூமியானது 71% நீரால் சூழப்பட்டு உள்ளது. இவை இன்று மானிட நடவடிக்கைகள் காரணமாக பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது.

உதாரணமாக இந்தியாவில் பாயும் நதிகளில் 70 சதவீத நதிகள் கழிவுகள் சேர்ந்து கலப்பட நீராக காணப்படுகின்றது. இவ்வாறான நீர் மாசானது கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதனாலும் கிருமி நாசினிகளை விவசாயத்தில் பயன்படுத்துவதாலும் நீர் மாசடைகின்றது.

மேலும் உக்கலடையாத பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினாலும் சட்ட விரோத மண் அகழ்வுகளை மேற்கொள்வதனாலும் நிலமானது அதிகம் பாதிப்படைகின்றது.

அனைத்து உயிர்களின் சுவாசத்தற்கு இன்றியமையாத வளியானது வாகனப்புகையின் காரணமாகவும் பொலித்தீன் பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதன் காரணமாகவும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாகவும் அதிகம் மாசடைகின்றது.

இவ்வாறு உயிர் அங்கிளின் வாழிடமான சுற்றுப்புற சூழலானது மனிதனின் பல்வேறு செயற்பாடுகளின் காரணமாக மாசடைகின்றது.

சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள்

சூழல் மாசடைவு என்பது நிலம், நீர், வாயு என மூன்று வகையாக மாசடைகின்றது. இவை மாசடைவதால் இவற்றில் தங்கி வாழும் உயிரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக உயிர்ப்பல்வகைமைத் தலம்பல் ஏற்படுகின்றது.

இவ்வாறு சூழல் மாசடைவதால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக நீர் மாசடைவதால் நீரில் வாழும் உயிரினங்கள் பாதிப்படைகின்றது. மேலும் நீர் மாசடைவதால் பலரும் நல்ல குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இந்நிலை இந்திய நாட்டில் அதிகமாக காணப்படுகின்றது.

மேலும் வாயு மாசடைதல் காரணமாக சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சுவாசம் சார்ந்த புற்று நோய்களும் ஏற்படுகின்றன.

நிலமானது மாசடைவதன் காரணமாக விவசாயம் பாதிப்படைவதோடு மேலும் பல பிரச்சனைகள் உண்டாகின்றன.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற வாக்கிற்கு இணங்க நாம் வாழும் சூழலை மாசுபடுத்திய நாமே அதன் பாதிப்பையும் அனுபவிக்கின்றோம். எனவே சூழலை பாதுகாத்தால் இப்பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.

சூழலை பாதுகாப்போம்

சூழல் என்பது நிலம், நீர், வளி மட்டும் அல்ல எம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள உயிரற்ற கூறுகள் அனைத்துமே சூழலில் உள்ளடங்கும். இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் சூழல் மாசடைவின் காரணமாக உயிர்களின் பல்வகைத்தன்மையும் மனித இனத்தின் வாழ்க்கைத் தகமையும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் சூழலானது அதன் உயிர்த்தன்மை மாற்றமடையாது பாதுகாக்கப்படல் வேண்டும். சூழல் பாதுகாப்பு என்பது நீர், நிலம், வளி என்பவற்றை பாதுகாப்பதோடு புதுப்பிக்க்கூடிய வளங்களை புதுப்பித்தல் ஆகும்.

அவ்வகையில் இன்று சூழலானது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினாலையே அதிகம் மாசடைகின்றன.

மேலும் விவசாயத்தில் இரசாயன உரப்பாவனைக்குப் பதிலாக இயற்கை உரப்பாவனையை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு நாம் சூழலை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு சூழலை மாசடையாமல் கையளிக்க வேண்டியது எமது கடமையாகும். ஆதலால் நாம் சூழலை பாதுகாக்க வேண்டும்.

சூழலை பாதுகாக்க மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் மாணவர்களும் சூழலை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் சூழல் மாசடைதனால் ஏற்படும் பாதிப்புக்களை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் சூழலை பாதுகாக்க முடியும்.

மேலும் சூழல் பாதுகாப்பு தொடர்பான சிறு நாடகங்களை வானொலி மற்றும் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்வதன் மூலம் சூழலை பாதுகாக்க முடியும். இவ்வாறு நாம் மேற்கொள்ளும்சிறு சிறு நடவடிக்கையின் மூலம் சூழலை பெரிய அளவில் பாதுகாக்க முடியும்.

சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சூழலை பாதுகாக்க தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்ல நாடுகள் ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சர்வதேசம் என்ற நிதியில் பல மாநாடுகள் நடாத்தப்பட்டு சூழல் பாதுகாக்கப்படுகின்றது. உதாராணமாக வியன்னா மாநாடானது சூழல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட மாநாடாகும்.

நாடுகளின் நடவடிக்கைகள் என்று நோக்கும் போது அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குளேரோ புளேரோ காபன் போன்றவற்றின் பயன்பாட்டில் கடுமையான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்திய நாட்டை பொருத்தமட்டில் எக்ஸ்னோரோ இன்டர்நேஷனல், சிறுதுளி, சூழல் கழகம், தேசிய பசுமைப்படை போன்ற அமைப்புக்களால் மரம் நடுதல், தரிசு நிலங்களை மேம்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு நாடுகள் ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சூழல் பாதுகாக்கப்படுகின்றது.

முடிவுரை

பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் சூழலை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் வாழும் சூழலை பாதுகாப்பான முறையில் கையளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

“வீடு வளம் பெறின் நாடு வளம் பெறும் நாடு வளம் பெறின் இவ்வுலகம் வளம் பெறும்”

அகவே அனைவரும் ஒன்றினைந்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்.

பசுமை எங்கோ! வளமை அங்கே!

You May Also Like:

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

கடல் வளம் பற்றிய கட்டுரை