செப்பேடுகள் என்றால் என்ன

seppedu in tamil

ஆரம்ப காலங்களில் அரசர்கள் தங்களது காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளில் பதிக்கும் முறைமையினை கையாண்டுள்ளனர்.

செப்பேடுகள் என்றால் என்ன

செப்பேடுகள் என்பது பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவழி (பரம்பரை), போர்க்குறிப்புகள், மரபுவழி கதைகள் போன்ற நிகழ்வுகளை பதித்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஓர் உலோகத் தகடே செப்பேடுகள் எனப்படும்.

இந்த செப்பேடுகளினூடாக எம்மால் ஆரம்ப காலம் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. செப்பேடுகளானவை ஓலைச்சுவடிகள் போன்று அழியாது காணப்படும்.

செப்பேடுகளின் முக்கியத்துவம்

செப்பேடுகளினூடாக ஒரு சமூகத்தின் வரலாற்றினையும் பண்பாட்டினையும் அறிந்து கொள்ள முடியும். அதாவது பண்டைய கால பண்பாடு, கலை, சமுதாயம், சமயம், பொருளாதாரம் போன்றவை பற்றி அறிந்து கொள்ள செப்பேடுகள் உதவுகின்றன.

செப்பேடுகளில் காணப்படும் செய்திகளானவை மிகவும் கவித்துவம் வாய்ந்ததாக அமைந்து காணப்படும். அதாவது ஒரு விடயம் பற்றி மிகவும் கவிநயமாக குறிப்பிடப்பட்டு காணப்படும்.

பண்டைய காலங்களில் நிலதானம் பெற்றவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த செப்பேட்டினை காட்டி அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.

பண்டைக்கால அரசனுடைய பெயர், அவரிடம் தானம் பெற்றவர் மற்றும் இச்செய்தியை கவிதை வடிவாக சொன்ன புலவர் என அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக செப்பேடானது காணப்படும். இதனூடாக எம்மால் ஆரம்ப காலகட்ட நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் நாட்டு பல்லவர் செப்பேட்டிற்குகும் ஆந்திர கர்நாடக பகுதியில் கிடைத்த செப்பேட்டிற்க்கும் இடையிலான வேறுபாடுகள்

தமிழ் நாட்டில் கிடைக்கப் பெற்ற பல்லவர் செப்பேடுகளுக்கும் ஆந்திர கர்நாடக பகுதியில் கிடைத்துள்ள செப்பேடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றது.

அதாவது ஆந்திர பகுதியில் கிடைக்கப் பெற்ற சாசனங்கள் கொடையளித்த மன்னனையும் சேர்த்து நான்கு தலைமுறையினரை பற்றி கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற செப்பேடுகளானவை கொடையளித்த மன்னனையும் அவரது முன்னோர்களையும் புராண பரம்பரையையும் பற்றி கூறியுள்ளது.

ஆந்திர பகுதிகளில் கிடைக்கப் பெற்ற செப்பேடுகளில் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதோடு அச்செப்பேடானது எந்தப் பருவத்தில் வெளியிடப்பட்டது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வேனிற்காலமா, மழைக்காலமா, பனிக்காலமா என்பது பற்றி அச்செப்பேட்டில் தரப்பட்டிருக்கிறது. ஆனால் இத்தகைய முறை தமிழ் பகுதியில் கிடைக்கப் பெற்ற செப்பேடுகளில் காணப்படவில்லை.

மேலுள்ளவாறு இந்த இரண்டு பகுதியிலும் கிடைக்கப் பெற்ற செப்பேடுகளானவை வேறுபாடுகளை கொண்டுள்ளன.

செப்பேடுகளின் அமைப்பு

செப்பேட்டின் அமைப்பினை பார்த்தோமேயானால் செம்பு கட்டிகளை உருக்கி அடித்து பட்டைகளாக செய்வார்கள். மேலும் அதன் மேற்பரப்பில் விபரங்களை ஒரு பண்டிதர் எழுத்தால் எழுதுவார். பின்னர் பட்டயங்கள் நன்கு காய்ந்த பிறகு எழுத்தின் மேல் உளி கொண்டு செதுக்குவார்கள். இவ்வாறு செய்ததன் பின்னரே செப்பேடுகளாக காணப்படும்.

செப்பேடுகளின் ஒரு முனையில் துளையிட்டு அதில் மிகப் பெரிய வளையத்தின் மூலம் பிற இதழ்கள் இணைத்து காணப்படும். அதன் முகப்பானது வட்டவடிவில் அரச முத்திரையை தாங்கி காணப்படும்.

சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பேடுகளில் இதுவரை 19 செப்பேடுகள் கிடைத்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். அந்தவகையில் பல்வேறு மன்னர்கள் செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர் எனலாம்.

செப்பேடுகளானவை பண்டைக்கால சமூகத்தினருடைய வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்களது காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த முறைமையாக செப்பேடுகளானவை அமைந்துள்ளன.

You May Also Like:

ஐம்பொன் யாவை

சோழர்களின் தலைநகரம் எது