தத்துவம் என்றால் என்ன

thathuvam enral enna

இன்றைய கால கட்டத்தில் பல்வேறு தத்துவ கருத்துக்கள் எம்மை ஆட்கொண்டு வருவதனை காணக் கூடியதாக உள்ளது. பல்வேறு கருத்துக்களை கொண்டமைந்ததாகவும் தத்துவங்கள் வாழ்க்கையில் தாக்கம் செலுத்த கூடிய தொன்றாகவும் திகழ்கின்றது.

தத்துவம் என்றால் என்ன

தத்துவம் பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக தத்துவம் என்றால் என்னவென்று நோக்குவோமேயானால் அறிவில் விருப்பமும் உண்மையை தேடுவதில் ஆர்வமும் என்பதனையே தத்துவமாக கொள்ளலாம். தத்துவத்தினை ஆங்கிலத்தில் philosophy என்று குறிப்பிடுகின்றனர்.

தத்துவத்தின் அவசியம்

எமது வாழ்க்கைக்கான அர்த்தத்தினை சரியாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கு தத்துவமானது துணைபுரிகின்றது. நாம் ஒரு விடயத்தை பற்றி ஆழமாக சிந்தித்து செயற்படுவதற்கு தத்துவமானது துணையாக அமையும்.

தன்னைப் பற்றிய தெளிவினை ஒரு மனிதன் பெற்றுக் கொள்ள தத்துவமானது அவசியமாகின்றது. இதனுடாக ஒழுக்க பண்புகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய நல்ல இயல்புகளை வளர்த்துக் கொள்ளவும் தத்துவமானது அவசியமாகின்றது.

கல்வி ரீதியான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் பற்றிய விடயங்களை சிந்திப்பதற்கு தத்துவமானது அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.

வெளிப்படையான மற்றும் தகவல் தொடர்பாடல் வளர்ச்சிக்கு தத்துவமானது துணைபுரிகின்றது. அதாவது கடினமான விடயத்தினை இலகுவாக விளக்க கூடிய விதத்தில் தத்துவமானது அமைந்து காணப்படுகின்றது. மேலும் தமது எழுத்து மற்றும் பேச்சுக்களில் தெளிவற்ற தன்மையினையும் தெளிவுபடுத்த துணைபுரிகின்றது.

கல்வியும் தத்துவமும்

தத்துவமானது இன்று கல்வித்துறையிலும் இடம் பெறுவதை காணக் கூடியதாக உள்ளது. ஏனெனில் தத்துவத்தில் காணப்படும் ஒழுக்கப் பண்புகளானது கல்வித்துறையிலும் காணப்பட கூடியதாக உள்ளது. இவ்வாறாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்வித்துறையில் தத்துவமானது செல்வாக்கு செலுத்துகின்றதனை காணலாம்.

தீர்மானம் ஒன்றை முன் கூட்டியே மேற்கொள்ளுதல் என்பது தத்துவத்தில் ஒரு பகுதியாக காணப்படும் ஒரு தொழிற்பாடாகும். இன்று கல்வித்துறையில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பிள்ளைகளின் விருத்திக்கு சரியான முறையில் வழிகாட்டல் நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தலினை கல்வியிலும் அவதானிக்க முடிகின்றது.

மனித வாழ்வின் பிரச்சினைகளை இனங் கண்டு கொள்வதற்கு தத்துவம் எவ்வாறு பங்காற்றுகின்றதோ அதே போன்று கல்வியும் அதனோடு இணைந்து செயற்படுவதை காணலாம்.

கல்வியின் நோக்கம் மற்றும் குறிக்கோளினை சரியான முறையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தத்துவமானது மிகவும் அவசியமாகின்றது.

அந்த வகையில் கல்வி மற்றும் தத்துவமானது ஒன்றோடொன்று இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தத்துவமின்றி கல்வி இல்லை என்று கூறும் அளவிற்கு கல்வியும் தத்துவமும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றதனை நோக்க முடியும்.

ஆகவே தான் மனிதனானவன் வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏதோவொரு வகையில் தத்துவத்தினை பின்பற்றக் கூடியவனாகவே காணப்படுகின்றான்.

இவ்வாறாகவே தத்துவமும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு சொல்லாக அமைந்து காணப்படகின்றமை குறிப்பிடதக்கதாகும். மேலும் இன்றைய காலகட்டத்தில் கல்வியில் தத்துவத்தினுடைய செல்வாக்கு அதிகமாகவே தாக்கம் செலுத்துவதனை காணமுடிகின்றது.

மனிதனுடைய வாழ்க்கையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏதாவதொரு வகையில் தத்துவமானது தாக்கம் செலுத்தி வருகின்றமையினை குறிப்பிடலாம்.

ஏனெனில் அவனுடைய வாழ்க்கை வழிமுறை, பழக்கவழக்கங்கள், கருத்துக்கள் போன்ற பல செயற்பாடுகளில் தத்துவமானது இணைந்து செயற்படுகின்றது.

இன்றைய கல்வியில் தத்துவமானது பல்வேறு வகையில் தாக்கம் செலுத்துவதனை காணக்கூடியதாக உள்ளது.

You May Also Like:

சொல் என்றால் என்ன

படபடப்பு குறைய வழிகள்