தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி

tamilil naveena ilakiyathin valarchi

கல் தோன்றி மண் தோன்றும் முன்னரே தோன்றிய மொழி தமிழ்மொழி ஆகும். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழிக்கு என்று பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

அத்தகைய தமிழ் மொழி இன்று பல்வேறு வகைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய இந்த பதிவில் நாம் தமிழ்மொழியின் நவீன இலக்கியங்களின் விரிவான ஆய்வினைப் பார்ப்போம்.

நவீன இலக்கியம் என்பதன் வரையறை

தொழில் நுட்பங்களின் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றமே இன்றைய நவீன வாழ்க்கைக்கான அடித்தளமாகக் காணப்படுகின்றது.

அவ்வாறு இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு அடிப்படை அம்சங்களில் இருந்து உருவாகிய எழுத்து முறைமையே நவீன இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது.

தொழிற்புரட்சி பல துறைகளில் உலகப்போரின் பின்னர் உருவானது. குறிப்பாக பெருந்தொழில் உற்பத்திமுறை, போக்குவரத்து துறை, தொடர்பாடல், அச்சுப்பதிப்பு போன்ற துறைகளில் பாரிய வளர்ச்சியே பின்னாளில் இலக்கியங்களின் நவீன வளர்ச்சிக்கும் மூலமாக அமைந்தது.

சமூகத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றம் கல்வித் துறையை சீரமைத்தது. ஏனெனில் அதுவரை காலமும் வெவ்வேறு கல்வி அவரவர் குடித்தொழிலை அடிப்படையாக வைத்தே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் ஏற்பட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எல்லோருக்கும் பொதுவான ஒரு கல்விச் சமூகம் உருவாக்க வேண்டும் என்ற கொள்கை உருவானது.

இதனால் எல்லோருக்கும் பொதுவான கல்வி வழங்கப்பட்டது. முடிவில் எல்லோரும் ஒரே அறிவினை உடைய பொதுவான கல்விச் சமூகம் தோற்றம் பெற்றது. பொதுவான கல்விச் சமூகத்தில் அவர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களே நவீன இலக்கியங்கள் என அழைக்கப்பட்டன.

பழைய இலக்கியங்களுக்கும் புதிய இலக்கியங்களுக்குமான வித்தியாசங்கள்

இந்த நவீன இலக்கியங்கள் பொதுவாக அனைவரையும் நோக்கி எழுதப்படுகின்றது. ஆனால் பண்டைய தமிழ் இலக்கியங்கள் தனிப்பட்ட ரீதியாக அதனைக் கற்க வருபவர்களை மட்டும் நோக்கி எழுதப்பட்டுள்ளன.

நவீன இலக்கியங்கள் வாசகர்களைத் தேடிக் கிடைக்கின்றன. அத்துடன் இவை நேரடியாக அச்சு வடிவிலோ அல்லது மென்நகல் வடிவிலோ வாசகர்களை வந்தடைகிறது. ஆனால் பண்டைய கால இலக்கியங்கள் சுவடி வடிவில் காணப்பட்டன.

இந்த நவீன இலக்கியங்கள் ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. ஆனால் பண்டைய கால இலக்கியங்களில் அக்காலத்தில் அரசாட்சி புரிந்த மன்னர்கள் மற்றும் அவற்றுடன் சார்ந்த நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தன.

நவீன தமிழ் இலக்கியத்தின் வகைகள்

நவீன தமிழ் இலக்கியத்தை விமர்சகர்கள் மூன்று வகைகளாக பிரித்தனர். உள்ளடக்கம், அழகியல், வாசிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட்டன.

1850 தொடக்கம் 1900வரை இலக்கிய உருவாக்க காலம் என்று 1900க்கு பிந்தைய காலம் பொது வாசிப்பு எழுத்துக்கள் மற்றும் நவீன இலக்கியம் எனவும் பிரிக்கப்பட்டது.

உருவாக்க கால எழுத்துக்கள்

இந்தக்கால எழுத்துக்கள் ஆங்கில மொழியிலான புனை கதைகளை தமிழில் மொழி பெயர்த்தே உருவாக்க கால எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. இந்தக்கால எழுத்துக்கள் மரபு வழி வந்த கதை சொல்லல் முறை எழுத்து வழியிலான உரைநடை இலக்கிய முயற்சிகளின் மூலம் உருவாக்க கால எழுத்துக்கள் உருவாகின.

பொது வாசிப்பு எழுத்து

பொது வாசிப்பு எழுத்துக்கள் வணிக நோக்கத்தில் உருவாக்கம் பெற்றன. அச்சுத் தொழில் வளர்ச்சி பெற்ற போது மர்மம், வரலாறுகள், திகில், திருப்பங்கள், பரபரப்பான நிகழ்வுகள், மெல்லுணர்வுகள் போன்ற உணர்வுகளை அடிப்படையாக வைத்து புனைகதைகள் இதழ்கள் வாயிலாக வெளிவந்தன.

நவீன இலக்கியம்

நவீன இலக்கியம் என்பது முழுக்க முழுக்க வாசகரை மையமாக வைத்தே உருவாக்கம் பெற்றன. இத்தகைய தமிழ் இலக்கியத்தின் வகைகளையும் அவற்றின் புரிதல்களையும் விவாதிக்கும் அறிஞர்கள் இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

You May Also Like:

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை