திருக்குறள் குறிப்பு வரைக

thirukkural kurippu in tamil

சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே திருக்குறள் ஆகும். உலக மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இன, மதம், மொழி, சாதி பேதமின்றி திருக்குறள் கூறுவதனால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகின்றது. திருக்குறளை இயற்றியவர் பொய்யாமொழி புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் ஆவார்.

திருக்குறள் எனப் பெயர் வரக் காரணம்

திருக்குறள் என்ற சொல்லை திரு+குறள் என பாகுபடுத்தலாம். திரு என்பது செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை என்று பொருள்படும். குறல் என்றால் குறுகிய அடிகளை உடையது. ஆகவே, குறுகிய அடியை கொண்ட அமைவதனால் இந்நூலுக்கு திருக்குறள் என பெயர் வந்தது. இரண்டடியில் உலக கருத்துக்களை கூறும் ஒரே ஒரு நூல் திருக்குறளாகும்.

திருக்குறள் நூல் அமைப்பு

திருக்குறளானது குறட்பாவினாலான நூலாகும். திருக்குறளானது கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

திருக்குறளானது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சுய சிந்தனை திறனால் இயற்றப்பட்ட நூலாகும்.

திருக்குறளில் 133 அதிகாரங்களும் ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறல்கள் என 1330 குறள்களும் ஒன்பது இயலும் கொண்டு காணப்படுவதோடு 12000 சொற்களும் 42,194 எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழில் காணப்படும் எழுத்துக்களான 247 எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் மட்டுமே இடம்பெறவில்லை.

திருக்குறளானது மூன்று பாவகையினால் ஆனது அவையாவன அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பனவாகும். இதனாலேயே திருக்குறளுக்கு முதன் முதலில் முப்பால் நூல் என்ற பெயர் வந்தது. திருக்குறளின் அதிகாரங்கள் “அ” வில் தொடங்கி “ன” வில் முடிகின்றது.

இந்நூலில் 50க்கு மேற்பட்ட வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் 1812 இல் முதன்முதலில் அச்சிடப்பட்டது. இதனை அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர் ஆவார். திருக்குறளானது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு

திருக்குறளானது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர் ஜி.யு போப் ஆவார். லத்தின் மொழியில் 1730 வீரமாமுனிவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

திருக்குறளானது 14 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது இடத்தில் திருக்குறள் காணப்படுகின்றது.

திருக்குறளுக்கு உரை எழுதியோர்

  • தர்மர்
  • மணக்குடவர்
  • தாமத்தர்
  • நட்சத்திரம்
  • பரிதி
  • பரிமேலழகர்
  • திருமலையர்
  • மள்ளர்
  • பரிப்பெருமாள்
  • காளிங்கர்

இவ்வாறு திருக்குறளுக்கு பலராலும் உரை எழுதப்பட்டது. முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார். எது எவ்வாறாயினும் திருக்குறளின் சிறப்பான உரை எனப்படுவது பரிமேலழகரின் உரையாகும்.

திருக்குறளின் வேறு பெயர்கள்

  • பொதுமறை
  • வான்மறை
  • முப்பால்
  • தெய்வ நூல்
  • தமிழ்மறை
  • ஈரடி நூல்
  • உலகப் பொதுமறை
  • பொய்யா மொழி
  • வாயுறை வாழ்த்து

திருக்குறளின் சிறப்பு

விக்டோரியா மகாராணியால் கண் விழித்ததும் முதல் முதலில் படித்த நூல் திருக்குறள் ஆகும்.

உலகெங்கும் பயன்பாட்டில் காணப்படும் நூல் இதுவாகும்.

இந்திய ஆசிய ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் காணப்படும் அருங்காட்சியத்தில் திருக்குறள் விவிலிய வேதத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சிறப்புகளைக் கொண்ட நூலே திருக்குறளாகும்.

You May Also Like:

பா வகையால் பெயர் பெற்ற நூல்

புறநானூறு குறிப்பு வரைக