தொழிலாளர் தினம் கட்டுரை

tholilalar dhinam katturai in tamil

உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தில் உழைப்புக்கான முக்கியத்துவம் தொழிலாளர்களுக்கான அங்கீகாரமும் வெளிப்படுத்தப்படுகின்றது.

தொழிலாளர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தொழிலாளர் தினத்தின் தோற்றம்
  3. தொழிலாளர்களின் முக்கியத்துவம்
  4. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பு
  5. நாட்டில் தொழிலாளர்களின் பங்கு
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் உள்ள ஒவ்வொரு உழைப்பாளியும் கௌரவிக்கும் முகமாகவே மே முதலாம் திகதி உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதாவது இந்த உலக இயக்கத்தில் மனிதர்களின் உழைப்பு இன்றி வாழ்தல் கடினமான ஒன்றாகும்.

ஆனால் உலக இயக்கத்துக்கு உதவும் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதில் எப்பொழுதும் சிரமத்துடனே வாழ்நாளை கழித்து வருகின்றனர். எனவே இந்த தொழிலாளர்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

தொழிலாளர் தினத்தின் தோற்றம்

ஆரம்ப காலங்களில் முதலாளி வர்க்கத்தினால் இந்த தொழிலாளி வர்க்கம் சுரண்டப்பட்டதோடு மிகை உற்பத்தி செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதாவது தாம் உழைக்கும் நேரத்தை விட ஊதியம் எதுவும் இன்றி அதிகமான நேரம் ஊழியம் செய்வதற்கு தூண்டப்பட்டனர் இதன் வெளிப்பாடாகவே 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொழிலாளர்களின் நலன்களை கருதி ஏராளமான தொழிலாளர்கள் ஒரு போராட்டத்தை மேற்கொண்டு அதன் மூலம் வெற்றியையும் அடைந்தனர்.

இந்த வெற்றியினை நினைவு கூறும் வகையிலேயே இன்றுவரையும் மே முதலாம் தேகதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

தொழிலாளர்களின் முக்கியத்துவம்

ஒவ்வொரு நாட்டினதும் இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் தொழிலாளர்கள் இன்றியமையாத முக்கியத்துவம் பெறுகின்றனர்.

அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள், உணவு வகைகள், போக்குவரத்து சாதனங்கள், விவசாய உபகரணங்கள், தொழில்நுட்ப கருவிகள் போன்ற அனைத்துமே இந்த தொழிலாளர்களின் உழைப்பு இன்றி நாம் இவற்றை அனுபவிக்க முடியாது.

அதாவது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு சக்தியாகவே இந்த தொழிலாளர்கள் காணப்படுகின்றார்கள்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பு

“செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப தொழில் புரியக்கூடிய ஒவ்வொரு தொழிலாளர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே.

அதாவது சமூகத்தில் பிறழ்வு நடத்தை கொண்டவர்களை (திருடுதல், மோசடி செய்தல்) தான் நாம் எதிர்க்க வேண்டுமே தவிர தொழிலாளர்களை ஒருபோதும் எதிர்க்க கூடாது.

இன்றைய சமூகங்களில் தொழில்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு தாழ்வான தொழில்களை செய்யக்கூடியவர்கள் இழிவானவர்களாகவும் உயர்வான தொழில்களை செய்யக்கூடியவர்கள் மதிக்கத்தக்கவர்களாகவும் மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் இவ்வாறான நடைமுறைகளை களைந்து உழைப்பில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு தொழிலாளர்களையும் நாம் மதித்து நடப்பது எமது கடமையாகும்.

நாட்டில் தொழிலாளர்களின் பங்கு

ஒவ்வொரு நாட்டினிடமும் பொருளாதார சக்தியாக இந்த தொழிலாளர்கள் கருதப்படுகின்றனர். அதாவது நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்கு இன்றியமையாததாகும்.

தொழிலாளர்கள் உழைக்காது விட்டு விட்டால் அந்த நாட்டின் பொருளாதாரமே முடங்கிப் போய்விடும். எனவே குறிப்பிட்டதொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு தொழிலாளர் வர்க்கத்தின் கைகளிலேயே தங்கி உள்ளது.

“உழைப்பாளி இல்லாத நாடுதான் உலகில் எங்குமே இல்லை” என்ற வாசகத்துக்கு அமைய ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் பங்கு மகத்துவமானது.

முடிவுரை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்துக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கமாகிய இந்த தொழிலாளர்கள் போற்றத்தக்கவர்களே. அவர்களை நினைவு கூறக்கூடிய மே தினம் என்பதும் சிறந்த ஒரு நாளாகவே உள்ளது.

அதாவது நாட்டினுடைய வளர்ச்சி பாதையில் கூடவே நடை போடும் மதிக்கத்தக்க வர்க்கமாகவே தொழிலாளர் வர்க்கம் காணப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆகவே தொழிலாளர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவத்தினையும் அளிப்பது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like:

மகளிர் தினம் கட்டுரை

புயல் பற்றிய கட்டுரை