மரபுதொட்டு காணப்பட்ட பண்டைய விவசாயம் முறைகள் இன்று எமது சமூகத்தில் இருந்து படிப்படியாக குறைவடைந்து நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உயிரின் ஆதாரமாகிய விவசாயத் துறையும் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வந்துள்ளது. இவ்வாறான வளர்ச்சியே நவீன விவசாயம் எனப்படுகின்றது.
நவீன விவசாயம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தின் முக்கியத்துவம்
- நவீன விவசாயத்தில் தொழில்நுட்பதின் பங்கு
- நவீன விவசாயத்தின் நன்மைகள்
- நவீன விவசாயத்தின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படும் விவசாயம் என்பது விளைநிலங்களில் உணவுக்காகவும் பிற தேவைக்காகவும் தானியங்கள், பயிர்கள் என்பவற்றை உற்பத்தி செய்வவதோடு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை இணைத்ததாகவே காணப்படுகின்றது.
இந்த விவசாய துறையானது இன்று பல்வேறு காலகட்டங்களைக் கடந்து நவீன விவசாயத்தில் சிறப்புற்று விளங்குகின்றது.
விவசாயத்தின் முக்கியத்துவம்
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனதும் அத்தியாவசிய தேவையான உணவை வழங்குவதாகவே விவசாயம் காணப்படுகின்றது.
அதாவது “படைத்தவன் மட்டுமே இறைவன் அல்ல மற்றவர் பசிக்காக உழைப்பவனும் இறைவன்தான்” என்று கூற்றுக்கு அமைவாக விவசாயம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.
மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் விவசாயம் செல்வாக்குச் செலுத்துகின்றது.
நவீன விவசாயத்தில் தொழில்நுட்பதின் பங்கு
ஆரம்ப காலங்களில் இயற்கையான முறைகளைக் கொண்டு மண்ணைப் பயன்படுத்தி செய்யப்பட்ட விவசாய முறையானது இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கூலியாட்களின் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகவே இந்த நவீன விவசாய முறைகள் காணப்படுகின்றன.
இதில் மண்ணைப் பதப்படுத்துதல், நாற்றுகள் நடுதல், களை அகற்றுதல், உரமிடுதல் மற்றும் பயிர் அறுவடை செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகின்றன.
நவீன விவசாயத்தின் நன்மைகள்
நவீன விவசாய முறைகளில் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாட்டினால் நேர முகாமைத்துவம் பேணப்படல், வேலையாட்களின் தேவை குறைவடைதல், குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் பெறுதல்,
சிறந்த நீர்ப்பாசன முறை மற்றும் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளை நவீன விவசாயத்தின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
நவீன விவசாயத்தின் தீமைகள்
நவீன விவசாய முறைகளில் நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் காணப்படவே செய்கின்றன.
அந்த வகையில் அதிகமான விளைச்சலைப் பெரும் நோக்கில் அதிகமாக இரசாயன பதார்த்தங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதனால் மனிதனின் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய நோய்கள் ஏற்படுதல், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் நீர்நிலைகளில் கலப்பதனால் நீர் நச்சுத்தன்மையாகுதல், நீர் வாழ் உயிரினங்கள் உயிரிழத்தல் மற்றும் பயிர் நிலங்கள் வளம் குன்றுதல் போன்ற பல்வேறு தீமைகளும் நவீன விவசாயத்தில் உள்ளன.
முடிவுரை
பண்டைய காலம் தொட்டு இன்று வரைக்கும் வளர்ந்து வரும் விவசாய துறையானது சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக நவீன விவசாயமாக இன்று மாற்றம் கண்டுள்ளது.
இந்த விவசாயமானது அனைத்து மக்களாளும் மதிக்கப்படக்கூடிய ஒன்றாக இருப்பதோடுஇ நவீன விவசாயத்தின் நன்மை, தீமைகளையும் நாம் அறிந்து செயற்பட வேண்டும்.
You May Also Like: