நாவல் சிறுகதை நாடகம் போன்ற துறைகளில் தமிழை வளர செய்தவர்கள்

தமிழ் வளர்ப்பதற்கு முன்பிருந்த ஆசிரியர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவ்வாறுதான் நாவல் சிறுகதை, நாடகம் போன்ற துறைகளையும் பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது.

அனேகமான கலைஞர்கள், ஆசிரியர்கள் இந்த மூன்று துறைகளிலும் கூடத்தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். கல்கி, மு.வரதராசன் போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். பாமர மக்கள் கூட அறியும் வகையில் இவர்களின் படைப்புக்கள் காணப்பட்டன.

நாவல்

நாடகங்களைத் தமிழில் புதினம் என்றும் அழைப்பர். தமிழிலே முதன்முதலில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும். இதனை எழுதியவர் மாயூராம் வேதநாயகம் பிள்ளை ஆவார். இது 1857 இல் எழுதப்பட்டு 1879 ஆண்டளவில் அச்சிடப்பட்டதாகும்.

சிறுகதைகள்

சிறுகதைகளின் தோற்றத்தினை நோக்கின், இது 18 ஆம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக வீரமாமுனிவரால் எழுதப்பட்ட பரமார்த்த குரு எனும் சிறுகதையைக் கூறலாம். அதுமட்டுமல்லாது தமிழில் பாரதியார், புதுமைப்பித்தன் போன்றோரும் சிறுகதைகளை எழுதியுள்ளனர்.

நாடகம்

நாடகம் என்பது நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலையாகும். நாடக வழக்கியலும், உலகியல் வழக்கியலும் எனும் நாடகமானது தமிழ் நாடகத் தொன்மையை வெளிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி சிலப்பதிகாரத்திலும் நாடகப் பண்பைப் பற்றிக் கூறுவதனையும் அக்கால கட்ட நாடகங்கள் காணப்பட்ட விதத்தை விபரிப்பதையும் காணலாம்.

நாவல், சிறுகதை, நாடகம் போன்ற துறைகளின் ஊடாக தமிழை வளர்த்தவர்கள்

தமிழ்நாட்டில் கதை கேட்கும் வழக்கமே முதலில் இருந்தது. அதன் பின்னர் சிறுகதைகள் தேற்றம் பெற்றதன் பின்னர் குறிப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டதன் காரணத்தால் படிக்கும் வழக்கமும் உருவானது.

அந்தவகையில் முதன்முதலில் அச்சில் வெளிவந்தது வீரமாமுனிவரின் “பரமார்த்த குருவின் கதை” ஆகும். இதனைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை தமிழில் அச்சாகின.

மேலும் வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்ட குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்க்கரசியின் காதல் போன்ற கதைகளின் நிகழ்வு ஒருமை, பாத்திர ஒருமை, கால ஒருமை உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்கே உரித்தான இலக்கணத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கல்கிக்கு நாவல், சிறுகதை இரண்டின் மூலமும் தமிழை வளர்த்தில் முக்கிய பங்கு உண்டு எனலாம். இவை தமிழர்களின் வரலாறு மற்றும், தமிழ் மொழி அக்காலத்தில் காணப்பட்ட விதத்தையும் வெளிக்கொண்டு வருவதாக அமையப் பெற்றுள்ளன. இவற்றிற்கு உதாரணமாக “பொன்னியின் செல்வன்” எனும் நாவலானது முதன்மை வகிக்கின்றது.

இதில் சோழ இராட்சிய மன்னர்களுக்கும், பாண்டிய நாட்டு மன்னர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர் மன்னர்களின் காதல் போன்றவற்றையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தமிழர்களின் வீரம், வாழ்வியல் முறைகள் போன்றவை பறைசாற்றப்படுவதனை அறியமுடிகின்றது.

மேலும் இவர் எழுதிய சிறுகதையை நோக்கின் “கேதாரியின் தாயார்” எனும் சிறுகதை மிகவும் சிறப்பிற்குரியதாகும். இதில் கிராமப்புற மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள், பண்பாடுகள் போன்றவற்றை அறியக் கூடியதாக உள்ளது. அத்துடன் இவரால் எழுதப்பட்ட “திருடன் மகன் திருடன்”, “கணையாளியின் கனவு” போன்ற சிறுகதைகளும் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளதனைக் காணலாம்.

பரிதிமாற் கலைஞர் அவர்கள் நாடகம் வளர்த்தல், படித்தல், இலக்கணம் வகுத்தல் எனும் மூன்று பணிகளை ஆற்றி தமிழை வளர்க்க உதவினார். சங்கரதாசு சுவாமிகள் என்பவர் 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நாடகத்துறையை நலிவடையாமல் காத்ததால் இவரைத் தமிழ் நாடகத் தணைமை ஆசிரியர் என்று அழைக்கின்றனர்.

You May Also Like:

புதுக்கவிதை என்றால் என்ன

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை