நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 கட்டுரை

nugarvor pathukappu sattam 2019 in tamil katturai

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எனப்படுவது, விற்பனையாளர்களால் பொருட்களின் மீதோ, சேவைகளின் மீதோ தன்னிச்சையாக காணப்படும் அதிகாரங்களை குறைத்து, நுகர்வோருக்கும் அந்த பொருட்களின் அல்லது சேவைகளின் மீது அதிகாரத்தினை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஓர் நடைமுறையாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நுகர்வோர் என்றால் யார்
  • 2019 – நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் புதிய விதிகள்
  • இச்சட்டத்தின் கீழ் நுகர்வோருக்கான உரிமைகள்
  • இச்சட்டத்தின் மூலம் நுகர்வோர் அடையும் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

1986ல் கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் குறைபாடுகள் காரணமாகவும் அதில் மேலதிக திருத்தங்கள் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவாகவும் 2019ஆம் ஆண்டு அப்போதைய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்த ராம் விலாசு என்பவரால் மக்களவையில் முன்மொழிபட்டு 2019 ஜூலை 30 ஆம் தேகதி புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பொருட்கள் அல்லது தேவைகளை சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் செய்தல் என்பவற்றுடன் தொடர்பாகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நுகர்வோர் என்றால் யார்

2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 2( 7)ம் பிரிவு நுகர்வோர் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அதாவது எந்த ஒரு பொருளையும் அல்லது சேவையையும் வாங்குபவர் அல்லது வாடகைக்கு எடுப்பவர் அல்லது உபயோகப்படுத்துபவர்கள் நுகர்வோர் எனப்படுகின்றனர்.

2019 – நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் புதிய விதிகள்

நுகர்வோருக்கு அதிகளவான பாதுகாப்பை வழங்கும் நோக்கில், 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் சில விதிகளை தொடர்வதோடு மேலும் சில புதிய விதிகளை இணைத்ததாகவே 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேரடி விற்பனை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுதல், தயாரிப்பு சார் பொறுப்பு மீது கடுமையான விதிமுறைகள், விளம்பரங்கள் மீதானே கடுமையான விதிமுறைகள், நியாயமற்ற வர்த்தகம், நியாயமற்ற ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கான தீர்வுகள் போன்ற புதிய விதிகள் இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின் கீழ் நுகர்வோருக்கான உரிமைகள்

2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோர் ஆறு வகையான உரிமைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

அந்த வகையில் தேர்ந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பாதுகாப்பு சார் உரிமை, குறைதீர் உரிமை, நுகர்வோர் விழிப்புணர்வுக்காண உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை போன்றன அவையாகும்.

இச்சட்டத்தின் கீழ் இவ்வாறான உரிமைகளை பயன்படுத்தி நுகர்வோர் தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இச்சட்டத்தின் மூலம் நுகர்வோர் அடையும் பயன்கள்

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், நுகர்வோர் போலியான சேவைகள் மற்றும் பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர், தன்னிச்சையான பொருட்களின் மீது வணிகர்களுக்கான அதிகாரம் குறைக்கப்படுகின்றது,

மோசமான பொருள் அல்லது சேவையின் காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காப்பீடு வழங்கித் தருவதாக அமைகின்றது, பாதிக்கப்பட்ட நுகர்வோர் இலகுவில் நிவாரணம் காண்பதற்கான வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது மற்றும் பொருட்கள் அல்லது சேவைகளின் மீதான நம்பிக்கையை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதாகவும் காணப்படுகின்றது.

முடிவுரை

பொருட்களை அல்லது சேவைகளை நுகரும் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பானதாகவும், ஆதரவானதாகவுமே இந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் காணப்படுகின்றது. இதன் மூலம் அரசாங்கம் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை உருவாக்கியுள்ளது.

எனவே இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது ஒரு முற்போக்கானதும், நுகர்வோருக்கு நன்மை பயக்கக் கூடியதும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனலாம்.

You May Also Like:

நுகர்வோர் மன்றம் கட்டுரை