நுகர்வோர் மன்றம் கட்டுரை

nugarvor mandram katturai in tamil

இந்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக அரசின் உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் மாநிலத்தின் நுகர்வோர் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை கவனிக்கும் ஒருங்கிணைப்பு துறைகளாக செயல்பட்டு வருகின்றன.

நுகர்வோர் மன்றம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நுகர்வோர் என்பவர்
  • நுகர்வோர் தினம்
  • நுகர்வோர் உரிமைகள்
  • நுகர்வோர் குறைகளுக்கான சட்டப்படியான தீர்வுகள்
  • நுகர்வோர் மன்றங்களின் தொலைநோக்குப் பார்வை
  • முடிவுரை

முன்னுரை

பிறந்தது முதல் நமது வாழ்நாள் முழுவதும் நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வோர்களாகவே இருக்கின்றோம். நாம் உணவு, மருந்து வகைகள், துணி வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொலைபேசி வசதி போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்துகின்றோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்; நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், நுகர்வோர்களுக்கான மன்றம் என பல்வேறு சேவைகளையும் உரிமைகளையும் அமைத்துள்ளது.

நுகர்வோர் என்பவர்

பொருட்களையோ அல்லது சேவைகளையோ விலை கொடுத்தோ, வாக்குறுதி கொடுத்தோ, அல்லது ஒரு பாதிப்பணம் செலுத்தி மறுபாதி வாக்குறுதி கொடுத்தோ பொருட்களை வாங்கி பயன்படுத்துபவரையும், சேவைகளை அனுபவிப்பவரையும் நுகர்வோர் என அழைக்கின்றனர்.

அதாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் கொடுத்து பொருள்களை வாங்குபவர்களாகவும் சேவைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் நுகர்வோர்கள் ஆவோம்.

தேசிய நுகர்வோர் தினம்

தேசிய நுகர்வோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததன் நினைவாக தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடி என்பவர் மார்ச் 15 ஆம் திகதி அன்று நுகர்வோரின் உரிமைகள் தினம் என அறிவித்ததன் அடிப்படையில் நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக அனுசரிக்க தீர்மானிக்கப்பட்டது.

நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் நுகர்வோர் ஒருவருக்கு பிரதானமாக எட்டு உரிமைகள் காணப்படுவதாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவையாவன,

  • பாதுகாப்பிற்கான உரிமை
  • தகவலுக்கான உரிமை
  • விருப்பத்திற்கான உரிமை
  • பிரதிநிதித்துவத்திற்கான உரிமை
  • குறை தீர்ப்பதற்கான உரிமை
  • நுகர்வோர் கல்விக்கான உரிமை
  • சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கான உரிமை
  • அடிப்படை தேவைகளுக்கான உரிமை

நுகர்வோர் குறைகளுக்கான சட்டப்படியான தீர்வுகள்

1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் நீதி முறை சார்புடைய மூன்று அடுக்கு குறைதீர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அவையாவன,

  • தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
  • மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்.

நுகர்வோர் மன்றங்களின் தொலைநோக்குப் பார்வை

சுதாரிப்பான, விழிப்பான நுகர்வோர்களாலும் மற்றும் பொறுப்பான நியாயமான வியாபாரிகளால் நிறைந்த நேர்மையான வணிகத்தில் ஈடுபட இந்திய வியாபார ஸ்தலங்கள் என்பது நுகர்வோர் மன்றங்களின் தொலைநோக்குப் பார்வையாக காணப்படுகிறது.

முடிவுரை

நுகர்வோர்களுக்கான பாதுகாப்பு உரிமைகளும், சட்டங்களும், மன்றங்களும் அவர்களின் நலன் கருதியே அமைக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றையும் சரிவர அறிந்து செயல்படுதல் ஒவ்வொருவரின் கடமையாக காணப்படுகிறது.

You May Also Like:

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

அகவிலைப்படி என்றால் என்ன