நெகிழி மறுசுழற்சி கட்டுரை

உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்களில் நெகிழியும் ஒன்றாகும். இந்த நெகிழியின் பயன்பாடு தற்போது உலகெங்கும் பாரிய சூழல் பிரச்சனையாக உருக் கொண்டுள்ள.

நெகிழி மறுசுழற்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நெகிழியின் வரலாறு
  3. நெகிழி பாவனையின் விளைவு
  4. நெகிழிக்கு மாற்று
  5. மறுசுழற்சி நுட்பங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகின் சிறந்த கண்டுபிடிப்புகள் ஒன்றாக காணப்படுகின்ற நெகிழி தற்காலத்தில் பாரிய சூழல் மாசடையும் காரணியாக காணப்படுகிறது. நெகிழியானது அழுத்தம் கொடுத்தால் வளைந்து கொடுக்கும் தன்மையின் காரணமாகவும், விலை குறைவு என்பதனாலும் அதிகப்படியான மக்கள் நெகிழியினால் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

இன்று எங்குப் பார்த்தாலும் நெகிழி குப்பைகள் நிறைந்து அழகான இடங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

நெகிழியின் வரலாறு

தற்காலத்தில் இந்த நெகிழியானது ஆங்கிலத்தில் ” பிளாஸ்டிக்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆங்கில பதமானது ” பிளாஸ்டிக்கோஸ்” என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவானதாக சொல்லப்படுகிறது.

இந்த நெகிழியானது, முதன் முதலில் 1862 இல் லண்டனை சேர்ந்த அலெக்சாண்டர் மார்க்ஸ் என்பவரால் “செலுலோஸ்” என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டனில் நடைபெற்ற கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் முதல் முதலில் வைத்த பெயர் “பார்க்ஸ்டைன்” ஆகும்.

முதலாம் உலகப் போரில் “டுவான்ட்” என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்று வெடிப்பொருள் நெகிழி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து நெகிழியின் சிறப்பான தன்மைகள் காரணமாக மக்களால் அதிகம் விரும்பப்பட்டு உலகெங்கும் நெகிழி உற்பத்திகள் பிரபல்யமானது.

நெகிழி பாவனையின் விளைவு

உலகளவில் ஆண்டு ஒன்றுக்கு பல மில்லியன் தொன் நெகிழியானது உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 9 சதவீதமானவை மறுசுழற்சி செய்யப்படுகிறது 12 சதவீதமானவை எரித்து அழிக்கப்படுகிறது. மீதமுள்ள 79 சதவீதமான நெகிழி கழிவுகள் சூழலில் வீசப்படுவதனால் நீர்நிலைகளிலும் சமுத்திரங்களிலும் சேர்கிறது.

இதன் காரணமாக வருடமொன்றிற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடல் உயிரினங்கள் அழிகின்றன.

சூடான உணவு பொருட்களை நெகிழியுடன் சேர்த்து பயன்படுத்துவதனால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் காணப்படுகிறது. மற்றும் நெகிழி பொருட்களை பயிர் நிலங்களில் வீசுவதனால் தாவர வேர்கள் மண்ணை ஊடுருவ முடியாது போவதனால் விளைச்சல் குறைந்து அந்த விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடுகின்றன.

நெகிழிக்கு மாற்று

நெகிழியினால் உருவான பொருட்களை பயன்படுத்துவதன்  காரணமாக சூழல் மாசடைவதை குறைப்பதற்காக நெகிழியினால் உருவான பொருட்களுக்கு பதிலாக மாற்றீடான பொருட்களை பயன்படுத்தலாம்.

அதாவது, நாம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது துணி பைகளை பயன்படுத்துவதனால் நெகிழி பொருட்களை வாங்கும் அளவு குறையும். குறைந்த விலைகளில் கிடைக்கும் துணி பைகளை பல தடவைக்கு மேல் உபயோகப்படுத்த முடியும்.

நெகிழியினால் உருவான தண்ணீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தலாம். பால் வாங்குவதற்கும் கண்ணாடி போத்தல்களை பயன்படுத்தலாம்.

உணவகங்களில் வாலை இலையில் உணவு வழங்குதல், நெகிழி கரண்டிகளுக்கு பதிலாக மரத்தினால் செய்யப்படும் கரண்டிகளை பயன்படுத்தல். இவ்வாறு சில மாற்றீடுகள் மூலம்  நெகிழி பாவணையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.

மறுசுழற்சி நுட்பங்கள்

அமெரிக்க நாடானது தான் உபயோகிக்கும் நெகிழிப் பொருட்களில் 8.5 சதவீதமான நெகிழி பொருட்களை மறுசுழற்சி செய்கின்றது. 

இந்தியாவில் நெகிழிகளை மறுமலர்ச்சி செய்து வீதிகள் அமைக்க பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாது  “பைரோ ஆயில்” தயாரிக்கப்பட்டு அதனை டீசலோடு வாகனங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் நெகிழிப் பொருட்களை மேலாண்மை செய்வதில் இந்தியா பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

முடிவுரை

மண்ணுக்குள் மக்காது எமக்கு சிறு இன்பத்தையும் பாரிய துன்பத்தையும் தரும் நெகிழியின் பயன்பாட்டை குறைத்து அதனை இல்லாது ஒழித்து வளமான நாட்டை உருவாக்குவது எம் அனைவரதும் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும்.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை