பசுமை தீபாவளி கட்டுரை

pasumai deepavali katturai in tamil

பண்டிகைகளுள் சிறப்புமிக்கதொரு பண்டிகையே தீபாவளி பண்டிகையாகும். இது இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். அந்த வகையில் தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும் என்றடிப்படையில் தீபாவளியில் சிறப்புமிக்கதொன்றாகவே பட்டாசுகள் திகழ்கின்றன.

பசுமை தீபாவளி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தீபாவளி என்பது
  • பசுமை தீபாவளியினது நோக்கம்
  • சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை தீபாவளியை கொண்டாடுதல்
  • இன்றைய தீபாவளி பட்டாசுகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்துக்கள் கொண்டாடும் ஓர் சிறப்புமிக்க பண்டிகையாகவே தீபாவளி பண்டிகை காணப்படுகிறது. இத்தகைய பண்டிகையை பசுமை தீபாவளியாக மாற்றுவது எம் அனைவரினதும் கடமையாகும்.

அந்தவகையில் தீபாவளி நாளை இயற்கையோடு ஒன்றியதாக கொண்டாடுவதன் மூலமே பசுமை தீபாவளியாக கொண்டாட முடியும்.

தீபாவளி என்பது

தீபாவளி என்பது ஒளிவிளக்கு பண்டிகையாகும். அதாவது இந்த உலகின் முதல் ஒளியே பரமாத்மா ஆகும்.

அந்த வகையில் அனைவருக்கும் பரம்பொருள் ஆதாரமாக ஒளியே திகழ்கின்றது என்ற அடிப்படையில் ஒளி விளக்குகள் ஏற்றி கொண்டாடப்படும் திருநாளாகவே காணப்படுகின்றது.

தீபாவளி நாளானது இந்துக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் ஓர் நாளாக காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

பசுமை தீபாவளியினது நோக்கம்

தீபாவளி எனும் போது பல பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழமையாகும். இத்தகைய பட்டாசுகளின் காரணமாக பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவது மட்டுமல்லாது சுற்றுச் சூழல் மாசடைவதும் அதிகரிக்கின்றது.

இத்தகைய நிலையில் இருந்து விடுபட்டு பசுமை பட்டாசுகளை உபயோகிப்பதன் மூலம் பசுமை தீபாவளியை கொண்டாட முடியும். மேலும் இப்பட்டாசுகளின் செயற்பாட்டின் காரணமாக சுவாச பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

அந்த வகையில் சூழலை மாசடைய செய்யாது, நச்சுக்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ளவும், பட்டாசுகளை தவிர்த்து தீபாவளியை கொண்டாடுவதே பசுமை தீபாவளியின் நோக்கமாகும்.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை தீபாவளியை கொண்டாடுதல்

தீபாவளி பண்டிகையின் போது ஒளியேற்றப் பயன்படும் விளக்குகளானவை இயற்கையான முறையில் செய்யப்பட்டதாக காணப்படும் போது நாம் கொண்டாடும் தீபாவளியை பசுமை தீபாவளியாக கொண்டாட முடியும்.

அதாவது மெழுகால் செய்யப்பட்ட விளக்கு, ரோஜா இதழ்களை பயன்படுத்தி செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்தல் சிறந்ததாகும்.

தீபாவளி என்றாலே ரங்கோலி கோலம் போடுவது சிறப்பானதாகும். அந்த வகையில் செயற்கை முறையற்ற இயற்கை முறையில் உணவு, தானியங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கோலம் போடுவது சிறப்பிற்குரியதாகும்.

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதனூடாகவும் பசுமை தீபாவளியாக எமது பண்டிகையை மாற்றியமைக்க முடியும். அதாவது ஏனைய பட்டாசுகளினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்காக பசுமைப் பட்டாசுகளானவை காணப்படுகின்றன.

இவை சாதாரண பட்டாசுகளை விட ஒலிமாசுபாட்டை குறைவாகவே கொண்டுள்ளது. மேலும் 40 முதல் 50 வீதமான நச்சு வாயுவினையே வெளியிடும். பட்டாசு என்றாலே ஏதோவொரு பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது.

எனவே இயன்றளவு பட்டாசுகளின் பாவனைகளை குறைப்பது சிறந்ததாகும். இவ்வாறு பட்டாசுப் பாவனையை குறைப்பதனூடாக பசுமை தீபாவளியை ஏற்படுத்த முடியும்.

இன்றைய தீபாவளியும் பட்டாசுகளும்

இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளியானது பட்டாசுகளின்றி இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. அந்தவகையில் பல்வேறு வண்ண வண்ண பட்டாசுகளை வெடிக்கச்செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இவ்வாறான பட்டாசுகளானவை பல்வேறு தீங்குகளை சூழலுக்கும் எமக்கும் விளைவிக்கின்றது. அதாவது பட்டாசுகள் வெடிப்பின் போது பலருக்கு ஆபத்து ஏற்படுத்திய சந்தர்ப்பங்களையே இன்று அதிகமாக காணமுடிகிறது.

அத்தோடு அதிலுள்ள நச்சு வாயுக்களின் காரணமாக எம்மை சுற்றியுள்ள சூழலும் மாசடைகின்றது. எனவேதான் இயன்றளவு பட்டாசு பாவனையை குறைப்பது சிறந்ததாகும்.

முடிவுரை

வண்ணமயமான ஒளிகளாக திகழும் தீபாவளிப் பண்டிகையானது அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் ஓர் பண்டிகையாகும். எனவே இத்தகைய பண்டிகையினை பசுமையாக மாற்றுவதனூடாக ஓர் சிறந்த பண்டிகையாகக் கொண்டாட முடியும்.

அதாவது மக்கள் மத்தியில் பசுமை தீபாவளி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்படுத்துவதன் மூலமாகவே சிறந்த தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாடலாம்.

You May Also Like:

தூய்மை சென்னை கட்டுரை

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை