பயனிலை என்றால் என்ன

payanilai enral enna in tamil

எந்தவொரு வாக்கியத்தினையும் பொருளுடன் கூடிய வகையில் உருவாக்கும் போதுதான் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் தமிழ் இலக்கணத்தில் ஒரு வசனமானது எழுவாய், செயற்படுபொருள், பயனிலை என மூன்று கூறுகளை கொண்டதாக காணப்படுகின்றது. இந்த மூன்றிலும் வாக்கியம் முற்றுப்பெற அவசியமானதொன்றாகவே பயனிலை அமைந்துள்ளது.

பயனிலை என்றால் என்ன

பயனிலை என்பது ஓர் வாக்கியத்தின் இறுதியில் பொருள் முற்றுப் பெற்று நிற்கும் வினைச் சொல்லினை பயனிலை எனலாம். வாக்கியம் ஒன்றில் செயல் நிகழும் இடத்தினை பயனிலையாக கருத முடியும்.

பயனிலையானது ஓர் வாக்கியத்தின் இறுதியில் இடம் பெறக்கூடியதாக காணப்படுகின்றது. மேலும் வினைச் சொல்லானது பயனிலையாக மாறும் சந்தர்ப்பத்தில் அதனை வினைமுற்றாக கொள்ளலாம்.

உதாரணமாக பாய்தல் என்ற வினைச்சொல்லானது பாய்ந்தான் என்ற வினைமுற்றாக மாறும் போது பயனிலையாக கருதப்படும்.

பயனிலையினை எவ்வாறு அறிந்து கொள்வது

ஒரு வாக்கியத்தின் இறுதியில் வரக்கூடியதாக காணப்படும். அதாவது வாக்கியத்தின் இறுதியில் இடம்பெறக் கூடியதாகும்.

உதாரணமாக- மாலா விளையாடினாள் என்ற வசனத்தில் விளையாடினாள் என்பதனை பயனிலையாக கருத முடியும்.

அதாவது ஒரு வசனத்தில் யார், அது செய்த செயல் என்ன என்று கேள்வியை எழுப்பும் போது அதற்கு பதில் பயனிலையாக வரும் இதனூடாக பயனிலையினை அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக- கிளி பறந்தது என்ற வசனத்தில் எது பறந்தது என்ற வினாவினை எழுப்பக் கூடியதாக உள்ளது. இங்கு பயனிலையாக பறந்தது என்ற வினைச்சொல் வந்திருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

பயனிலையானது வினைச் சொல்லாகவே ஓர் வாக்கியத்தில் அமைந்து காணப்படும். அதாவது பாடினான், விழுந்தான், பறந்தது, ஆடினான் போன்ற சொற்களானது ஒரு செயலை செய்விக்கும் சொற்களாகவே அமைந்துள்ளது எனலாம்.

பயனிலையின் முக்கியத்துவம்

ஓர் வசனமானது அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைய பயனிலையானது அவசியமாகின்றது. அதாவது ஓர் வாக்கியத்திற்கு எவ்வாறு எழுவாய் முக்கியமோ அதே போன்று பயனிலையும் முக்கியமானதோடு பயனிலை இல்லாமல் ஒரு வாக்கியத்தினை பூரணப்படுத்திடவும் முடியாது.

உதாரணமாக கூறுவதானால் தம்பி கடைக்கு (சென்றான்) இவ் வசனத்தில் சென்றான் என்ற பயனிலை வராவிடின் வாக்கியமானது முற்றுப்பெறாமலேயே காணப்படும்.

ஓர் வாக்கியத்தில் பயனிலையானது எழுவாய்க்கு ஏற்றாற் போல் அமையும் போதே அந்த வாக்கியம் சிறந்த வாக்கியமாக அமையும் என குறிப்பிடலாம். இதன் மூலமாக எல்லோராலும் இலகுவாகவும் தெளிவாகவும் வசனங்களை புரிந்து கொள்ள முடியும்.

ஓர் தொடரானது எழுவாய், செயற்படுபொருள் இல்லாமலும் அமைய முடியும். ஆனால் பயனிலை இல்லாமல் அமைய முடியாது.

அதாவது உதாரணமாக “மாலா வரைந்தாள்”. இவ்வாக்கியத்தில் செயற்படுபொருளானது காணப்படவில்லை. இதேபோன்று மற்றுமொறு வசனத்தினை நோக்குவோமேயானால் “படம் வரைந்தாள்” இங்கு எழுவாய் காணப்படவில்லை. இவ்விரு வசனங்களிலும் பயனிலையானது அமைந்து காணப்படுவதனை பார்க்க கூடியதாக உள்ளது.

பயனிலையானது திணை, பால், எண், இடம், காலம், போன்றனவற்றை ஏற்று வருகின்றமையினையும் முக்கியமானதாக கொள்ளலாம். மேலும் ஒரு வசனமானது சிறப்புற்று விளங்கவும் அவ்வசனத்தினை நாம் இலகுவாக புரிந்து கொள்ளவும் பயனிலையானது அவசியமாகின்றது.

ஆகவே தமிழ் இலக்கணத்தில் வசனங்களானது பொருள் தரக்கூடியதாகவும் தெளிவான வசனங்களாகவும் அமைகின்ற போதே எம்மால் அவ்வசனங்களை விளங்கி கொள்ள முடியும்.

You May Also Like:

இயல் என்றால் என்ன

தம்மனை என்றால் என்ன