பறவைகள் பற்றிய கட்டுரை

paravaigal patri katturai in tamil

நாம் வாழும் சூழலில் இயற்கையின் அழகையும் மெருகூட்டும் தனித்துவமான ஒரு படைப்பாகவே இந்த பறவைகள் காணப்படுகின்றன. அதாவது உலகின் நிலைத்த தன்மையை பேணுவதில் பறவைகளுக்கு முக்கிய இடம் உண்டு.

குறிப்பாக காடுகளின் பரம்பலுக்கு பறவைகள் பெரிதும் உதவுகின்றன. அதிக புத்தி கூர்மை உடையதாகவும் நுண்மதி கூர்மையும் உடைய ஓர் படைப்பினமாகவே இந்த பறவைகள் காணப்படுகின்றன.

பறவைகள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பறவைகளின் பண்புகள்
  • பறவைகளின் வாழ்க்கை முறை
  • உலகின் மிகச் சிறிய மற்றும் மிகப்பெரிய பறவைகள்
  • பறவைகளினால் மனிதன் பெரும் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் உலகில் உயிர்த்தொழிற்ப்பாட்டில் ஒவ்வொரு பிராணியும் தமது பங்களிப்பை வழங்கிய வண்ணமே உள்ளன. அந்த வகையில் பறவைகளின் பங்களிப்பும் இன்றி அமையாததாகும். மற்றும் பறவை இனங்கள் ஒரு நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் உதவுவதாக காணப்படுகின்றன.

பல்வேறு நிறங்களிலும், பல்வேறு அமைப்புகளிலும் காணப்படக்கூடிய பறவைகளைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

பறவைகளின் பண்புகள்

உலகினில் சுமார் 9672 பறவை இனங்கள் காணப்படுவதாக ஆய்வுக கூறுகின்றன. அவ்வாறான ஒவ்வொரு பறவைகளும் பல்வேறு பண்பு கூறுகளை கொண்டுள்ளன.

அந்த வகையில் முதுகெலும்பு உடையதாகவும், இறகுகள் கொண்ட இரு இறக்கைகள் கொண்டதாகவும், நீர் போகாத ஓடுகளை கொண்ட முட்டைகளை இடுவதனவாகவும், இரு கால்கள் கொண்டனவாகவும் பொதுவாக எல்லா பறவைகளும் காணப்படுகின்றன.

மற்றும் சில பறவைகள் உயரப் பறக்கக்கூடியனவாகவும், வேகமாக ஓடக்கூடியனவாகவும், நீரில் நீந்த கூடியதாகவும், சில பறவைகள் பறக்க இயலாதவையாகவும், இன்னும் சில பாலூட்டக்கூடியனவாகவும் உள்ளன.

இந்த பறவை இனங்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் இவ்வாறான பல்வேறு பண்பு கூறுகளை கொண்டுள்ளமையினை காணலாம்.

பறவைகளின் வாழ்க்கை முறை

உலகில் காணப்படும் ஒவ்வொரு பறவை இனமும் தங்களுடைய குஞ்சுகளை பராமரிக்கக் கூடியனபாகவே உள்ளன. இவ்வாறான பறவைகள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்விடத்தினை தானாகவே அமைத்துக் கொள்ளும் திறன் வாய்ந்ததாகவே காணப்படுகின்றன.

அந்த வகையில் தூக்கணாங்குருவிகள் அமைக்கும் கூடுகள் மிகவும் அருமையானவையாக காணப்படுகின்றன.

மேலும் கிளி, மைனா, ஆந்தை போன்றபறவைகள் மரங்களில் பொந்துகளில் வாழக்கூடியனவாகவும் காணப்படுகின்றன. இவ்வாறாக ஒவ்வொரு பறவைகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றன.

உலகின் மிகச் சிறிய மற்றும் மிகப்பெரிய பறவைகள்

உலகில் உள்ள பறவை இனங்களிலே மிகவும் சிறிய பறவை இனமாக “ஓசனிச்சிட்டு” காணப்படுகின்றது. இது தேன் சிட்டை போன்ற அமைப்பிலேயே காணப்படும். பொதுவாக அமெரிக்க நாடுகளில் வாழும் இப்பறவை இனமானது, ஐந்து சென்டிமீட்டர் நீளம் கொண்டது எடை 1.8 கிலோகிராம் மட்டுமே கொண்டது.

அதேபோன்று உலகிலேயே மிகப்பெரிய பறவை இனமாக “தீக்கோழி” காணப்படுகின்றது. ஆபிரிக்க பாலைவனங்களிலும், சபானா புல்வெளிகளிலும் அதிகமாக வாழுகின்றன.

இவை பறக்க முடியாதவையாகவும், மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியனவாகவும், உலகிலேயே பெரிய முட்டைகள் இடுவனவாகவும், 60 -145 கிலோ எடை வரை வளரக்கூடியதாகவும், 8 அடி உயரம் வரை வளரக்கூடியதாகவும் இந்த தீக்கோழிகள் காணப்படுகின்றன.

பறவைகளினால் மனிதன் பெரும் பயன்கள்

பறவைகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் மாத்திரமே மனிதனால் நிலைத்து வாழ முடியும். என இன்றைய ஆய்வுகள் பல குறிப்பிடுகின்றன.

அந்த வகையில் மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை குறைப்பதற்கு பறவைகளின் அழகினையும், அவற்றின் அசைவுகளினையும் கண்டுகளிப்பது உதவியாக அமைகின்றன.

மேலும் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய சிறிய புழு- பூச்சிகளை மைனா, சிட்டுக்குருவி, செண்பகம் போன்ற பறவைகள் உண்பதனாலும், காகம் போன்ற பறவைகள் சூழலில் உள்ள கழிவுகளை உண்பதனாலும், ஊனுண்ணி பறவைகள் இறந்த உயிரினங்களை உண்பதனாலும் இந்த சூழல் மாசு தடுக்கப்படுவதோடு மனிதனுக்கும் இவ்வாறான பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

முடிவுரை

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களின் பல்வேறு செயற்பாடுகளின் மூலம் பறவைகள் இனம் அழிந்து கொண்டு வருவதனை காணலாம். அதாவது ஓர் குறிப்பிட்ட இடத்திலிருந்து பறவைகள் இனம் முற்றாக வெளியேறுமாயின் அது மனித இனத்தின் அழிவுப் பாதைக்கான அறிகுறியாகும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் பறவைகளின் அழிவுக்கு ஏதுவான எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பதே எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை