புதுக்கவிதை என்றால் என்ன

puthu kavithai endral enna

புதுக்கவிதை என்றால் என்ன

பிரஞ்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சி உலகில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாளித்துவம் அதாவது அதிகார மேலாதிக்கத்திற்கு காரணமான மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி மேலோங்க வேண்டும் என்பதற்காக நடைபெற்றது.

அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற தளங்களில் மனிதர்களால் அனைவருக்கும் சமத்துவம் ஏற்படக்கூடிய வாய்ப்பை இப்புரட்சி வழங்கியது. இந்த சூழலுக்கு மிக முக்கிய ஆணிவேராக அமைந்தது கல்வியாகும்.

அதிகார வர்க்கம் சமூக அமைப்பு, பாலினம், பொருளியல் போன்ற வரம்புகளைக் கடந்து கல்வி எல்லோருக்கும் உரிமையுடையது என்ற நிலை அக்காலச் சூழலில் ஏற்பட்டது.

எப்போது கல்வி மக்கள் வசமாக ஆரம்பித்ததோ அப்போதே அந்த மொழிகளில் இலக்கியங்கள் உருவாக தொடங்கியன. கருத்துக்களைச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை கிடைக்கின்றது, சுதந்திரம் கிடைக்கின்றது, படைப்பு சுதந்திரம் கிடைக்கின்றது. இது பல இலக்கியங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது.

தனி மனிதன், சமூகம் என்ற இரண்டு நிலைகளிலுமுள்ள சிக்கல்கள், மன உளைச்சல்கள் இவற்றையெல்லாம் தங்கு தடையின்றிச் வெளிப்படுத்தக்கூடிய ஒரு இலக்கிய வடிவம் அக்காலத்தில் தேவைப்பட்டது.

கட்டுப்பாடுகளை விதித்து கொண்டிருந்த மரபிலக்கியங்களை யாரும் விரும்பவில்லை. ஏனெனில் அவை மன உணர்வை அதிகம் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை வழங்கவில்லை. ஆகவே கருத்துக்களை தடையின்றி வெளிப்படுத்துவதற்கு ஏற்றதான எளிய வடிவங்களை மக்கள் தேட ஆரம்பித்தனர்.

உரைநடையில் உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய விதமாகவும், வாசிக்கும்போதே மனதை கிரங்க வைக்க கூடிய வகையிலும் கற்பனை எழிலும் கலந்த ஒரு புதிய கவிதை வடிவம் ஒன்று உருவாகத் தொடங்கியது.

இந்தக் கவிதை ஆரம்பத்தில் வசன கவிதை என்றும், பிற்காலத்தில் புதுக்கவிதை என்றும், அதன் பின் ஹைக்கூ கவிதை என்று படிநிலை வளர்ச்சியையும் அடையத் தொடங்கியது.

புதுக்கவிதையின் தோற்றம் அமெரிக்கா ஆகும். அமெரிக்க கவிஞர் வால்ட் விட்டமின் புல்லின் இதழ்கள் புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகின்றது. இங்கிலாந்தை சேர்ந்த டி எஸ் ஹெல்டன் எழுதிய பாழ்நிலம் (The Wasteland) எனும் கவிதை நூல் நோபல் பரிசு பெற்றது.

இது புதுக்கவிதை உலகில் புத்தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழின் புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியவர் பாரதியாராவார். நா.பிச்சமூர்த்தி, வள்ளிக்கண்ணன், சி.சு. செல்லப்பா, புதுமைப்பித்தன் போன்றோர் தமிழில் சிறப்பான புதுக்கவிதையை எழுதியுள்ளனர்.

புதுக்கவிதை என்றால் என்ன

மரபுக் கவிதைகள் போல் கட்டுப்பாடுகள் இல்லாதது புதுக்கவிகள் ஆகும். அதாவது சீர், தளை, அடி, தொடை போன்ற யாப்பு வடிவங்கள் இல்லை. இலக்கணம் இல்லாத கவிதையாகும். மிக எளிதில் புரியக்கூடியதாக அமைந்திருக்கும்.

பார்க்கக்கூடிய காட்சியை மனதில் தோன்றும் உணர்வை எந்தவிதமான வருணனைகள், அலங்கார வார்த்தைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப்படுகின்ற ஒரு கவிதை வடிவமாகும்.

புதுக்கவிதையின் இயல்புகள்

இலகு கவிதை, கட்டிலடங்கா கவிதை, வசன கவிதை, உரைவீச்சு, மாடர்ன் போயற்றி, நியு போயட்ரி, யாப்பிலடங்கா கவிதை, கட்டுப்படில்லா கவிதை எனப் பல பெயர்களால் தொடக்க காலத்தில் புதுக்கவிதை அழைக்கப்பட்டது. இது தற்கால இலக்கிய வடிவமாகும்.

புதுக்கவிதைக்கு அடி வலையறைகள் இல்லை. சொற்றொடுக்கம் கொண்டவை. சிறு சிறு சொற்களிலும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியிருக்கும், வசன நடை, உரையாடல் பாங்கு காணப்படும். புதுக்கவிதையானது படிமம், குறியீடு, இருண்மை, தொன்மை ஆகிய உத்திகளைக் கொண்டமைந்துள்ளது.

You May Also Like:

விளிச்சொல் என்றால் என்ன

ஊடகம் என்றால் என்ன