புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன

puthupikka thakka valangal

மனித வாழ்க்கைக்கும் பிற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக துணைபுரியக் கூடியதாகவே இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான இயற்கை வளங்களின் வகைகளுள் ஒன்றாகவே புதுப்பிக்கத்தக்க வளங்கள் காணப்படுகின்றன.

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்றால் என்ன

புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக் கூடிய ஓர் இயற்கை வளமாகும்.

இந்த வளங்களானவை குறிப்பிட்ட காலத்தில் ஈடு செய்யக் கூடிய அல்லது மீள நிரப்பக் கூடிய வளங்களாகும்.

இத்தகைய புதுப்பிக்கத்தக்க வளங்கள் இன்று தொழில் வளர்ச்சியால் பெரிதும் அச்சுறுத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க வளங்களாக சூரிய ஒளி, காற்று, நீர், மரம் போன்றவற்றை கூற முடியும்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள்

சூரிய ஒளி

சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியிடுகிறது. இது புதுப்பிக்கத்தக்க வளங்களில் ஒன்றாகும். சூரிய கலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற கூடியது. இவ்வுலகில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு சூரிய ஒளி அவசியமானதொன்றாகும்.

காற்று

காற்றாற்றல் என்பது ஒரு தூய்மையான ஆற்றலாகும். அண்மைக் காலங்களில் காற்றாற்றலானது மிகவும் சிக்கனமான மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தொழிநுட்பங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

நீர்

நீரானது புதுப்பிக்கத்தக்க வளங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாக காணப்படுகின்றது. தற்போது நீரானது நீர் மின் சக்தி உற்பத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. நீர் மின் சக்தியானது மலிவானதாக காணப்படுகின்றது. இன்று பல்வேறுபட்ட வகையில் நீர் மின் சக்தியானது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

புதுப்பிக்கத்தக்க வளங்களின் முக்கியத்துவம்

புதுப்பிக்கத்தக்க வளங்களானவை இன்று பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றன.

அதாவது மனிதன் உட்பட அனைத்து உயிர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையாக இந்த வளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படை தேவைகளை புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலமாகவே நாம் பூர்த்தி செய்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் வளி கூட ஒரு புதுப்பிக்கத்தக்க வளமே ஆகும். இதனூடாக எம்மால் சிறந்த காற்றை சுவாசிக்க முடிவதோடு இந்த வளங்களின் ஊடாக சூழல் சமநிலையை பேணக் கூடியதாகவும் காணப்படுகின்றமை புதுப்பிக்கத்தக்க வளங்களின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும்.

ஒரு நாட்டினுடைய பொருளாதார ரீதியான விடயங்களை மேம்படுத்த புதுப்பிக்கத்தக்க வளங்கள் பாரிய பங்களிப்பினை மேற்கொள்கின்றன. மேலும் உணவு உற்பத்தி, எரிபொருள், சக்தி என அனைத்து விதமான உற்பத்திக்கும் புதுப்பிக்கத்தக்க வளங்களே பாரிய பங்களிப்பினை செலுத்துகின்றன.

புதுப்பிக்கத்தக்க வளங்களை பாதுகாத்தல்

இன்று இயற்கையான புதுப்பிக்கத்தக்க வளங்களானது பல்வேறுபட்ட செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றமையினை காணலாம். அதாவது இன்று சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக இன்று உணவின் தேவை மற்றும் இடவசதி அதிகரித்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக அதிகளவான காடுகளை அழிக்கின்றனர். மேலும் விவசாய நிலங்கள் பல அழிக்கப்பட்டு அவ்விடத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக சூழல் மாசுபடுவதோடு மாத்திரமல்லாது வெப்பம் அதிகரித்து பல்வேறுபட்ட நோய்கள் எம்மை ஆட்கொள்கின்றன.

எனவேதான் புதுப்பிக்கத்தக்க வளங்களை பேணி பாதுகாப்பது எமது கடமையாகும். காடுகளை பாதுகாத்தல், தேவையற்ற கழிவுகளை உரிய முறையில் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக புதுப்பிக்கத்தக்க வளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

You May Also Like:

கடல் வளம் பற்றிய கட்டுரை

புயல் என்றால் என்ன