புறநானூறு என்றால் என்ன

purananuru endral enna in tamil

புறத்தினை சார்ந்த ஒரு சங்கத்தமிழ் நூலாக காணப்படுகின்றது. புறநானூறு மூலமாக சங்க காலத்தில் ஆண்ட அரசர்கள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைமை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

புறநானூறு என்றால் என்ன

புறநானூறு என்பது ஒரு தொகை நூலாகும். இது 400 பாடல்களை கொண்ட புறத்தினை சார்ந்த ஒரு சங்க தமிழ் நூலே புறநானூறாகும். பாக்களின் அடிவரையானது 4 அடிமுதல் 40 அடி வரை உள்ளன. இது சங்ககால தமிழ் நூலான எட்டுத் தொகையில் ஒன்றாக காணப்படுகின்றது.

புறநானூறு இலக்கியங்களின் முக்கியத்துவம்

புறநானூறு இலக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்த இலக்கியமாக காணப்படுகின்றன. சமூகத்தில் வாழ்வு ஒழுங்குநெறியை சிறப்பாக கூறக்கூடியதாக புறநானூறு இலக்கியங்கள் காணப்படுகின்றன.

போரின் பெருமையினை எடுத்தியம்பக்கூடிய இலக்கியமாக இது காணப்படுகின்றது. அதாவது எமது முன்னோர்களின் போர் குணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைமைகளை பற்றி அறிந்து கொள்ள புறநானூறு துணைபுரிகின்றது.

புறநானூறு இலக்கியங்களானவை சான்றோரின் அற நோக்கில் மக்கள் மீதான பரிவு மற்றும் திட்டமிட்டு செயற்பட வலியுறுத்தக்கூடிய ஒன்றாகவும் இடம் பெறுகின்றது.

சமூக நலனை முதன்மைப்படுத்தி அறநோக்கில் வெளிப்படுத்தக்கூடிய நூலாகக் காணப்படுகிறது. மேலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் மன்னனுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக புறநானூறு நூலானது காணப்படுகிறது.

மன்னரின் வீரம் பற்றி இவ் இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும். அதாவது கால் பார் கோத்து ஞாலத்தியக்கும் காவற் சாகடுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினுது பாடுமே…… இப்பாடலடி மூலமாக மன்னனுடைய வெற்றி வீரம் பாடப்படுகின்றது.

புறநானூறு சங்கத்தமிழர்களின் வீர வாழ்க்கையினை எடுத்தியம்பும் வரலாற்றுக் கருவூலமாக திகழ்கின்றது. மேலும் பண்டைத்தமிழர்களின் அறவுணர்வுகள் போன்றவற்றை எடுத்தியம்புவதன் ஊடாக சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு வழியமைத்துத் தருகின்றது.

புறநானூறு நூல் அமைப்பு

இந்நூலானது பாடல்கள் தொகுக்கப்படும் போது ஒரு வகை இயைபு கருதி முதலில் முடி, மன்னர், மூவர் எனவும் பின்னர் குறநில மன்னர் வேளிர் ஆகியோரை பற்றிய பாடல்களாகவும் அடுத்து போர் பற்றிய பாடல்களாகவும் காணப்படுகிறது.

மேலும் கையறுநிலைப்பாடல், நடுகள், மகளிர் தீப்பாய்தல் எனவும் தொகுக்கப்பட்டுள்ளது. புறப்பொருளினை தழுவி இடம்பெற்ற இந்நூலானது பாடலின் இறுதியில் திணை, துறை பாடியோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்றவற்றினையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளன.

புறநானூறு இலக்கியங்களில் கொடைச்சிறப்பு

புறநானூறு இலக்கியங்கள் பெரும்பாலானவை கொடைத்தன்மையினை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதாவது சங்ககால மன்னர்கள், வள்ளல்கள் முதலானவர்களின் கொடைத்திறன்களை எடுத்தியம்பக்கூடியதாக புறநானூற்று இலக்கியங்கள் காணப்படுகிறன.

பசி எனும் நோயானது கொடியது வறுமையில் வாடுபவரை துன்புறுத்தக்கூடிய அப்பசியினை போக்குபவனாக பாணன் காணப்படுகிறான். பசிபிணி மருத்துவன் என புறநானூறு இலக்கியத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் விளக்கமாகக் காணப்படுகிறது. இதனூடாக கொடைச்சிறப்பு எடுத்துக்காட்டப்படுகிறது.

கைப்பொருள் யாதென்று மிலனே நச்சி…. என்ற பாடலடியினூடாக பொருளற்ற நிலையிலும் அருளும் அன்பினை எடுத்துக்காட்டுகின்றது.

பெருஞ்சித்திரனார் பரிசிலர்க்கு பரிசின் இன்றியமையாமை அறிந்து முகம் மலர்ந்து தர வேண்டும் எனவும் அவ்வாறு தராத பரிசிலை நான் ஏற்கேன் என்று கூறுவதனூடாக கொடை வழங்களின் போது எவ்வாறு வழங்க வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

மேலும் காலம் தாழ்த்தாமல் கொடுக்கப்படல் வேண்டும், மூவேந்தர்களின் கொடைத்தன்மை என பல்வேறு ரீதியில் கொடைச்சிறப்பு புறநானூறு இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.

You May Also Like:

படிகம் என்றால் என்ன

கலாச்சார மூலதனம் என்றால் என்ன