ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஒப்பந்த்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கும் ஒழுங்கமைப்பு அமைப்பு எனப்படும்.
இவ்வாறு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதாரம், அரசியல், போக்குவரத்து, கல்வி, கலாசாரம், சமாதானம் போன்ற பல்வேறு விடங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படும்.
உலக நாடுகள் தங்கள் அமைப்பின் நலன் கருதி உருவாககப்பட்ட அமைப்புகள் பல காணப்படுகின்றன அதில் பொதுநலவாய அமைப்பும் ஒன்றாகும்.
பொதுநலவாய அமைப்பு என்றால் என்ன
பொதுநலவாய அமைப்பு என்பது பிரித்தாணிய நாட்டின் ஆட்சிக்குட்பட்டு (காலணித்துவம்) காணப்பட்ட நாடுகள் சுதந்திரம் அடைந்த பின் அந்த அனைத்து நாடுகளையும் ஒன்றினைத்து லண்டன் சான்றுரை திட்டத்தின்படி 28 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு பொதுநலவாய அமைப்பு எனப்படுகின்றது. ஆங்கிலத்தில் Commonwealth of Nations என்று அழைக்கப்படும்.
பொதுநலவாய அமைப்பில் இணைந்துள்ள நாடுகள்
இந்த அமைப்பில் 56 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ மாளிகை ஆகும். பொதுநலவாய அமைப்பில் இணைந்துக் கொண்ட இறுதி நாடு ருவாண்டா ஆகும். 2009 ஆம் ஆண்டு இணைந்துக் கொண்டது.
மாலைத்தீவு 1982 ஆம் ஆண்டு இவ் அமைப்பில் இணைந்துக் கொண்ட போதும் 2016 ஆம் ஆண்டு உறுப்புரிமையிலிருந்த நீங்கி மீண்டும் 2020 ஆம் ஆண்டு இணைந்துக் கொண்டது.
பொதுநலவாயத்தின் தற்போதைய செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட் ஆவார். பொது நலவாய அமைப்பு நாடுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுநலவாய போட்டிகள் 04 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
மேலும் பொதுநலவாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டு லண்டன் நகரத்தில் பொதுநலவாயம் எனும் பெயரில் வாசிகசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் தலைமை செயலாளராக 2ஆம் எலிசபெத் அம்மையார் அவர்கள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ் அமைப்புக்கு பிரத்தியேக மொழியாக ஆங்கில மொழி காணப்படுகின்றது.
பொதுநலவாய அமைப்பின் பிரதான நோக்கங்கள்
தனது அமைப்பில் அங்கம் வகிக்கும் 56 நாடுகளையும் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், போக்குவரத்து,அரசியல், வறுமை ஒழிப்பு, போன்ற துறைகளில் முன்னேற்றும் வகையில் தமது நோக்கங்களை அமைத்துள்ளது. அவையாவன,
- சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்தல்.
- நிலம், கடல், இயற்கை வளங்களின் நிலையான அபிவிருத்தி
- சட்டம், ஆட்சி தொடர்பான சிறப்பான ஆட்சி
- சமூகம் மற்றும் இளைஞர் சமூகத்தின் நிலையான அபிவிருத்தி
- சிறு மாநிலத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கள் என்பன இவ் அமைப்பின் நோக்கங்களாகும்.
2021 ஆம் ஆண்டு தமது கருப்பொருளாக “ஒரு பொதுவான எதிர்காலத்தினைக் வழங்குதல், இணைத்தல், புதுமைப்படுத்தல், மாற்றுதல் என்பவையாகும்.
பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மகாநாடு 02 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். இதன் போது chogm முன்வைக்கப்படும்.
இலங்கையும் பொதுநலவாய அமைப்பும்
இலங்கை காலணித்துவத்தில் இருந்த போது பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி, அரசியல், கலாசாரம் என பல்வேறு வழிகளில் பல நன்மைகளை பெற்றது. அது போலவே பொதுநலவாய அமைப்பின் மூலமும் இலங்கை பல நன்மைகளை பெற்றது.
1796 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியின் போது இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மாநாடாகும். அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இவ் மாநாடு இலங்கையில் (கொழும்பில் அமைந்துள்ள தாமரைத் தடாகத்தில் ) நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பினை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளராக இருந்தவர் கமலேஸ் சர்மா ஆவார். இதன் போது 500ரூபா நாணயத் தாளும் 25 ரூபா முத்திரையும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இவ் மாநாட்டில் அவுஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட், பாகிஸ்தான் பிரதமர் நவா செரிப், பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா, பிரித்தாணிய பிரதமர் டேவிட் கமரூன் என பல நாட்டு தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
2020 ஆம் ஆண்டு தலைவர்கள் பங்குபெறும் மாநாடு நடைபெறவிருந்த போதும் அது சாத்தியப்படவில்லை. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டும் இவ் மாநாடு நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
You May Also Like: