மது ஒழிப்பு வாசகங்கள்

madhu olippu slogan in tamil

இன்றைய சமூகமானது அழிவை நோக்கிச் செல்வதற்கான பிரதான காரணங்களில் ஒன்று மது பாவனையாகும். இன்று மதுவின் காரணமாக உடல், உள ரீதியான பல்வேறு பாதிப்புக்கள் இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களும் இடம் பெற்று வருகின்றன.

இவ்வாறாக சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுவினை ஒழிக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். இன்று ஒரு நாடானது அழிவினை நோக்கி செல்வதில் பிரதான பங்கினை போதைப் பாவனையே கொண்டுள்ளது.

இவ்வாறான மதுவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானதொன்றாகும். அந்த அடிப்படையில் மது ஒழிப்பு வாசகங்களினை ஏற்படுத்துவதனூடாகவும் மதுவினை ஒழிக்க முடியும்.

மது ஒழிப்பு வாசகங்கள்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மது விலக்கு என்பது தான் சிறந்த வழி.!

மனிதனாய் வாழ்வதற்கு போதை தரும் மதுவை ஒழித்து விடு.!

மரணத்தை ஏற்படுத்தும் மதுவை எம் வாழ்வில் இருந்து விலக்கி வைப்போம்..!

பாதையை மாற்றும் போதையை ஒழிப்போம்..!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்.. குடிப்பழக்கத்தை தவிர்த்து இளமையாக வாழுங்கள்..!

மனிதனை குடிக்கும் குடியை ஒழிப்போம்..!

மரண வாசலிற்கு எம்மை அழைத்துச் செல்லும் மதுவிற்கு எதிராக குரல் கொடுப்போம்.!

குடிப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கையை பற்றி சிந்தியுங்கள்.!

நிதானத்திற்கான பாதை, மதுவை ஒழிப்பதே.! உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மதுவை ஒழித்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்..!

அன்பான வாழ்விற்கு மதுவை கைவிடுவோம்.!

பாதையை மாற்றும் போதையை ஒழிப்போம்.!

ஆயுளை அழிக்கும் மது வேண்டாமே.!

மதுவிற்கு அடிமையாகும் மனிதனே… ஒருமுறை உன் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்…! சிந்தித்திருந்தால் மது அருந்திருக்க மாட்டாய்..!

உனது அற்ப சந்தோசத்திற்காக நிரந்தர சந்தோசத்தையே அழிக்கும் மதுவை அருந்தாதே..!

மனிதத்தை அழிக்கும் மதுவை அழிப்பதே மனிதனான அனைவருடைய கடமையாகும்.!

போதையால் பேதையாக மாறும் மனிதனே.! விழித்துப்பார்..! இன்றே கரம் கோர்த்து போதைக்கெதிராக குரல் கொடுப்போம்..!

வேடிக்கை என நினைத்து வாழ்வை அழிக்கும் மதுவை கைவிடுவோம்..!

எதிரே வருபவனின் மரணத்தை நிர்ணயிக்கும் குடியை ஒழித்து விடுங்கள்.!

மதுவால் உங்கள் எதிர்காலத்தை மூழ்கடிக்காதீர்கள்..!

இதயம் சீர்பெற மது ஒழிப்பில் ஈடுபடுங்கள்.!

போதை தரும் மாயை உலகிற்காக உங்கள் குடும்பத்தை இழந்து விடாதீர்கள்..!

உயிரை பறிக்கும் மது வேண்டாமே..! மதுவை ஒழிப்போம் சிறந்த பாதையை வகுப்போம்..!

மது எனும் போதையில் செல்பவன் மரணத்தை நோக்கியே பயணிப்பான்..!

மண்ணை வளமாக்க மதுவை பிணமாக்கு..!

எதிர்கால கனவை அழிக்கும் மது எம்மையும் எதிர்காலத்தில் இல்லாமலாக்கிவிடும்..!

மரணத்திற்கு நாள் குறிக்கும் மதுவை ஒழிப்போம்..! நல்வாழ்வை வாழ்வோம்..!

மதுவினால் தள்ளாடும் மனிதா..! உன் குடும்பத்தை பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துபார்..!

போதையால் பாதை மாறும் மனிதா..! உன் பாதையை வாழ்க்கையின் வெற்றிக்காக மாற்று.!

மனித மனத்தை சீரழிக்கும் மது பழக்கத்தை ஒழிப்போம்..! மதுவிற்கெதிராக போராடுவோம்.!

குடும்பத்தை அழிக்கும் மது அரக்கனை ஒழிப்போம்..!

மதுவை குடிக்கும் மனிதனே..! சற்றே சிந்தித்துப்பார் மதுவே உன்னை குடிக்கிறது..!

மதுவை ஒழித்து உடல் நலத்தையும் மன நலத்தையும் சீர் பெறச் செய்வோம்.!

You May Also Like:

சுத்தம் பற்றிய வாசகங்கள்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்