மனிதர்கள் மரங்களை பல்வேறுபட்ட வகையில் இன்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மரங்களின் பயன்களானவை எண்ணற்றவையாகவே காணப்படுகின்றன. இன்று சூழலின் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்கானது அளப்பரியதாகும்.
மரத்தின் பயன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மரத்தின் பயன்கள்
- பூமியின் வெப்பத்தை தவிர்க்கும் மரங்கள்
- மண்வளம் காப்போம்
- இன்றைய கால கட்டத்தில் மரங்களின் நிலை
- முடிவுரை
முன்னுரை
நாம் இன்று உயிர் வாழ்வதற்கான காற்று மரங்களிடம் இருந்தே எமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அந்த வகையில் மரங்களுடைய பயன்கள் மனிதர்களுக்கு அளப்பரியதாகவே காணப்படுகின்றன.
மரங்களானவை எமக்கு மட்டுமல்லாது எமது எதிர்கால சந்ததியினருக்கும் பல்வேறு வகையில் பயன்படக் கூடியவையாகும். இக்கட்டுரையில் மரங்களின் பயன்கள் பற்றி நோக்கலாம்.
மரத்தின் பயன்கள்
மரங்களை வளர்ப்பதனூடாக மரங்கள் இன்று எண்ணற்ற பயன்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. நாம் சுவாசிப்பதற்கான ஒட்சிசனானது மரங்களினூடாகவே உருவாக்கப்படுகின்றன. இதன் மூலமாக நாம் உயிர் வாழ்வதற்கான அடித்தளத்தினை மரங்களே வித்திடுகின்றது.
அதேபோன்று வெப்பத்தை தணித்து நிழலினை தரவும், பறவைகள், விலங்குகளின் வாழிடமாகவும் மரங்களே காணப்படுகின்றது.
பல நோய்களிலிருந்து எம்மை காப்பதற்கும், தளபாடங்கள் செய்வதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், சூழலை அழகுபடுத்தவும் என பல்வேறு பயன்களை தன்னகத்தே கொண்டமைந்ததாகவே மரங்கள் காணப்படுகின்றன.
பூமியின் வெப்பத்தை தணிக்கும் மரங்கள்
மரங்களானவை எம் பூமியை குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றது. அதாவது மரங்களை வெட்டுவதனூடாக மழை வளம் குன்றி வறட்சியே ஏற்படுகின்றது. இத்தகைய நிலையை தவிர்க்க வேண்டுமாயின் மரங்களை அதிகமாக நட வேண்டும்.
அதிகரித்த வெப்பத்தை தவிர்க்க அதிமான மரங்களை நடுவதுடன் இருக்கும் மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
மண்வளம் காப்போம்
இன்று மண்வளமானது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதாவது மழை மற்றும் காற்றினால் மண்ணரிப்பு ஏற்பட்டு மண்ணானது பல்வேறு வகையில் ஆற்று நீரோடு அடித்து செல்லப்படுதல் மற்றும் மண்மேடாக குவிந்து மண்வளம் பாதிப்படைகின்றது.
இத்தகைய நிலையிலிருந்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டுமாயின் மரங்களை அதிகமாக நட வேண்டும். மரங்களானவை மரத்தின் வேரோடு இறுகப் பிணைக்கப்பட்டு மண்வளமானது பாதுகாக்கப்படுகின்றது.
அதிக மரங்கள் நடப்படுவதன் மூலமே மழையின் போது மழை நீரின் தாக்கம் மண்ணை பாதிக்காது மண்வளம் காக்கப்படுகின்றது.
இன்றைய கால கட்டத்தில் மரங்களின் நிலை
இன்று மரங்களை வளர்ப்பதற்கு பதிலாக மரங்களை பல்வேறு காரணங்களிற்காக அழித்து வருகின்ற நிலையையே காணக்கூடியதாக உள்ளது.
அதாவது அதிகரித்த சனத்தொகையின் காரணமாக இன்று மரங்களை அழித்து கட்டிடங்களை அமைக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன.
காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றனர். இதனால் வறட்சி, விலங்குகள் ஊருக்குள் புகுதல், அதிகரித்த வெப்பம், சூழல் மாசடைதல் என பல்வேறு வகையில் அழிவுகளே ஏற்படுகின்றன.
முடிவுரை
எம் உயிர் காக்கும் மரங்களை நாம் அழிக்காது பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமையாகும். நாம் அனைவரும் ஒரு மரத்தையாவது நட்டு சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை இன்றே எடுத்துக் கொள்வதோடு மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுதல் வேண்டும்.
You May Also Like: