மனித வாழ்வில் மிக முக்கியமானதொரு அங்கமாக மரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மரங்களே சிறந்த சூழலை உருவாக்குகின்றன. ஆனால் இன்று மனிதர்களின் தேவைகளின் பொருட்டு பல மரங்களை வெட்டுகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலை தொடர்ந்து கொண்டே போகுமேயானால் மனிதர்களால் இப்பூமியில் வாழ முடியாத ஒரு நிலையே ஏற்படும். நாம் சுவாசிக்கும் ஒட்சிசனானது மரங்களினூடாகவே கிடைக்கப் பெறுகின்றது.
இத்தகைய முக்கியத்துவம் மிக்க மரங்களை நாம் வெட்டுவதானது எமது உயிரை நாமே அழிப்பதற்கு சமமானதாகும்.
எனவேதான் எமது உயிரை காக்கின்ற மரங்களை பேணி பாதுகாப்பது எம் அனைவரது கடமையாகும் என்பதனை உணர்ந்து செயற்படுவதோடு மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வூட்டும் வாசகங்களினூடாக அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். அந்த வகையில் மரங்கள் பற்றிய வாசகங்களை பின்வருமாறு நோக்கலாம்.
மரம் பற்றிய வாசகங்கள்
மரத்தை நட்டு இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றுங்கள்.!
பூமியை காப்பாற்ற மரங்களை நடுங்கள்.!
ஒரு மரத்தையேனும் நட்டு உங்கள் பிள்ளைகளின் சுவாசத்திற்கு உதவுங்கள்.!
மாசற்ற சூழலை உருவாக்க மரத்தை நடுங்கள்.!
நீங்கள் ஒரு மரத்தை வெட்டினால் ஒரு உயிரை கொல்கின்றீர்கள்! நீங்கள் ஒரு மரத்தை காப்பாற்றினால் ஒரு உயிரை காப்பாற்றுகிறீர்கள்! மரத்தை நடுவோம் உயிர்களை காப்போம்.!
மரங்களே சுற்றுச் சூழலை தூய்மையாக்குகின்றன! மரங்களை பாதுகாத்து கொள்ளுங்கள், அது உங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளும்.!
இன்றே ஒரு மரத்தை நடுங்கள், அது நாளை நாம் சுவாசிக்க உதவும்.!
மரங்களே உலகின் நுரையீரல் மரங்களை வெட்டாதீர்கள்.!
மாசில்லா காற்றைப் பெற மரம் நடுவதே சிறந்த வழி.!
விலை மதிப்பற்ற இயற்கை வளமான மரங்களை பாதுகாப்பதே எமது கடமை.!
பசுமையை அழித்து இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.!
மரங்களே இயற்கையின் நகைகள்.!
மரங்கள் இயற்கையின் அருட்கொடை மரங்களால் பூமியை பசுமையாக்குவோம்.!
நேரத்தை வீணடிக்காதீர்கள்.! இன்றே மரங்களை நட்டு அழிவை நோக்கி செல்லும் பூமியை காப்பாற்றுகள்.!
மரங்களை நட்டு மகிழ்ச்சியான வாழ்வை வாழுங்கள்.!
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் சுற்றுச் சூழலை அழகாக்குவோம்.!
பறவைகளின் இல்லங்களே, மரங்களின் கிளைகள். அதன் இல்லங்களை காப்பாற்றுங்கள்.!
காகிதம் தரும் மரத்தை ஆயுதம் கொண்டு அழிக்காதே.!
இயற்கையின் அழகு மரம் அழியாமல் காப்பதே அறம்.!
மரங்கள் சுவாசிக்கும் போதே, எம்மால் சுவாசிக்க முடியும்.!
பூமியின் வேர்கள் மரங்களே.!
நமது சுவாசம் நிறுத்தப்படுவதற்கு முன் மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்துவோம்.!
மரங்களை நடுவோம்..! வரண்ட பாலைவனமான பூமியை சோலை வனமாக்குவோம்! வாருங்கள்.!
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.!
உங்கள் அன்பை மரங்களிடம் காட்டுங்கள் அது நீங்கள் நலமாக வாழ வழியமைக்கும்.!
உயிர் காக்கும் மரங்களின் உயிரை அழிக்காதீர்கள்.!
பூமியின் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்ச்சி தரும் மரம் வளர்ப்போம்.!
தண்ணீர் இல்லாமல் மீன்கள் வாழாது, மரங்கள் இல்லாமல் மனிதர்களாலும் வாழ முடியாது..! மரம் நடுவோம் சூழலை காப்போம்.!
நாளைய சந்ததி வளம் பெற, சூழலை பாதுகாக்க..! மரம் நடுவோம்.!!
மண்ணுக்கு மரம் தான் உரம்.! மழைக்கு மரம் தான் வரம்.! மனிதா மரத்தினை அழிக்கும் ஆயுதத்தை தூரஎறி.. மரத்தை வாழ விடு.!
மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரமே மரங்கள்.!
மரத்தை நட்டு வளமான வாழ்வை வாழ அனைவரும் இன்றே ஒன்றுபடுங்கள்.!
You May Also Like: