மழை என்பது இயற்கையின் ஓர் அம்சமாகும். அதாவது பூமியில் இருக்கும் நீரானது ஆவியாதல் மூலம் வளிமன்டலத்தை சென்றடைகின்றது. வளிமண்டலத்தில் இருக்கும் நீராவியானது ஒடுங்கி நீர்ம நிலையை அடைந்து பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கி விழுகின்றது. மழையின் வகைகளாக தூறல், மழை, ஆலங்கட்டி போன்றன காணப்படுகின்றன.
அத்தோடு நச்சு வாயுக்கள் வளிமண்டலத்திற்கு செல்வதனால் அமில மழையும் பெய்கின்றது.மேலும் இந்தியாவை பொறுத்தமட்டில் இரண்டு வகையான மழை பருவம் உள்ளது. அதாவது தென்மேல் பருவம், வடகீழ் பருவம் என்பனவாகும்.
மழை வேறு சொல்
- மாரி
- உறை
- ஆலி
- தூவல்
- திவலை
You May Also Like: