முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

muthamil arignar kalaignar katturai in tamil

அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஓர் உயர்ந்த ஆளுமை பெற்றவராகவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர் காணப்பட்டார்.

அதாவது இவர் தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா போன்ற துறைகளில் தேர்ந்தவராகவும், சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இளமைப் பருவம்
  • அரசியல் வாழ்க்கை
  • கருணாநிதி அவரகளது படைப்புகள்
  • இறப்பு
  • முடிவுரை

முன்னுரை

இந்திய அரசியல்வாதிகளுள் முக்கியமான ஒருவராகவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி காணப்படுகின்றார்.

அதாவது இவர் தமிழக முதல்வராக ஐந்து தடவை பதவி வகித்த மூத்ததொரு அரசியல்வாதியாகவும், பல்வேறு படைப்புக்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கியதொரு கலைஞராகவும் மதிக்கப்படுகின்றார். இக்கட்டுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களினைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இளமைப் பருவம்

1924 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் மூன்றாம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முத்துவேலார்- அச்சு அம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தவரே இந்த முத்துவேல் கருணாநிதி ஆவார்.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் கற்றார். பின்னர் தன்னுடைய உயர்கல்வியை திருவாரூர் உயர் நிலைப்பள்ளியில் பெற்றார்.

சிறுவயதிலிருந்தே இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வம் மிக்கவராக செயற்பட்ட இவர் 1940களில் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

முத்தமிழ் அறிஞர் கலைஞர் என போற்றப்படும் கருணாநிதி அவர்கள் தன்னுடைய 14வது வயதில் அரசியல் சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கல்லக்குடி போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

1969 தொடக்கம் 2018 வரைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக விளங்கியதோடு, 1969, 1971, 1986, 1996, 2006 போன்ற ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராகவும் கடமையை ஆற்றியுள்ளார்.

மேலும் இலவசக் கல்வி, சுகாதாரம், ஏழைகளுக்கான உணவு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு முற்போக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளமையும் இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

கருணாநிதி அவர்களது படைப்புகள்

தமிழ் இலக்கியங்களுக்கு முத்துவேல் கருணாநிதி அவர்களுடைய பங்களிப்பு மகத்தானதாகும். அதாவது 20 நாடகங்கள் 15 நாவல்கள், 210 கவிதைகள் 15 சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளமையோடு திரைப்பட உலகிலும் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.

அதாவது சிலப்பதிகாரம், அனார்கலி உதயசூரியன் போன்ற நாடகங்களும், பாலைவன ரோஜாக்கள், புதிய பரவசம், பராசக்தி, காவல் கைதிகள், தூக்கு மேடை போன்ற இவர் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கதாகும்.

இறப்பு

முத்துவேல் கருணாநிதி அவர்கள் 2016 ஆம் ஆண்டில் சுவாசக் கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கும் நிலையில், சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சலில் பிடிக்கப்பட்டார்.

அத்தோடு அவரது வயது காரணமாகவும் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டது. இவ்வாறாக காய்ச்சலினால் பிடிக்கப்பட்டு இருந்த இவரை அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் கவனித்து வந்த போதும், சிகிச்சை பலன் இன்றி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி இம்மண்ணை விட்டு பிரிந்தார்.

முடிவுரை

முத்துவேல் கருணாநிதி அவர்கள் இந்திய வரலாற்றில் தலைசிறந்த ஓர் அரசியல்வாதியாக திகழ்து மற்றுமின்றி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய இவரது சாதனைகளும், பங்களிப்புகளும் எப்போதும் நினைவு கூறப்பட வேண்டியனவாகும்.

You May Also Like:

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை

மாணவர் ஒழுக்கம் கட்டுரை