மொழிபெயர்ப்பு என்றால் என்ன

mozhipeyarpu in tamil

தொடர்பாடலின் சிறந்த ஊடகமாக மொழி காணப்படுகின்றது. இந்த உலகில் வாழ்கின்ற அனைவராலும் அனைத்து மொழியிலும் தொடர்பாடலை மேற்காள்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்காது இந்த சந்தர்பத்திலேயே மொழி பெயர்ப்பினது தேவை அவசியமாகின்றது.

அதாவது மற்றவர்களது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை எமக்கு பரிச்சயமான மொழியில் நாம் இலகுவாக புரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பானது துணைபுரிகின்றது.

மொழிபெயர்ப்பு என்றால் என்ன

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் காணப்படுகின்ற செய்திகள், கருத்துக்கள், இலக்கியங்கள், புத்தகங்கள் என பல் துறைசார்ந்தவற்றை பிறிதொரு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும்.

அதாவது தமக்கு பரிச்சயம் இல்லாத மொழியில் காணப்படுகின்றவற்றை தமக்கு பரிச்சயமான மொழியில் மாற்றுவதனை மொழி பெயர்ப்பு எனலாம்.

மொழிபெயர்ப்பின் அவசியம்

கருத்துக்களை பரப்புவதற்கு மொழி பெயர்ப்பானது அவசியமாகின்றது.

பிறிதொரு மொழியில் காணப்படுகின்ற அரசியல் ரீதியான, வணிக ரீதியான, கருத்துக்களை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அனைவரிடத்திலும் கருத்துக்கள் சென்றடைவதற்கு மொழி பெயர்ப்பானது அவசியமாகின்றது எனலாம்.

விளையாட்டு குழுக்கள் தம் விளையாட்டு திட்டங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு மொழி பெயர்ப்பானது துணைபுரிகின்றது. சர்வதேச ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவசியமாக காணப்படுகின்றது.

வெளிநாட்டில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வணிக ரீதியான செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வற்கும் மொழிபெயர்ப்பானது அவசியமானதொன்றாகும்.

ஒரு நிறுவனமானது தனது இலக்குகள், நோக்கங்களை விரிவுபடுத்தி உலகளாவிய நிறுவனங்களை ஈர்த்து பல்வேறு இலாபங்களை ஈட்டிக்கொள்வதற்கு மொழிபெயர்ப்பானது துணைபுரிகின்றது.

மதங்கள் பற்றிய தெளிவான அறிவினை பெற்றுக் கொள்ளவும் அவசியமாகின்றது என்பதனை குறிப்பிடலாம். உதாரணமாக கிறிஸ்தவ மத புனித நூலான பைபிள் ஆனது 531 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு காணப்படுகின்றது. இதன் மூலமாக கிறிஸ்தவ மத பரவல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும்பாலான மக்கள் தங்களுடைய சொந்த மொழியினை விரும்புகிறார்கள் ஏனெனில் அது அவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளதோடு அவர்களுடைய நம்பிக்கையினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனாலேயே மொழிபெயர்ப்பானது அவசியமாக காணப்படுகின்றதோடு மக்கள் மிகவும் துள்ளியமாக தொடர்புகளை மேற்கொள்ளவும் துணையாக நிற்கின்றது.

இன்றைய காலகட்ட மொழி பெயர்ப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு

இன்றைய காலகட்டத்தில் மொழி பெயர்ப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கானது மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பல்வேறு மொழிகளில் உள்ளவற்றை பிறிதொரு மொழியில் மொழி பெயர்ப்பதற்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் காணப்பட்டாலும் இன்று இவர்களுடைய வேலையினை பல்வேறு சாதனங்கள் மேற்கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் உதாரணமாக Google translate இனை குறிப்பிடலாம். இதனூடாக எமக்கு பரிச்சயமில்லாத மொழியினை கூட இலகுவாக எமக்கு பரிச்சயமான மொழியில் மாற்றுவதற்கு துணை புரிகின்றது.

இன்றைய சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பம் இல்லாது மொழி பெயர்ப்பாளர்களின் செயற்பாடுகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு நிலை இன்று காணப்படுகின்றது.

இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது ஒரு நாட்டில் உள்ளவர் பிறிதொரு நாட்டவருடன் சமூக வலைத்தளங்களினூடாக தொடர்பாடலை மேற்கொள்ளும் போது தமக்கு பரிச்சயமான மொழியின் ஊடாக தொடர்பாடலை மேற்கொள்ள முடிகின்றது.

மேலும் எமக்கு தேவையான வேறு மொழியில் உள்ள அறிவியல் நூல்களையும் இலகுவாக எமது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு பெற்றுக்கொள்ள முடிகின்றது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒன்லைன் தானியங்கி என்ற மொழி பெயர்ப்பு அமைப்புக்கள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ரோபோக்களின் மூலமாகவும் மொழி பெயர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மொழி பெயர்ப்பானது அதிகளவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிநூடகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You May Also Like:

புதுக்கவிதை என்றால் என்ன