விளம்பரம் என்றால் என்ன

vilambaram enral enna

விளம்பரம் என்றால் என்ன

ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை மனிதனானவன் பொருளீட்டல் வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றான். அந்த வகையில் தனது பொருளீட்டல் வழிமுறையில் தன்னுடைய தயாரிப்புக்களை பற்றி பிறருக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாக விளம்பரப்படுத்தலை மேற்கொள்கின்றான்.

விளம்பரப்படுத்தல் செயன் முறையானது ஆரம்ப காலம் தொட்டே நடைமுறையில் இருந்துள்ளது.

விளம்பரம் என்றால் என்ன

விளம்பரம் என்பது ஒரு நிறுவானமானது தனது வருமானத்தை ஈட்டுவதனை நோக்கமாக கெண்டு மக்கள் அறிந்து கொள்ளும் படி செயற்படும் ஒரு யுத்தியே விளம்பரம் எனலாம். விளம்பரமானது மக்களது கவனத்தை ஈர்க்க கூடியதாகவே காணப்படும்.

விளம்பரம் என்பது பொதுவாக ஒரு நிறுவனமானது முதலீட்டை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்துகின்ற தயாரிப்பு அல்லது சேவை பற்றிய விபரத்தினை விளம்பரமாக கொள்ளலாம்.

ஒன்றைப்பற்றிய அறிமுகப்படுத்தலை மேற்கொள்வதனையும் விளம்பரம் எனலாம்.

விளம்பரத்தின் நோக்கம்

விற்பனையை அதிகரித்து இலாபம் ஈட்டுவதனை நோக்கமாக கொண்டு விளம்பரப்படுத்தலானது இடம்பெறுகின்றது. ஒரு நிறுவனமானது தனது விற்பனைப் பொருட்களைப்பற்றிய விளம்பரத்தினை மேற்கொள்கின்றபோது வாசகர்கள் அதிகமானோரை அதன் மூலம் ஈட்ட முடிகின்றது.

நுகர்வோர்களின் தேவைகளை அதிகரிப்பதனையும் விளம்பரப்படுத்தலானது தன்னுடைய நேக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது எனலாம். அதாவது உற்பத்தி பொருட்களை வாங்குபவார்களின் எணிணிக்கையினை அதிகரிக்க முடியும்.

விளம்பரப்படுத்தலின் நோக்கமாக ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விளம்பரப்படுத்தலினால் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து எமது நாட்டில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து கொள்ள முடியும். இதனுடாக பொருளாதார ரிதீயில் நாட்டினை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

சிறந்த சேவையினை மக்களிடம் கொண்டு சென்று அதனுடாக சிறந்த சேவையினை ஏற்படுத்தி கொடுக்கவும் விளம்பரப்படுத்தல் துனைணபுரிகின்றதோடு விற்பனைக்கு வந்துள்ள பொருட்களை அறிமுகம் செய்தலையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களுக்கு நுகர்வு பொருளானது இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் இந்த விளம்பரபடுத்தலானது அமைகின்றது. இவ்வாறாக விளம்பரப்படுத்தலின் மூலம் சிறந்த முறையில் சேவைகளை வழங்குவதோடு மாத்திரமல்லாமல் இலாபத்தினையும் ஈட்டிக் கொள்ள முடியும்.

சமூக ஊடகங்களும் விளம்பரமும்

விளம்பரப்படுத்தலின் பிரதான ஊடங்களாக சமூக ஊடகங்களே காணப்படுகின்றது. சமூக ஊடகங்களினுடாகவே இன்று விளம்பரங்கள் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரம்ப காலங்களில் வாய்மொழியினூடாகவும் விளம்பரப்படுத்தலானது இடம்பொற்றிருக்கின்றது. பின்னர் சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் செய்தித்தாள்களினூடாகவும் விளம்பரங்கள் இடம்பொற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய சூழலில் விளம்பரங்களானவை சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் என பல்வேறு சமூக ஊடகங்களினூடாக விளம்பரப்படுத்தலானது இடம் பெறுகின்றது.

ஏனெனில் ஆரம்பத்தில் துண்டுபிரசுரங்களின் மூலம் இடம் பெற்ற விளம்பரப்படுத்தலானது தற்காலங்களிலும் காணப்படுகின்ற போதும் அத்தகைய விளம்பரங்களை விட இன்று இணையம் மூலமாக அதாவது சமூக வலைத்தளங்களினூடக இடப்படும் விளம்பரங்களிலேயே அனைவருடைய கவனமும் ஈர்த்து செல்லப்படுகின்றது.

ஏனெனில் இக்காலத்தில் புத்தகங்கள், சுவவெரட்டிகள், செய்தித்தாள்கள் என அச்சிடப்பட்டவைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட சமூக ஊடகங்களுக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களினூடாக விளம்பரங்களை மேற்கொள்வதானது குறுகிய நேரத்தில் அனைவருக்கும் சேரக்கூடியதாகவும் விற்பனையினை இலகுவாக அதிகரிக்ககூடியதாகவும் இருப்பதோடு வாசகர்களின் கவனத்தினை ஈர்த்து அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் அமைந்துள்ளது.

எனவேதான் விளம்பரங்களை மேற்கொள்வதனூடாக நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடிகின்றது.

You May Also Like:

பொடுகு வர காரணம் என்ன