வேதம் என்றால் என்ன

வேதங்கள் என்பது மிகப் பழமையானதாகும். வேதங்கள் எழுதப்படாதது என்று கூட கூறலாம். இந்த வேதங்களை “எழுதாக் கற்பு” என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வேதங்களானவை உலகம் தோன்றும் முன்பே தோன்றி விட்டன. வேதங்களில் ரிக் வேதம், அதர்வ வேதம், யசூர் வேதம், சாமவேதம் என நான்கு வேதங்கள் உண்டு.

தமிழில் வேதத்தை “நான்மறை” என்பர். வேதம் என்ற சொல் “வித்” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உதயமானதாகும். இந்த வேதத்தை யார் படைத்தார் என எல்லோருக்கும் சந்தேகம் எழுவது இயல்பான ஒன்றாகும்.

வேதம் என்றால் என்ன

வேதம் என்றால் அறிவு எனப் பொருளாகும். அறிவின் உறைவிடம் இறைவனாகும். இறைவனிடம் இருந்து நாக வடிவில் தோன்றிய அறிவை ரிஷிகள் மன ஒருமைப்பாட்டுடன் தரிசித்தனர். அதை அவர்கள் சீடர்களுக்கு நல்கினர். இவ்வாறு பரமாத்மாவிடமிருந்து தோன்றியதும் ரிஷிகள் தரிசித்ததுமான வானதன உண்மைகளையே வேதம் என்கின்றோம்.

இறைவனிடம் இருந்து கேட்டதாலும், வார்த்தைகள் மூலம் தரிசித்ததாலும் வேதத்தை சுருதி என்கின்றோம். இறைவன் மற்றும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்டவை வேதங்களில் அடங்கி இருக்கின்றன. அவை ஏதோ ஒரு மனிதன் படைத்ததல்ல பரமாத்மாவிலிருந்து தோன்றிய நிலையான சத்தியங்களாகும். அதனால் வேதங்களை அபாருஷேசம் என்பர்.

இந்த வேதங்களே இந்துக்கள் முடிவான பிரமானம் சனதன தர்மத்தில் எல்லா சாஸ்திரங்களுக்கும், வித்தைகளுக்கும் அடிப்படையாகத் திகழ்கின்றது.

வேதங்கள் கூறும் நான்கு நிலைகள்

ஒரு மனிதன் வாழும் நிலைகளை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர். அவையாவன,

  1. பிரம்மச்சர்யம்
  2. க்ரஹஸ்தனம்
  3. வனபரஸ்தம்
  4. சன்யாசம்

பிரம்மச்சர்யம்

கற்றுத் தேர்ந்து குருமுகமாக ஞான நிலையை அடைவது பிரம்மச்சர்யம் ஆகும். பண்டைய பாரத தேசத்தில் மாணவர்கள் குறிப்பிட்டதொரு வயதில் குருகுலத்தில் சேர்க்கப்படுவர்.

அங்கு அவர்கள் குருவுடனேயே தங்கியிருந்து அறிவியல் ஞானம், தத்துவ ஞானம், சாஸ்திர ஞானம், தன்னடக்கப் பயிற்சி, தர்மநெறி போன்றவற்றைக் கற்றுக் கொள்வர்.

குருகுவத்தில் சேர்வதற்கு முன்னர் உபநயணமும், குருகுலத்தில் தேர்ச்சிபெற்று வெளிவரும் போது சமாவரத்தனமும் மேற்கொள்ளப்படும்.

கிரகஸ்தம்

உலக வாழ்வில் ஈடுபட்டு மனைவியுடன் வாழ்ந்து தனக்கு மட்டும் பயன் தேடிக் கொள்ளாது தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னை நாடுபவர்களுக்கும் உதவுவது கிரகஸ்தம் ஆகும்.

வனபரஸ்தம்

தாமரை இலைத் தண்ணீர் போது வாழ்வது வனபரஸ்தம் நிலையாகும். ஆசைகளையும், பாசங்களையும் ஒழித்து கடமைகளை மட்டும் செய்து பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு தன்னுள் இருக்கும் தெய்வத்தை வெளிக்கொணரும் வழி என்ன என்பதனை மனிதன் யோசிக்கும் நிலை வனபரஸ்தம் நிலையாகும்.

இந்நிலையை அடைந்தவர்கள் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விட்டு முழுமையாகத் தவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். கடமைகளை எல்லாம் முடித்த பின்னரே வனபரஸ்த நிலையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.

சன்யாசம்

குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் தவம் மனநின்மதியை அடைவதற்காகவும், அடைந்திருக்கும் இறுதி நிலை சன்னியாசம் ஆகும். சன்யாசி உலகில் இருந்து வேறுபட்டு உலகைப் பார்க்க வேண்டும். தன்னில் இருந்து முழுவதுமாய் விடுபட வேண்டும். விருப்பு, வெறுப்பு, கோப தாபங்கள் இல்லாது இருக்க வேண்டும். இவையே வேதங்களில் கூறப்படும் நான்கு நிலைகளுமாகும்.

You May Also Like:

நற்செயல் என்றால் என்ன

ஏகாதசி என்றால் என்ன