ஊடகம் என்றால் என்ன

oodagam enral enna in tamil

ஊடகம் என்றால் என்ன

ஒரு தகவலை அல்லது கருத்துக்களை பிறரிடம் பரிமாறிக் கொள்வதற்கான அல்லது ஊடுகடத்துவதற்கான சாதனங்களே ஊடகம் என்று அழைக்கப்படுகின்றது. ஊடகம் என்பது வெவ்வேறுபட்ட இரு தரப்பினருக்கு இடையில் ஒரு தொடர்பாடலை அல்லது தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இன்றைய நவீன யுகத்தில் மனித நாகரீகம் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் தகவல்களை விரைவாக பரிமாற்றிக் கொள்வதற்காக தற்போது பல ஊடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களின் வகைகள்

தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் விடயங்களின் அடிப்படையில் ஊடகங்கள் இரு வகைப்படுத்தப்படுகின்றன. தனிப்பட்ட தேவைக்கான ஊடகம், பொது நலனுக்கான ஊடகம் என்பன அவையாகும்.

1. தனிப்பட்ட தேவைக்கான ஊடகம்

தனிப்பட்ட ஊடகம் எனப்படுவது தனிப்பட்ட ரீதியில் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றிக்கொள்ள பயன்படுத்துபவை ஆகும். தபால் அஞ்சல், தொலைபேசி, தந்தி, மின்னஞ்சல், உடனடி செய்தி நெட்வேர்க்குகள் போன்றன அவற்றுக்கு உதாரணமாகும்.

2. பொது நலனுக்கான ஊடகம்

பொது நலனுக்கான ஊடகங்கள் “வெகுஜன ஊடகங்கள்” எனும் பெயராலும் அழைக்கப்படுகின்றது. இவை பெரிய அளவிலான வலையமைப்புடன் பாரிய தகவல்களை பரந்தளவு தேச மக்களுக்கு வழங்குவதோடு பரிமாற்றமும் செய்து கொள்கின்றன. இவை முற்று முழுதுமாக பொது மக்களுக்கான ஊடகம் ஆகும்.

இவை தவிர தளம் அத்துடன் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தும் வடிவத்தை பொறுத்து பல வகைப்பட்ட சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன.

அச்சிடப்பட்ட ஊடகம்

அச்சிடப்பட்ட ஊடகங்கள் எனப்படுபவை தகவல்களைப் பரிமாற்றிக் கொற்வதற்கான பொருள் ஊடகமாக தொழிற்படுகின்றன. இத்தகைய தகவல் தொடர்பு கொள்வதற்கான பழமையான வழிமுறையாக இருப்பினும் இன்று வரை மக்களிடையே வழக்கத்தில் காணப்படுகின்றது. செய்தி தாள்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் போன்றன அவற்றுக்கு உதாரணங்கள் ஆகும்.

வானொலி ஊடகம்

வானொலி ஊடகம் என்பது ரேடியோ தகவல் தொடர்பு ஆகும். அதாவது ஒலிச் சமிக்ஞைகள் மூலம் தகவல்களை அனுப்ப வானொலி அலைகளைப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. வானொலிக்கு உடனடியாக தகவல்கள் மக்களிடம் சென்றடைதல், சிறந்த வினைத்திறன் மற்றும் குறைந்தளவிலான உற்பத்தி செலவுகள் போன்ற மூலக் காரணங்களால் வானொலி பத்திரிகையை விட மக்களிடம் ஆதரவினைப் பெறுகின்றது.

தொலைக்காட்சி

உலகில் உள்ள எல்லா இடங்களிலும் அனைத்து மககளும் பயன்படுத்தும் மிகமிக பிரபலமான சமூக ஊடகமாக தொலைக்காட்சி விளங்குகின்றனது. இத்தகைய தொலைக்காட்சிகள் சுகாதாரம், கல்வி, கருத்துக்கள்,  பொழுதுபோக்கு, புனைகதைகள், தகவல்கள், ஆவணப்படங்கள் போன்ற பல தகவல்களை மக்களிடையே இலகுவான முறையில் வழங்குகின்றன.

டிஜிட்டல் ஊடகங்கள்

டிஜிட்டல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணினி மற்றும் அறிவியல் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களினது வளர்ச்சி பெற்ற ஊடகங்கள் ஆகும். கூகுள், யாகூ போன்ற தேடற்பொறிகள், வலை ஒளி, நெட்ஃபிக்ஸ், சவுண்ட்க்ளுட், Spotify, போன்றன அவற்றுக்கு சில உதாரணங்கள் ஆகும்.

சமூக வலைத்தளங்கள்

அதாவது தனிப் பயனாக்கப்பட்ட செய்திகளை அனுப்புதற்கு அனுமதிக்கும் தளங்கள் இவையாகும். கூபுள்பிளஸ், ஸ்னாப்சட், டுவிட்டர், முகநூல், மெசஞ்சர், தந்தி போன்றன அவற்றுக்கு உதாரணங்கள் ஆகும்.

ஊடகங்களின் நன்மைகள்

  • தொலை தூரத்தில் இருப்பினும் தொடர்பாடலின் தூரம் குறைவாக காணப்படுதல்.
  • கலாசார இடைவெளி குறைக்கப்படுதல்.
  • தகவல்கள் உடனக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • மூலதன செலவு குறைவு.
  • தொலைக்கல்வி, தொலை மருத்துவ வசதி.

ஊடகங்களின் தீமைகள்

  • நேரடி தொடர்பு குறைவடைதல்
  • தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் ஊடகங்கள் தோல்விக்குள்ளாதல்.
  • அதிக நேரம் சமூக ஊடகங்களில் ஈடுபட்டு அடிமையாதல்.
  • தகவல்களினது உண்மைத்தன்மை குறைவு.
  • கையாள்வது கடினம்.

You May Also Like:

புவிசார் குறியீடு என்றால் என்ன

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன