காவியம் என்றால் என்ன

காவியம்

இலக்கிய உலகில் தனிச்சிறப்பிடத்தினை பெற்றுள்ள காவியம் செவ்விலக்கிய வகைகளில் அடங்குகின்றது. “காவியம்” என்ற சொல் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்திலேயே காணப்படுகிறது.

செய்யுள், உரைநடை, தூது நூல், நாடகம், பெருங்காப்பியம் என பல வடிவங்களில் அமைந்திருந்தாலும் அவற்றைக் காவியம் என்று அழைக்கும் முறை வடமொழியில் உள்ளதால், காவியம் என்ற சொல் அம்மொழியில் விரிந்த பொருளுடன் விளங்குகிறது எனலாம்.

இலக்கியப் படைப்பினை “மகா காவியம்” என்று வடமொழியில் கூறப்படுகின்றது. பாமகர் எழுதிய ‘காவ்யாலங்காரம்’ என்னும் நூலில் மகா காவியம் பற்றி கூறப்படுகிறது. இதன் பின்னர் தண்டியின் ‘காவ்யாதர்சம்’ இவ்விலக்கணத்தைச் சற்றுச் செம்மைப்படுத்தி வழங்கியது.

தண்டியின் இவ்வடமொழி நூல் தமிழில் தண்டியலங்காரம் எனப் படைக்கப்பட்டது. வடமொழியில் காவியம் என வழங்கப்படுவதற்கு மாற்றாகத் தமிழில் காப்பியம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக, சமய, அரசியல் வரலாற்றை அல்லது வரலாறாக நம்பப்படுவதையோ பாடு பொருளாக காப்பிய இலக்கியங்கள் கொண்டுள்ளன. காப்பியங்கள் ஒரு வகைச் செய்யுளோ அல்லது பலவகைச் செய்யுளாகவோ அமையலாம்.

தமிழ் இலக்கிய உலகில் வீர யுகத்தின் பின்னரே காப்பிய காலம் தொடங்ககின்றது. இதற்கு வித்திட்டவர் இளங்கோவடிகள் ஆவார். இவர் இயற்றிய சிலப்பதிகாரமே தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும்.

இவை தவிர உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டு காவியம் என்ற இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருப்பதனைக் காண முடிகின்றது. கிரேக்கம், இலத்தீன், பாபிலோனியம், முதலான பழமை வாய்ந்த மொழிகளிலும், மேலும் ஹோமர், செக் மொழி, ஷானாமா, மெக்கா, டச்சு போன்ற மொழிகளிலும் காப்பியங்கள் பல எழுந்துள்ளன.

காவியம் என்றால் என்ன

கா+இயம் = காப்பியம் எனப் பொருள்படும். வடமொழியில் “காவ்யா” என்ற சொல்லுக்கு பாட்டு என்பது பொருளாகும். காவியால் படைக்கப்படுவன அனைத்தும் காவியமே எனலாம். காவ்யா என்ற சொல் காவியம் என்றும் பின் காப்பியம் எனவும் ஆனது.

மேலும் காப்பு, இயம் என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாக கருதப்படுகின்றன. பழ மரபுகளை காப்பது காப்பியம் எனலாம்.

பெருங்காப்பியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருட்களைக் கொண்டு எண்ணற்ற கிளைக் கதைகளையும், பலவகை வர்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு கதையினைக் கொண்டமைந்ததே பெருங்காப்பியமாகும். பெருங்காப்பியங்களில் அதிகளவிலான செய்யுள்கள் இடம்பெறும்.

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களாக சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியவை காணப்படுகின்றன.

தமிழில் தொல்காப்பியமானது காப்பிய குடி, வெள்ளூர் தொல்காப்பியர், காப்பிய சேர்த்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

ஐஞ்சிறு காப்பியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு, பேறு ஆகிய நான்கு பெரும் விடயங்களில் ஒன்றிரண்டு மட்டும் அமையப்பெற்று கிளைக் கதைகள் குறைவாகவோ அல்லது கிளைக்கதை இல்லாமலோ பல வகை வர்ணனைகள் குறைவாகவோ அமைபவை சிறு காப்பியங்கள் ஆகும்.

உதயகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்துமே தமிழில் ஐஞ்சிறு காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. ஐஞ்சிறு காப்பியங்களின் இலக்கண நூல் தண்டியலங்காரமாகும்.

You May Also Like:

புதுக்கவிதை என்றால் என்ன