இந்த உலகில் வாழுகின்ற அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியமானதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5ம் திகதி சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் சூழலானது பல்வேறு காரணங்களால் மாசடைந்து கொண்டு வருகின்றது. அதாவது அதிகரித்த சனத்தொகையின் காரணமாக வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக பசுமையான இயற்கையை அழிக்கின்றனர்.
இதன் காரணமாக மனிதனானவன் அழிவின் பாதையை நோக்கியே நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றான். இயற்கை என்பது எமக்கு கிடைக்கப்பெற்ற வரம் அதனை பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமை என்பதனை மனதில் நிலைநிறுத்தி செயற்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்
சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதை நிறுத்துவதன் மூலமாகவே எமது பூமியை காத்துக் கொள்ள முடியும்!
மரம் நடுவோம்..! பூமியை காப்போம்!
இயற்கையை நேசிக்க தெரியாதவர்களால் இந்த உலகில் யார் மீதும் அன்பு செலுத்த முடியாது.
இயற்கையை வளர்ப்போம்..! நம் கிரகத்தை காப்பாற்றுவோம்.
மரங்கள் உலகின் நுரையீரல், பூமியை காப்பாற்ற அதிக மரங்கள் நடுவோம்.
இயற்கையை காப்பாற்றுங்கள், அதற்கு இன்றே ஒரு மரத்தையேனும் நடுங்கள், அது நாளை நாம் சுவாசிக்க உதவும்.
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்..! நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்போம்..!
மாசு இல்லா காற்றை பெற மாசற்ற சூழலை உருவாக்குவோம்..!
இயற்கையின் அழகை பாதுகாப்பதே சுகாதாரமான வாழ்விற்கு வழிகாட்டியாகும்.
நீங்கள் ஒரு மரத்தை வெட்டினால் ஒரு உயிரை கொல்கிறீர்கள், நீங்கள் ஒரு மரத்தை காப்பாற்றினால் ஒரு உயிரை காப்பாற்றுகிறீர்கள்..! மரத்தை நடுவோம்..! வாழ்வை காப்போம்..!
மரங்களை நட்டு மனிதநேயத்தை காட்டுங்கள்..! இந்த உலகம் தூய்மை பெறும்.!
சிறந்த சுற்றுச்சூழல் சிறப்பான எதிர்காலத்தின் துவக்கமாகும்.
நிலையான வாழ்க்கையை வாழ்வதற்கு மாசற்ற சுற்றுப்புறச் சூழலை உருவாக்குவோம்.
நமது சுவாசம் நிறுத்தப்படும் முன் சூழல் மாசுபாட்டை நிறுத்துவோம்.
பூமியை மாசுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்..! எம் அனைவரினதும் உயிரையும் காத்துக்கொள்வோம்.
மரங்கள் என்பது எம் அனைவருடையதும் வாழ்க்கை..! மரங்களை வெட்டி வாழ்க்கையை அழிக்காதீர்கள்..!
எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்விற்கு பசுமையை பேணுவோம்.
புத்துணர்ச்சியுடன் வாழ்வதற்கும், பசுமையை சேர்க்கவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது முக்கியமானதாகும்.
பூமி எமது வீடு சுற்றுச்சூழல் அதன் கூரை இரண்டையும் காப்பாற்றுங்கள்.
மாசற்ற சூழல் பூமியின் ஆன்மாவாகும்..! அதனுடன் சமரசம் செய்யாதீர்கள்.
வாழ்க்கையை எமக்களிக்கும் சுற்றுச்சூழலை அழிப்பது மன்னிக்கமுடியாத ஒரு குற்றமாகும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையே காரணம்..! அதனை பராமரிப்பது அனைவரினதும் கடமையாகும்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவணைகளை தவிர்ப்பதே சுற்றுச்சூழலின் தூய்மையை பாதுகாக்கும்.
இயற்கையாக கிடைக்கப்பெற்ற அருட்கொடையை அழிப்பது எமது உயிரை நாமே அழிப்பதற்கு சமம்.
மாசற்ற சூழலே மன அழுத்தத்தை குறைக்கும்.
சுத்தமான காற்றினைப் பெற மரங்களை காப்போம்..! அது எம் அனைவரதும் உயிரை காக்கும்..!
மாசற்ற சூழலே மனித வாழ்வின் உயிர் நாடியாகும்..!
தினமும் ஒரு மரத்தை நட்டு வாழ்க்கையை வளப்படுத்துங்கள்..!
மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழும்போதே சுற்றுச்சூழலும் அவனது வாழ்வும் அழகாக மாறும்.
வளமான வாழ்வினை வாழ்வதற்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பேணி பாதுகாப்போம்.
You May Also Like: