ஜனநாயக நாட்டின் அடிப்படையே தேர்தலாகும். இத்தேர்தல் நடவடிக்கைகள் பக்கசார்பற்றதாகவும் சிறந்ததாகவும் அமையும் போதே ஒரு நாடானது ஜனநாயகமிக்க நாடாக திகழும். தேர்தல்களின் மூலமாகவே சர்வதிகார ஆட்சியை இல்லாது செய்ய முடியும்.
அனைத்து மக்களும் தனது உரிமையை சரியாக பிரயோகப்படுத்துகின்ற ஒரு இடமாகவே தேர்தல் காணப்படுகின்றது.
இத்தகைய தேர்தல் காலப்பகுதியை சரியாக பயன்படுத்தி நாட்டிற்கு சிறந்த தலைவரை தேர்ந்தெடுத்தல் என்பது எம் அனைவருடைய கடமையாகும். இதனை சரிவர நிறைவேற்றும் போதே ஒரு நாடானது சிறந்த ஆட்சியை நோக்கி செல்லும்.
நாட்டின் தலையெழுத்தை மாற்றும் அதிகாரம் மக்களின் கைகளிலேயே இருக்கின்றது என்பதனை உணர்ந்து விழிப்புணர்வுடன் வாக்காளர்கள் செயற்பட வேண்டும். இதனூடகவே சிறந்த அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும்.
ஒவ்வொரு குடிமகனும் தனது வாக்குரிமையை முறையாக பயன்படுத்துவதின் ஊடாக மாத்திரமே சிறப்பான ஆட்சி முறையை கொண்டு வர முடியும். இதுவே நாளை எம்மை சிறப்பாக வாழவைக்கும். தேர்தல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியமானதாகும். அந்த வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை இந்த பதிவில் நோக்கலாம்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
வாழ்வுரிமையை காக்க வாக்களிப்போம்! ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்த வாக்களிப்போம்..!
அனைவரும் சரியாக பயன்படுத்தும் ஒரு சிறந்த உரிமையே வாக்களிப்பு.!
நமது வாக்கு! நமது உரிமை.!
வாக்கை விற்று எதிர்காலத்தை அழிக்காதீர்கள்..!
நல் வாக்களிப்போம், அதை நல்ல ஆட்சியாளருக்கே அளிப்போம்..!
மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்..! அச்சமின்றி உற்சாகமாக வாக்களிக்கும் நேரம் இது.!!
ஏழையோ! பணக்காரனோ! உங்கள் வாக்கு உங்கள் கைகளிலேயே வாக்களியுங்கள்.!
சரியான வாக்களிப்பு நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.!
உங்கள் வாக்கு! உங்கள் குரல்.!
நல்ல நாளைக்காக அச்சமின்றி வாக்களியுங்கள்..!
விழிப்புள்ள வாக்காளர், தேசத்தின் எதிர்காலத்தை எழுதுகின்றார்.!
ஒரு புன்னகையை கொடுத்து! சத்தமாக உற்சாகப்படுத்துங்கள், நான் வாக்களிக்க பெருமைப்படுவேன் என்று!
கடந்த காலத்தை நினைவில் வைத்து! எந்த விலை கொடுத்தாலும் உங்கள் வாக்கை சிறந்த நளையை எண்ணியே வாக்களியுங்கள்.!
உங்கள் வாக்கு..! உங்கள் குரல் அதை அடக்கி விடாதீர்கள்!!
வாக்கு சதவீதம்..! மக்களின் விழிப்புணர்வே!!
ஜனநாயக தேர்தலே..! அரச தேர்வுக்கான நியாயமான வழி!!
தேர்தலே! ஜனநாயகத்தை பாதுகாக்கின்றது, ஜனநாயகம் மக்களிற்கு சுதந்திரத்தை அளிக்கின்றது.!!
ஒரு வாக்கு தேசத்தின் போக்கையே மாற்றும்..! வாக்களிக்க மறக்காதீர்கள்.!!
ஜனநாயகத்தின் முக்கிய பண்டிகையே தேர்தல்! ஒரு நிமிடம் வாக்களிக்க நேரம் ஒதுக்குங்கள்..! உங்கள் சக்தியை காட்டுங்கள்.!!
சரியான அரசை தேர்ந்தெடுக்க சரியான முடிவை எடுங்கள்..!
தேசத்தின் வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்..!
உங்களுக்கு பார்வை இருந்தால்..! நாட்டுக்காகவே வாக்களியுங்கள்..!
தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதமே வாக்கு.!
ஊழல் வாய்ந்த அரசை தூக்கி எறிய சிறந்த வழி வாக்களிப்பதே.!
வாக்குரிமையே சமூதாய மேம்பாட்டிற்கு சிறந்த வழி.!
நாட்டிற்காக போடு ஓட்டு..! அதற்கு வாங்காத நோட்டு.!
சிந்தித்து வாக்களியுங்கள்..! சிறப்பாக வாழ்வீர்கள்.!
வாக்களிப்பது கடமை..! அதுவே எமது உரிமை..!
நியாயமாக வாக்களிப்போம்..! நிம்மதியான ஆட்சிக்கு வழிவகுப்போம்..!
சுதந்திரமாக வாக்களிப்போம்..! ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்துவோம்..!
மனம் உகந்த வாழ்விற்கு மனசாட்சிப்படி வாக்களிப்போம்.!
நம் ஒரு விரல் புரட்சியே..! நமது நாட்டின் தலையெழுத்தை மாற்றும்.!
You May Also Like: